- Tuesday
- November 26th, 2024
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் கடந்த வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர்...
பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது.
ஒருவருடைய சுய விவரங்களில், பத்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன இதே பெயருடைய ஒரு குற்றவாளியின் விவரங்களை சேர்த்து சீன அதிகாரிகள் குழப்பியுள்ளனர். ஒருவரின் அடையாள எண்ணை, அதே மாதிரியான இன்னொருவரின் அடையாள எண்ணோடு சேர்த்து குழப்பி விடுகின்ற தவறுகளை ஒழித்துவிட, சீன அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சீன ஊடகங்களால்...
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இளைய புதல்வியான சாஷா ஒபாமா தற்காலிகமாக வெள்ளைமாளிகையைத் துறந்து கடலுணவு உணவகம் ஒன்றில் கோடைவிடுமுறை வேலை வாய்ப்பைப்பெற்றுள்ளார். மசாசூட்ஸ் மாநிலத்திலுள்ள மார்த்தா வைன்யாட் உள்ள Nancy’s Restaurant உணவகத்தில் உணவு பரிமாறும் பரிசாரகராக 15 வயதான சாஷாஒபாமா பணிபுரிவதாகவும் அவருக்குப் பாதுகாப்பாக அமெரிக்க இரகசியபுலனாய்வு சேவையை சேர்ந்த 6 முகவர்கள்...
பிரான்ஸ் நாட்டு வீதிகளில் ஒயின் வெள்ளம் சூழ்ந்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 4 ஆயிரம் கோடி லிட்டர்...
வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பேலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. அதில் ஒரு ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட கடல் பரப்பில், தரையிறங்கியுள்ளது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே இந்த செயலை சினத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் ஜப்பானின் பாதுகாப்பிற்கு நேர்ந்த அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார். இரண்டு...
லண்டனில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: மத்திய லண்டனின் ரசல் சதுக்க பகுதியில், அடையாள தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென அருகில் உள்ளவர்களை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 6...
இந்தியா திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு...
இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன....
மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர். மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில்...
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், 2006–ம் ஆண்டு, நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை குடித்து ஏராளமானோர் பலியாகினர். இதில் 400 பேர் பலியானதாக அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், பல்வேறு அமைப்புகள் சுமார் 10 ஆயிரம் பேர் பலியானதாக கூறின. இந்த இருமல் மருந்துக்கான டி.டி.கிளிசரின் என்ற மூலப்பொருளை சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஸ்பானிய நிறுவனம்...
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் அருகே சென்னால்ட் உள்ளது. அங்குள்ள தேவாலயத்தின் சார்பில் பெற்றோர், உறவினர்கள் மறுஇணைப்புக்காக ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று சுமார் 20 பேர் கூடி இருந்தனர். அப்போது அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர், கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்....
இந்தியாவின் 70–வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15–ந்தேதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகாடமி விருதுகள், ஒரு தடவை ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு...
போலந்து நாட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றி பாப்பரசர், காலிடறி கீழே விழுந்துள்ளார். பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் திரும்புகையில் அவரது கால் தடுக்கியுள்ளது. அருகில் இருந்த மதகுருமார்களின் துணையுடன் உடனே எழும்பி நின்றார் அதிஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. பாப்பரசர் கால் தடுமாறி வீழ்ந்ததைக் கண்ட அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் எனினும்...
1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் 2012-ம் ஆண்டு தனது 82-வது வயதில் உயிரிழந்தார். அதேபோல், ஜேம்ஸ் இர்வின் என்பவர் அப்போலோ 15 விண்கலத்தில் 1972-ம் ஆண்டு நிலாவுக்கு சென்றார். நிலாவிற்கு சென்று...
உலக யுத்தம் குறித்து புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஐரோப்பாவை இலக்கு வைத்து ஜிகாதிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் தாம் மதங்களுக்கு இடையில் யுத்தம் நடைபெறுவதாக குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைகள், பணம் மற்றும் வளங்களுக்காக இவ்வாறு மோதல் இடம்பெற்று வருவதாகத்...
பிரான்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, பிரான்சில் கடந்த வாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில்...
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது தாயாரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமொன்று, இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. குமாரி மஹேந்திரன், என்ற 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சித்ரானி மஹேந்திரன், என்ற 74 வயதான தாயாரே தனது மகளை கத்தியால் குத்தியுள்ளார். தான் உறக்கத்தில் இருந்தபோதே தனது தாய் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ள அவ் யுவதி...
பிரான்ஸின் வடக்கு நகரான ரூவனுக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றில் மூத்த பாதிரியாரைக் கொன்ற இரண்டு தாக்குதல்தாரிகள், ஐ.எஸ் அமைப்பிடம் தீவிர விசுவாசம் கொண்டவர்கள் என பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந் தெரிவித்துள்ளார். தாக்குதல்தாரியிடமிருந்து தப்பித்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தியேந்திய அந்த தாக்குதல்தாரி பாதிரியாரின் கழுத்தை அறுப்பதற்கு முன்னர் எவ்வாறு அவரை மண்டியிட மிரட்டினார் என...
பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் 5 பேரை ஆயுதம் தாங்கிய இருவர் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸின் வடக்கு நோர்மன்டி பகுதியில் தேவாலயம் ஒன்றுக்குள் ஆயுதம் தாங்கிய 2 பேர் திடீரென நுழைந்தனர். அங்கிருந்த பாதிரியார், 2 கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 5 பேரை ஆயுத முனையில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர். இச்சம்பவம்...
Loading posts...
All posts loaded
No more posts