- Tuesday
- November 26th, 2024
சகமிஹரா நகரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய ஜப்பனீஸ் முதியோர் இல்லத்தில், கையில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை வெறித்தனமாக தாக்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜப்பான் நாட்டில் கனகவா மாகாணத்தின் சகமிஹரா நகரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய ஜப்பனீஸ் முதியோர் இல்லத்தில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் உள்ளே...
சீனாவில் தற்போது பெய்து வரும் கன மழையில் 225 பேர் பலியாகிவுள்ளதாகவும் மத்திய ஹீ பெய் மாகாணத்தில் 2.5 இலட்சம் பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மற்றும் மத்திய சீனாவில் இடைவிடாது பெய்த மழையில் ஹ_பெய், ஹெனான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தகவல் தொடர்பும் முழுமையாக...
ஜேர்மனியின் தென்பகுதியில் அமைந்துள்ள அன்ஸ்பேர்க் நகரில் தற்கொலைதாரியொருவர் குண்டைவெடிக்கச் செய்ததில் தற்கொலைதாரி பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் இருந்து வந்த 27 வயதுடைய புகலிடக்கோரிக்கையாளரே இவ்வாறு குண்டை வெடிக்கவைத்துள்ளார். திறந்தவெளியில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குண்டு வெடிப்பு இடம்பெற்ற அரங்கிலிருந்து 2500 ற்கும் மேற்பட்ட...
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மரணமடைவதற்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. நேற்று பிரித்தானிய நேரம் மதியம் 12 தொடக்கம் 4 மணி வரை இல 10, என்னும் இடத்தில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இறுதி யுத்தத்தின் பின் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம்...
ஜேர்மனியின் தெற்கு நகரான மூனிக்கின் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 3 பேர் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதலை அடுத்து மூனிக் நகரம் முழுவதும் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெறுகின்றது. தாக்குதல் இடம்பெற்றபோது தாக்குதல்தாரிகள் இஸ்லாமியத்துக்கு ஆதவான கோஷங்களை எழுப்பினர் எனக்...
உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடல் மார்க்கமாக செல்லும் அகதிகள் பாதுகாப்பற்ற முறையில் ரப்பர் படகு, மரப்படகு போன்றவற்றில் பயணம் செய்கிற போது பல நேரங்களில் விபத்து நிகழ்ந்து விடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம், அகதிகள்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கொள்வனவிற்காக பல மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13பேர் மீது சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுவிஸ், ஜேர்மனி, மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த இவர்கள் மீது குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தமை அல்லது அதற்கு உதவியமை, மோசடி, போலி சான்றிதழ், பணச்சலவை,...
சிரியாவில் உளவு பார்த்ததாக 11 வயது சிறுவனை ஐஎஸ் அமைப்பினர் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய இஸ்லாமிய நாடாக உருவாக்கியுள்ள ஐஎஸ் அமைப்பினர் நாளுக்கு நாள் தலை துண்டிப்பு, கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான குற்றங்களை செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்....
மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில்...
பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மாடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச். சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார். தன்னை தற்கால...
துருக்கி ராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலருமே காரணம் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். துருக்கியில் நேற்றிரவு புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக இராணுவம் அறிவித்தது. இந்த இராணுவ சதிப் புரட்சியால் ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை சுமார் 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ஐரோப்பிய ஒன்றிய நாடான துருக்கியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இராணுவப் புரட்சி வெடித்துள்ளது. இதையடுத்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மூண்ட சண்டையில் 17 பொலிஸார் உயிரிழந்தனர் எனக் கூறப்படுகின்றது. தொடர்ந்தும் அங்கு சண்டை நீடித்து வருகின்றது. இதேசமயம் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்களும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். புரட்சியாளர்கள் அதாதுர்க் சர்வதேச விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்...
கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராரியோ மாகாணத்தின் பிராம்டன் நகரைச் சேர்ந்த நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நிரஞ்சன் கலைச்செல்வம்...
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ´பாஸ்டில் தினம்’ எனப்படும் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை நேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவ்வகையில், மொனாக்கோ நகரில் இருந்து சுமார்...
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே...
மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர்...
பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார். மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை அமல்படுத்த புதிய தலைவர் விரைவாக...
ஜெர்மனியில் 7,500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற உலகின் மிக பிரம்மாண்ட இசைக் கச்சேரி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு பாப் பாடல்களையும், மெலடி இசைகளையும் மற்றும் பாரம்பரிய இசைகளையும் வாசித்தனர். இதில், பீத்தோவனின் ''ஒடே டூ ஜாய்'' இசையும் அடக்கம். மூன்றாண்டுகளுக்குமுன், ஆஸ்திரேலியா...
தெற்கு சூடானில் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இரு தரப்புகளும் மோதலை நிறுத்தி, வன்முறை பரவுவதைத் தடுக்குமாறு ஐநா பாதுகாப்பு சபை கோரியுள்ளது. ஏகமனதாக விடுத்த அறிக்கை ஒன்றில், ஐநா பாதுகாப்பு சபை, இந்த மோதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஐநா அலுவலகங்களும் தாக்கப்பட்டது குறித்து குறிப்பான அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பதில் நடவடிக்கையாக அங்கு மேலும் கூடுதல்...
அமெரிக்காவின் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுயிருந்தனர். இந்த சிறைக்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். அவர் இன்று நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தபடி கைதிகளிடம் நகைச்சுவை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியினால் திடீரென...
Loading posts...
All posts loaded
No more posts