Ad Widget

உலகையே உருகவைத்த இந்திய சிறுவனின் கிறிஸ்துமஸ் கடிதம்

இந்தியவம்சாவளி சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று உலகையே உருக வைத்துள்ளது. இங்கிலாந்தின் மிட்லேடண்ஸ் பகுதியில் வசிப்பவர் ஆரூஷ் ஆனந்த் . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. இவர் நட்டிகாம் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலை ஆரூஷ் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம்...

பபுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பபுவா நியூ கினிக்கு அருகாமையில், 8.0 ரிச்டர் அளவிலாள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ad Widget

பிரான்ஸ் நாட்டின் அழகியாக இலங்கைத் தமிழ் பெண்

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வருடம் கலந்துகொண்ட 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக இலங்கைத் தமிழ் பெண் சபறினா கணேசபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் புதிய செயலாளர் பதவியேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம்...

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

இந்தோனேசியாவின் அசெக் மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அசெக் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும்...

47 பேருடன் சென்ற விமானம் விபத்து

பாகிஸ்தானில் 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானம், நேற்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய...

இந்தோனேசியா நிலநடுக்கத்துக்கு 18 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்கள் மரணபீதியில் ஓலமிட்டனர். பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த...

இத்தாலி, நியூசிலாந்து பிரதமர்கள் பதவி விலகல்!

இத்தாலியின் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் குறித்து நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும் தோல்வியடைந்ததால், இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி பதவி விலகியுள்ளார். நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவாக எந்த வாக்கும் பதிவாகவில்லை என்ற தரப்பு மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி...

கொலம்பிய விமான விபத்து: 75 பேர் பலி, 6 பேர் உயிர் தப்பினர்

சப்பகோயென்ஸ் கால்பந்து குழுவினரை ஏற்றி சென்ற ஒரு விமானம், கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியுள்ளது. அதிலிருந்து 75 பேர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 6 பேர் உயிர் தப்பியுள்ளனர். கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில் மலைப்பாங்கான பகுதியில் இந்த விமானம் விழுந்துள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களையும், அதிகாரிகளையும், மெடலின் அணிக்கு...

பிரேசில் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் விபத்து

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவிற்கு பயணித்த விமானம் மேடெல்ளின் பகுதியை அண்மித்த வேளை ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிலர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. பிரேசில் கால்பந்து வீரர்கள் அடங்களாக 72 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் அடங்கலாக 81 பேருடன் குறித்த விமானம் விபத்திற்கு முகம்கொடுத்துள்ளது. குறித்த விபத்தின் போது விமானம் முற்றுலுமாக நொருங்கியுள்ளதாகவும்,...

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் கைது

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே...

பிடல் கெஸ்ட்ரோ காலமானார்!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிடல் கெஸ்ட்ரோ மரணத்தை அதிபரும் அவரது சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.  கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் பிடல் கெஸ்ட்ரோ. இவர் வயோதிபத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் கெஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு...

ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா

சிரியாவில் குண்டுவெடிப்பால் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பீதியில் உறைந்துப்போய் இருந்த சிறுவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா, அவனை பாராட்டி, வாழ்த்தினார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு...

பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஈழத் தமிழரான ஜெயக்குமார் என்பவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் லாச்சப்பல் பகுதியில் மாவீரர்நாள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தவேளையிலே இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். வாள் வெட்டில் காயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை...

ஜப்பானில் பாரிய நில நடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளன. ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியை மையமாகக் கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் பயங்கரமாக குலுங்கின....

அவுஸ்திரேலியாவில் நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிநெறி

ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். வடக்கில் நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகள்...

அகதி அந்தஸ்து பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய இளைஞர் திடீர் மரணம்!

இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார். சிட்னியில் வசித்துவந்த அஜிதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதாலேயே மரணமடைந்துள்ளதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். அஜிதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவருடன் அருகில் யாரும் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்....

“இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை”

சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின்...

உயிரோடு இருப்பவர்களை இறந்ததாக அறிவித்த ஃபேஸ்புக்

சமூக ஊடக வலைதளமானஃபேஸ்புக்கில் இருக்கும் அசாதராண செயலி பிழையால், பல பேர் இறந்து விட்டதாக முத்திரை அறிவிப்பு வெளியானது. ஃபேஸ்புக்கின் தலைமை செயலதிகாரியான மார்க் ஸூகர்பெர்க் உள்பட ஃபேஸ்புக்கின் பல பயனாளர்களின் சுயவிவர பக்கங்களில் இந்த செய்தி தவறுதலாக தோன்றியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட சில பயனாளர்கள், தாங்கள் இன்னும உயிருடன் இருப்பதை தெரியப்படுத்துவதற்காக தங்களுடைய நண்பர்கள்...

அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்தத் திட்டம்!

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு, நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என...
Loading posts...

All posts loaded

No more posts