- Monday
- November 25th, 2024
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து லண்டன் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி...
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தமிழர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] 2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள 39...
சீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நிலவில் எந்த ஒரு உயிரியல் பொருளும் முளைவிட்டிருப்பது இது முதல் முறை என்பதோடு, நீண்டகால விண்வெளி ஆய்வுகளுக்கு இது முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது. பூமிக்கு தொலை தூரத்தில் இருக்கும் நிலவின் மறுபக்கத்தில் சாங் இ–4...
பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது. அதன் மற்றொரு பகுதியில் பெரும்பாலானவை, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியை நிலவின் "இருண்ட பகுதி´ என்று அழைக்கிறார்கள். அந்தப் பகுதியில் முதல் முறையாக...
“இலங்கையர்கள் பல ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளனர். எனவே லண்டனில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதை இடைநிறுத்துமாறும் புகலிடக் கொள்கையை மீளாய்வு செய்யுமாறு பிரிட்டன் உள்நாட்டு அலுவலகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்” இவ்வாறு பிரிட்டன் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான லிஸ் மைக்கின்ஸ் தெரிவித்துள்ளார். “இலங்கையில் சட்டபூர்வமான முறைப்படி பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால...
அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் கான்பராவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கையர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் சிறு தீக்காயங்களுக்கு...
கனடா நாடு கஞ்சா பயன்பாட்டை தற்போது சட்டபூர்வமாக்கியுள்ளது. அக்டோபர் 17, 2018 அன்றுமுதல் கஞ்சா என்று தமிழில் அழைக்கப்படும் கன்னாபிசு (Cannabis) என்னும் வயப்பொருளை அகவை 19 ஐத் தாண்டிய யாரும் உட்கொள்வது சட்டப்படி குற்றமில்லை. இதனால் உலகின் மிகப்பெரிய சட்டரீதியான கஞ்சா விற்பனை சந்தையாக கனடா உருவெடுத்துள்ளது. கஞ்சா பயன்படுத்துபவர்கள் மற்றும் அந்த தொழிலில்...
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில்...
நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனமான MSF இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. MSF தொண்டு நிறுவனம் கடந்த 11 மாதங்களாக அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் முகாமில் பணிகளை மேற்கொண்டது. எனினும், நவ்ரு அதிகாரிகளால் குறித்த தொண்டு நிறுவனம் வெளியேற்றப்பட்டது. தாம்...
சுமார் 5 கோடி பேரின் முகநூல் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் முகநூல் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகின் பிரபல சமூக வலைத்தளமாக முகநூல் உள்ளது. முகநூல் பயனர்களின் கணக்குகள் செயற்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக அந்தநிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு...
விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்தியல் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றது என மலேசியாவின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் டன் ஸ்ரீ முசா ஹசன் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றனர் என்றும், அவர்களால் மலேசியாவிற்கும் அச்சுறுத்தல் உண்டு என்றும்...
ஆஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 131 இலங்கையர்கள் மலேசியக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், தன்ஜுங் ஜெமுக் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த எற்ரா ( Etra) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 131 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே முதலாம்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில்...
கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த கொலைகள் இடம்பெற்ற போதும், தற்போது வெளிவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் கனேடிய பொலிஸார் உறுதி செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கச்சேரியடியை சேர்ந்த 40 வயதான கனகரட்ணம்...
முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார் என்று ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான...
கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ் புதிதாக உருவாக்கி இருக்கும் விமானம் சோதனை ஓட்டத்துக்கு நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ். இதுவரை பயன்பாட்டில் இல்லாத புதிய வகை விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய கிட்டிகாவ்க் நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் பங்குதாரராக சேர்ந்து சிபீர் என்ற நிறுவனத்தை...
அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர்,நாடு கடத்தப்படுவதற்காக அவுஸ்ரேலிய அதிகாரிகளால்...
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்புச் செய்தியை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஸ்டீபனின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர், பெரிய விஞ்ஞானி அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும்....
சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "டியாங்கோங் – 1" பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 தொன் எடைகொண்ட குறித்த விண்வெளி ஆராய்ச்சி...
அவுஸ்ரேலியாவின் நவுரூ தீவில் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய இலங்கையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கங்களுடன் ரோஹிங்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரு குடும்பங்களும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனி...
Loading posts...
All posts loaded
No more posts