- Tuesday
- November 26th, 2024
சவூதி பிரஜை ஒருவரை கொன்ற குற்றத்திற்காக சவூதி நாட்டு இளவரசர் துர்கி பின் சவுத் அல் கபீருக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. மேற்படி இளவரசர், மூன்று வருடங்களுக்கு முன் தனது சக சவூதி பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவரை...
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) மாநகரத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இரட்டை நகர உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொருளாதார வளர்ச்சி, வன்முறை ஒழிப்பு, அனைவருக்கும் பொதுவான சட்டவரைமுறை, நிர்வாகம், தேவை அறிந்து உரிய முடிவு எடுக்கும் பொறுப்பு...
பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா(25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். டெஸ்கோ நிறுவனத்தில் தவராஜா ஒரு ஆண்டுக்கு 16,000 பவுண்ட்(28,71,534 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்று...
ஐக்கிய நாடுகளின், புதிய செயலாளர் நாயகமாக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ குட்டரெஸ்ஸை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, நேற்று வியாழக்கிழமை (13) நியமித்துள்ளது.
பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகுவதாக, மாலைதீவுகள் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அந்நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பொதுநலவாயத்திலிருந்து விலகும் முடிவு, மிகவும் கடினமானது என்ற போதிலும், தவிர்க்கப்பட முடியாதது எனவும் தெரிவித்தது. பொதுநலவாயத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில், இரு தரப்பு உறவுகளிலும் பலதரப்பு உறவுகளிலும், தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை,...
உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துல்யாதேவ் காலமானார். இறக்கும் போது அவருக்கு 88 வயது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மன்னர் நேற்று மரணமானதாக தாய்லாந்து அரண்மனை அறிவித்துள்ளது. 70 வருட காலம் அரியணையில் அமர்ந்திருந்த பெருமை மன்னர் அத்துல்யாதேவை சாரும். உலகில் நீண்டகாலம்...
துபாயை ஆளும் குடும்ப உறுப்பினரின் அரண்மணையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை பணிப் பெண்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என, அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. அரண்மனையில் இருந்து கடந்த மார்ச் மாதம் நகைகள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்பவற்றை கொள்ளையிட்டார்கள் என, குறித்த இரு பெண்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இது...
சிறீலங்காவில் மனித உரிமைகள் நிலமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அடைக்கலம் கோரியவர்களை பாதுகாக்கவேண்டிய தேவையில்லையென சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுவிஸ் குடிவரவுப் பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ் இன்போ இணையத்தளம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘சிறீலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்’. குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும்...
ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கனடா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவு அளித்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அனைவரது கை தட்டல்களுக்கு...
கலக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிப் பாவனையாளர்கள் உடனடியாக அதன் பாவனையை நிறுத்த வேண்டும் என சம்சுங் நிறுவனமும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. சம்சுங் கலக்ஸி நோட் 7 கையடக்கத் தொலைபேசியில் ஏற்படும் திடீர் வெடிப்புக்கள் மற்றும் தீ விபத்துக்களை அடுத்தே சம்சுங் நிறுவனம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. ஏற்கனவே கலக்ஸி நோட் 7 கையடக்க...
ஆசியாவிலும் ஜிகா வைரஸ் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகையே அச்சுரித்து வரும் ஜிகா வைரஸ் இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகிறது. இதில் சிங்கப்பூர்,தாய்லாந்து உள்ளிட்ட 19 நாடுகளும் அடங்கும். தவிர இந்த வைரஸ் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆசிய பசுபிக் நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக உலக...
நோபல் பரிசுக்காக கிடைத்த பணத்தை கொலம்பிய ஜனாதிபதி ஜுவான் மனுவெல் சென்ரொஸ் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கவுள்ளார். இடம்பெயர்ந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நலனுக்காக நோபல் விருதுக்காக கிடைத்த பணத்தை அன்பளிப்பு செய்வதாக ஜனாதிபதி சன்ரொஸ் தெரிவித்துள்ளார் 52 வருடங்களாக பார்க் கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர தலைமைத்துவம் வகித்ததன் காரணமாக இவருக்கு அண்மையில்...
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான், லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான க்வாரி அஜ்மால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்றின் போதே க்வாரி அஜ்மால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பக்ரிகா மாநிலத்தில் ஆப்கான் மற்றும் நேடோ இராணுவத்தினர் இணைந்து...
குவைட்டில் சட்டவிரோத மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களும் ஒரு இந்தியரும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் கெய்பான் பிரதேசத்தில் வாடகைக்கு பெற்றுக் கொண்ட வீடொன்றில் இவ்வாறு சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் போது,...
2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. இதன்படி, முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாகவும், இயற்பியலுக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த...
சுரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹெய்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா...
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா.வின் தற்போதை செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இப் புதிய தெரிவு இடம்பெற்றுள்ளது. 67 வயதான குட்டெர்ஸ் ஐ.நாவின் அகதிகள் தொடர்பான நிறுவன தலைவராக...
அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவாக உள்ளதை...
நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும், "ஆட்டோஃபஜி' என்றழைக்கப்படும் "சுய துப்பரவு' செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது: உயிரிணுக்களின் சுய...
கவர்ச்சியால் மேற்குலக நாடுகளில் அதீத பிரபல்யம் அடைந்துள்ள அமெரிக்காவின் கவர்ச்சி கன்னியான கிம் காடஸ்சியன் வெஸ்ட்டிடம் இருந்து மில்லியன் கணக்கான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. பாரிஸ்சிலுள்ள சொகுசு வீட்டில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இருவர் அவரிடம் இருந்த 6 மில்லியன் யூரோ பெறுமதியான நகை பெட்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில்...
Loading posts...
All posts loaded
No more posts