- Monday
- November 25th, 2024
ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப் படைகள் தீவிர போர் பயிற்சில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் நடவடிக்கைகள் 100வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யாவின் இந்த...
ரஷ்யப் படைகள் இப்போது செவரோடோனெட்ஸ்கில் 70 விகித கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், கிழக்கு உக்ரைன் நகரத்தில் கடுமையான சண்டை நடந்து வருகிறது என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இருந்து பேசிய Serhiy Hayday அவர் இதனை கூறியுள்ளார். நகரில் வெற்றி ரஷ்யாவிற்கு ஒரு பெரிய மன உறுதியை அளிக்கும்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரெஞ்சு தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், ரஷ்ய தலைவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் தோன்றுகிறார். அத்துடன் எந்த ஒரு நல்ல மனிதனும் நோயால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின்...
உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரில் களமிறங்கியதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மந்திரி ஹெலன் கிராண்டின் மகனான பென் கிராண்ட் மீது குற்றவியல் வழக்கைத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய நீதித்துறை தெரிவித்துள்ளது. கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரித்தானியாவை சேர்ந்த பென் கிராண்ட் உக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷ்ய புலனாய்வாளர்கள் தீர்மானிக்கின்றனர் என்று ரஷ்ய...
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைன் நகரான கார்கிவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாத குழந்தையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ஷெல் தாக்குதலில் ஐந்து மாத குழந்தை உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதன்முறையாக காயமடைந்த ரஷ்ய போர் வீரர்களைப் பார்வையிட்டுள்ளார். உக்ரைன் போர் முயற்சிக்கு ஆதரவைப் பெறுவதற்காக அவர் ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், மொஸ்கோ வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வரும் இரண்டு வீரர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்தித்தார். வெள்ளை நிற கோட் அணிந்த புடின், இரு வீரர்களுடன் அவர்களின்...
உக்ரைனை ஆக்கிரமித்த காலப்பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் இதனை தெரிவித்துள்ளார் 2022, பெப்ரவரி 24ஆம் திகதியன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலை குறித்தும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. புற்றுநோயால்...
அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக்...
உக்ரைனுக்கு எதிராக புடினின் போருக்கு எதிர்ப்பு வெளியிட்டு ரஷ்ய ராஜதந்திரி ஒருவர் பதவிவிலகியுள்ளார். "இரத்தம் தோய்ந்த, புத்திசாலித்தனமற்ற" போருக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் தமது பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான துாதகத்தில் பணிபுரியும் பொண்டரேவ் என்பவரே தமது பதவியை விட்டு விலகியுள்ளார். இந்தப் போரை, உக்ரைனிய மக்களுக்கு எதிரான...
பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குச் சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை...
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யப் படைகள் மீது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி உக்ரைன் இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியதில் ரஷ்யாவுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் அத்துமீறித் தாக்குதல் நடத்து வரும் ரஷ்யப் படைகள் மீது உக்ரைனின் 45வது தனி பீரங்கி படை, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ட்ரோனை பயன்படுத்தி துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த...
கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ்பாதிப்பு அதிகரித்து வருகிறது....
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் பிரிவு அனுமதித்துள்ளது. மெர்க் (MSD) மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியுட்டிக்ஸ் (Ridgeback Biotherapeutics) நிறுவனங்கள் இணைந்து இந்த மாத்திரையை தயாரித்திருக்கின்றன. மோல்னுபிராவிர் (molnupiravir) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மாத்திரை, கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பமான தொற்றாளர்களுக்கு, இந்த...
நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த குறித்த நபர் ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை...
‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் தனது கவலையை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது...
2015 ஆம் ஆண்டு கோவிட் உயிரி ஆயுதத்தை உருவாக்கம் செய்ய சீனா திட்டமிட்டிருந்தமை தொடர்பான சீன ராணுவ ஆவணங்கள் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரிலிருந்து கோவிட் வைரஸ் முதல்முறையாக பரவி உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த வைரஸ் வுகானில் உள்ள பரிசோதனை கூடத்திலிருந்து தெரியாமல் வெளியேறியிருக்கலாம் என்றும் இவை...
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள்...
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை 222.3 கிலோ மீற்றர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.3 ரிச்டெர் என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின், நங்குங்குரு குடியேற்றத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 935.0 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
பைஸர் - பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியாவாகும். குறித்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அந்நாட்டில் பயன்படுத்த உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசியான “ஸ்புட்னிக்-5” தடுப்பூசி இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு என்று ரஷ்யா உலக நாடுகளுக்கு அறிவித்தது. இப்போது, ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவிட் -19 தடுப்பூசி இந்த வார தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று...
Loading posts...
All posts loaded
No more posts