வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொலை

மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலையாக இருக்கலாம் என தோன்றுகின்ற தாக்குதல் ஒன்றில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின், பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டுள்ளார். மக்கௌவுக்கு செல்ல விமானத்தை பிடிப்பதற்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை கிம் ஜோங் நாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும்...

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை!

பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. காதலர் தினம் முஸ்லிம் கலாசாரத்தில் இல்லை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உடனடியாக, காதலர் தினம் தொடர்பான அனைத்து விழாக்களையும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் ஊடகங்கள் காதலர் தின நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கவோ,...
Ad Widget

குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை!

ஈராக் நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினர் குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேரை பிடித்து உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. இன்னும்...

இலங்கையர் சென்ற படகு மீது அமெரிக்க கடலோரக் காவல்படை சூடு!

அமெரிக்காவுக்குள் படகு ஒன்றின்மூலம் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 6 இலங்கையர்கள் உட்பட 15பேரை அமெரிக்க கண்காணிப்புப் படையினர் கைதுசெய்துள்ளனர். கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவரே, இந்த சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 15 பேரில் அவரும் அடங்கியுள்ளார். அமெரிக்க சுங்க...

டிரம்ப் பயணத்தடையை எதிர்த்து ஆப்பிள், ஃபேஸ்புக் உள்பட 100 நிறுவனங்கள் கூட்டு வழக்கு

அமெரிக்க வணிகத்தில் அதிபர் டிரம்பின் பயணத்தடை உத்தரவானது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறி ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்பட அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குறைந்தது நூறு தொழில் நிறுவனங்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் சில...

அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை கடுமையாக சோதிக்க டிரம்ப் உத்தரவு

ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையின் இடைநீக்கம் தொடர்வதால், அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தடையை இடைநீக்கம் செய்த நீதிமன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளை பத்திரப்படுத்துவதை கடினமாக்குகிறது என்றும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாட்டை ஆபத்தில் தள்ளுவதாகவும்...

ஆஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு முக்கிய விசாரணையில் அங்கு பல தசாப்தங்களாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தெரியவந்துள்ளது. பொது விசாரணையின் தொடக்கத்தில், சுமார் 2000 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் மேலும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4.500 பேர் என்றும் ராயல் ஆணையம் தெரிவித்துள்ளது. சில கத்தோலிக்க மத குழுக்களைச் சேர்ந்த...

செருப்பு அணியும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம்: சர்வதேச ஆய்வு

வகுப்பறையில் சப்பாத்துக்குப் பதிலாக செருப்பு அணியும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்பவர்களாக காணப்படுகின்றார்கள் என பிரித்தானிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் டர்பிஷயர் பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு செருப்பு அணிய வாய்ப்பளித்து பின்னர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஸ்டீவன் ஹெரல் என்பவர் இது தொடர்பில் கூறும் போது, சப்பாத்து...

ட்ரம்பினால் அமெரிக்க விமான நிலையத்தில் இலங்கையர்களும் தடுத்து வைப்பு

அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தடை உத்தரவால் இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 71 பேரையும் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தடுத்து வைத்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த...

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் மருத்துவ மாணவி தேர்வு!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனேரே வெற்றி பெற்றுள்ளார். 2017-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிக்கான போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு, இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இதில் 13 போட்டியாளர்கள்...

அகதிகளின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கும் படி அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு

அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களின் பேஸ்புக் பக்கங்களை அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக கடந்த 20-ஆம் தேதி பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பொதுமக்கள் வருகை...

கனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

கனடாவின் கியூபெக் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். கனடாவின் கியூபெக் நகரத்தில் இஸ்லாமிய கலாச்சார மையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் வழிபாடு மசூதியொன்றும் அமைந்துள்ளது.அங்கெ உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது....

இலங்கைக்கு ஆதரவாக டிரம்பின் அதிரடி தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்கள் புரிந்ததாக முறைப்பாடுகளை தயார் செய்து முன்வைத்ததாக கூறப்படும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் பணிபுரியும் நான்கு பேரை டொனல்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். புதிய இராஜாங்க செயலாளராக ரெக்ஸ் மிலர்சன் நியமிக்கப்பட்டு, இந்த அதிகாரிகள் 4 பேர் நீக்கப்பட்டமையினால் தமிழீழ புலம்...

ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவின் எதிரொலி: டெக்சாஸில் மசூதி தீக்கிரை

ஏழு இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடைவிதித்து சில மணிநேரத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகர மசூதி நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 2 மணி அளவில் இவ்வாறு இனம்தெரியாதோர் தீ வைக்கப்பட்டுள்ளது....

ட்ரம்ப் முடிவு மீது முகப்புத்தக நிறுவனர் மார்க் விமர்சனம்!

அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொண்டுவந்துள்ள மாற்றங்களை முகப்புத்தக (ஃபேஸ்புக்) நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் பல்வேறு அதிரடி மாற்றங்களைப் புகுத்திய அதிபர் ட்ரம்ப் அதற்கான செயலாக்க உத்தரவை வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்தார். அவரது இந்தக் கொள்கையை உலகம் முழுவதும் பலரும் பரவலாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக்...

டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை வருத்தமளிக்கிறது: சுந்தர் பிச்சை வேதனை

ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் தீர்மானம் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விமர்சித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் புதிய தீர்மானம் 187 கூகுள் தொழிலாளர்களை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இந்த தீர்மானம் எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது கூகுள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும்...

ஆப்கானிஸ்தானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி!

தார்ஜாப் மாவட்டத்தில் வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக உள்ளது. அங்கு 27 குழந்தைகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு பக்கம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் இயற்கையும் கடும் பனிப்பொழிவின் வாயிலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது....

குழந்தைகளை பயன்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்

நைஜீரியாவில் தாக்குதல்களில் ஈடுபடும் பெண் தற்கொலை குண்டுதாரிகள், தம் மீதான சந்தேகங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தாக்குதல்களின் போது குழந்தைகளையும் தம்முடன் அழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மடகாலி நகரில் கடந்த 13ஆம் திகதி இரு பெண்கள் முன்னெடுத்த தற்கொலை குண்டு தாக்குதலில், குண்டுதாரிகளுடன் இரு குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், மேலும் நால்வரும் உயிரிழந்தனர். குறித்த குண்டுதாரிகள்...

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் டிரம்ப்

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார். தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் திகதி, பொதுமக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக...

நிலாவில் கால் பதித்த கடைசி விண்வெளி வீரர் மரணம்

அமெரிக்க விண்வெளி வீரரும், நிலாவில் கடையாக கால்பதித்தவருமான யூஜின் செர்னன் தனது 82 வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அனுப்பிய அப்பல்லோ 17 விண்கலத்தில் 1972ம் ஆண்டும் நிலவுக்கு பயணம் மேற்கொண்டவர் யூஜின் செர்னன். அந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி நிலவில் கால் பதித்தார். அங்கு அவரின் ஒரே குழந்தையின்...
Loading posts...

All posts loaded

No more posts