- Friday
- January 10th, 2025
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வழக்கில் அவர் பிணை வழங்க கோரிக்கை...
அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற ஈழத்து இளைஞன் ஒருவர், எதிர்வரும் தேர்தலில் அவுஸ்ரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட சுஜன் செல்வன் (வயது – 31) என்பவரே ஆஸி. தேர்தல் களத்தில் இறங்கவுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு அகதி அந்தஸ்து கோரி ஆஸி. சென்ற இந்த இளைஞன், தற்போது மனித உரிமை...
சராஹா எனும் செயலி கடந்த சில வாரங்களில்உலகமுழுவதும் அதிக பிரபலமாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களுக்கு மொட்டைக் கடுதாசி போன்று தகவல்களை சராஹா மூலம் அனுப்ப முடியும். இதில் குறுந்தகவலை அனுப்புபவர் யார் என்ற தகவல் குறுந்தகவல் பெறுபவருக்கு தெரியாது. எனினும் சராஹா செயலியில் யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்ற தகவலை இதனை உருவாக்கியவரகள்...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது. மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி...
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள மசூதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக சவூதி உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கா மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவர் அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்ததாகவும், குறித்த தகவலறிந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் தனது உயிரையே மாய்த்துக்...
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ் (agent john hopkins) தெரிவித்துள்ளார். தன்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தனது உயிர் பிரியாது என...
அமெரிக்காவில் 17 வயதுடைய நப்ரா ஹுசைன் என்ற முஸ்லிம் மாணவியொருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிவாசலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேஸ் போல் மட்டையினால் பலமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய மார்ட்டின் டொரஸ் எனும் இளைஞனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்...
கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில்...
லண்டன் பிரிட்ஜ், மற்றும் பரோ பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிழக்கு லண்டன் பாக்கிங் மாடிக் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பெரு நகர காவற்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பெரு நகர காவற்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளைப் பிரிவினர்,...
அவுஸ்ரேலியாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்மிடம் குண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள குறித்த பயணி, விமானியின் அறைக்குள் பிரவேசிக்கவும் முயன்றுள்ளார். இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும், சாமர்த்தியமாக செயற்பட்ட சக பயணிகள் குறித்த பயணியை மடக்கிப்...
அவுஸ்திரேலியாவில், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உரிய முறையில் கவனிக்கப்படாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகள் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான ஆஸ்துமா நோயாளியான குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவுகளுக்குள் பிரவேசித்து சில மணித்தியாலங்களில் அருள்செல்வம்...
இங்கிலாந்து, மெஞ்சஸ்டரில் இடம்பெற்ற ´அரியானா கிரான்ட்´ ன் இசை நிகழ்ச்சியில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 19 பேர் பலியாகினர். 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில்இ இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை...
அமெரிக்க அழகிக்கான போட்டியில் 25 வயது விஞ்ஞானியான காரா மெக்குல்லாக் வெற்றி பெற்றார். அமெரிக்க அழகிக்கான போட்டி, லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றியாளர் யார் என்ற அறிவிப்புக்காக அரங்கமே அமைதியுடன் காத்திருந்தபோது, காரா மெக்குலாக்கின் பெயர் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூக்ளியர் ஒழுங்காற்று...
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் தடுப்புவேலியை தாண்டி குதித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கிறது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் காணப்படும். இம்மாளிகை உலகின் அதிபாதுகாப்பான இடங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் தடுப்பு வேலியை...
உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமானதொரு இணையத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணையச் சேவைகள் மீது இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை. பிரிட்டனின் தேசிய...
ஃபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5 சதம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல்,...
தமிழீழ தேசிய இலட்சினைகளுடனான புடைவைகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் குறித்த புடைவை வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய மலரான கார்த்திகை பூவும், இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வௌிப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
ணினிகளை நேரடியாக நமது மூளையின் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க முயன்றுவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களை ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தைகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் ''அமைதியான பேச்சு'' என்ற மென்பொருளை உருவாக்கி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள இந்தத் திட்டத்துக்கு, எவ்வித அறுவை சிகிச்சையும்...
Loading posts...
All posts loaded
No more posts