- Tuesday
- November 26th, 2024
சாரண சாரணிய இயக்கத்தினருக்கு வாழ்க்கையின் பிந்தைய கட்டத்தில் மன நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1958 ல் பிரிட்டனில் பிறந்த சுமார் பத்தாயிரம் மக்களிடம் அவர்கள் வாழ்நாள் முழுதும் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது. சாரண சாரணிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பதற்றம் மட்டும் மனநிலை ஊசலாட்டம்...
அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு சினிமாவில் நடித்திருக்கிறார். அதுவும் இலங்கையின் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் தயாரித்த ஒரு படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் பெயர் 'Ghosts Can't Do It'. இது குறித்து சந்தரன் ரத்னம் கூறுகையில், "நானும் போ டெரிக் (Bo Derek)கும்...
அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மேல்-சபையான செனட் சபைக்கும், கீழ் சபையான பிரதிநிதிகள்...
உலக நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கப் போவதில்லையென்றும் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாவே செயற்படுவேன் என்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். உலகின் மிகவும் பலம் பொருந்திய பதவியாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி பதவியை தனதாக்கிக்கொண்ட குடியரசுக் கட்சியின் டொனால்ட் டரம்ப், தனது வெற்றியை அடுத்து நேற்று (புதன்கிழமை) ஆற்றிய கன்னி உரையிலேயே இவ்வாறு...
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாவதற்குத் தெரிவாவதற்கு 270 பிரதிநிதிகள் தேவை என்ற நிலையில், 276 பிரதிநிதிகளை தற்போது பெற்றுள்ள நிலையிலேயே, ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், 218 பிரதிநிதிகளின் ஆதரவை இதுவரையில் பெற்றுள்ளார்.
‘சுப்பர் மூன்’ நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் பிரகாசமான சுப்பர் மூனாக, இது அமையுமென, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு அறிய நிகழ்வு இதற்கு முன்னர் 1948ஆம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. சுப்பர் மூன் என்றால், நிலவானது பூமிக்கு மிகமிக அருகில்...
கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூடு இடபெற்றுள்ளது. மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை நேரத்தின் பிரகாரம் இன்று புதன்கிழமை காலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமானது அமெரிக்க தேர்தலை குழப்பும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது முடிவுகள் தொடர்ந்தும் வௌியாகிய வண்ணம் உள்ளன. கடும் போட்டி நிலவும் பல மாநிலங்களில் வெற்றி பெறப் போவது யார் என்ற கேள்வியுடன் உலகளாவிய ரீதியில் முடிவுகள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை பின் தள்ளி...
இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பாக்கிளேஸ் பேங்கில், நீங்கள் விரும்பும் புகைப்படத்தைக் கொடுத்து உங்கள் ஏ.டி.எம் கார்டில் பிரின் செய்ய முடியும். அந்த வகையில் பலர் இது போல...
அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி கனடாவில் பலரின் பணத்தை ஏப்பம் விட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 52 வயதுடைய சிங்களப் பெண் ஒருவருக்கு கனேடிய நீதிமன்றம், ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. அதேவேளை மூன்று மில்லியன் கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முஸ்கொகா என்ற இடத்தில் ஆடம்பர விடுதிகளை அமைப்பதாகக் கூறி 2004 ஆம்...
கல்வியில் சாதிக்க நோய் ஒரு தடையில்லை என நிரூபித்த இலங்கையர் குறித்து, அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ளன. தினேஷ் பலிபனய எனும் குறித்த இளைஞர், 2010ம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்தியப் படிப்பை மேற்கொண்டு வந்தபோது, திடீர் விபத்தொன்றுக்கு முகம்கொடுத்தார். பிலிஸ்பேனில் வசிக்கும் தனது பெற்றோரை சந்திக்க காரில் சென்றவேளையே அவர் இவ்வாறு விபத்துக்குள்ளானார்....
ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை நாட்டின் ராணுவம் ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை முழுவதும் பல மாதங்களாக இந்த ஓசை கேட்டு கொண்டிருக்கிறது. பெரிய வாய் உடைய திமிங்கலம் மற்றும் சீல் எனப்படும் நீர்...
லிபியாவுக்கு அப்பாலுள்ள கடலில் இரண்டு படகுகள் மூழ்கியதால் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் பலியாகியிருப்பதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறைந்த பட்சம் 239 பேர் மரணித்துள்ளதாக தெரிகிறதென ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி குறிப்பிட்டார். விபத்தில் உயிர் தப்பிய இரண்டு பேர் இத்தாலியின் லம்பெடுசா தீவின் கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை...
சவுதி அரேபியாவில் தற்போது ஆளும் அரச குடும்பத்தின் இளவரசருக்கு, சிறையில் கடுமையான சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட சவுதி அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதியின் ஆளும் ”அல் சவுத்”(Al...
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அவசியமான செயற்பாடுகள், துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன்போது குறித்த குழுவின் தலைவர் ஜீன் லம்பேட் மேற்குறித்தவாறு தெரிவித்தார்....
அகதிகளின் வருகையைத் தடுக்கும் முகமாக அவுஸ்திரேலியாவுக்குள் கடல்வழி மூலமாக நுழையும் மக்களுக்கு, அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த அறிவிப்பினை அவுஸ்திரேலியப் பிரதமர் மார்க்கம் டர்ன்புல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின்படி கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகள் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்....
பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்த அவரவர் செல்பி புகைப்படங்களையோ அல்லது மற்றவர்களது செல்பி புகைப்படங்களையோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒருவகையான திருப்தியின்மை நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. விதவிதமாக செல்பி எடுத்து, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதனை போஸ்ட் செய்வதில் இளைஞர்களிடம்...
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள், கப்பல்கள் எவ்வாறு காணாமல் போகின்றன என்ற மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ளது.இது Florida, Puerto Rico மற்றும் Bermuda ஆகிய பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கோண வடிவில் காணப்படுகிறது. இந்த கடற்பரப்பின் மீது...
ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள டோட்டோரி என்ற இடத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவானது. இதனால், வீடுகள் குலுங்கின.நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை உலகின் அதிக நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படக் கூடிய...
சட்டவிரோதமாக குவைத் நாட்டில் மதுபான தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கைப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பைஹா என்ற பகுதியில் வைத்து குறித்த பெண் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதன்போது 400 மதுபான போத்தல்கள், 10 பெரல்கள் உள்ளிட்ட மதுபான தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையவே...
Loading posts...
All posts loaded
No more posts