- Tuesday
- February 25th, 2025

பழுதுபார்ப்பு தேவை என்று கூறி, ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் திட்டம் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா...

கெர்சன் பகுதியில் உள்ள ரஷ்ய துருப்புக்களை ஓடு அல்லது செத்து மடி என உக்ரைன் கடுமையான எச்சரித்துள்ளது. இது குறித்து உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள காணொளியில் ரஷ்ய வீரர்கள் தப்பி ஓடுவதைக் காட்டுகிறது. தற்போது கெர்சன் ஒப்லாஸ்டில் உள்ள ரஷ்ய விருந்தினர்களுக்கு ஒரு செய்தி என்று அந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது. உக்ரேனிய...

ஈராக்கில் உள்ள தெஹ்ரானில் பெற்ற மகள் தனது தாயின் மரண தண்டனையை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த மகள் தாய் நின்றிருந்த நாற்காலியைத் தள்ளச் சொல்லியுள்ளனர். ஈரானின் சர்வாதிகார ஆட்சியால் மீண்டும் ஒருமுறை கொடூரமான தண்டனையின் இந்த வழக்கு இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பெண்ணின் பெயர் மரியம் கரிமி என்று கூறப்படுகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்...

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 185வது நாளை தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் ஜபோரிஜியாவிலும், உக்ரைனின் தெற்கு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாட்டின் விமானப் போக்குவரத்து தினத்தில் பேசிய உக்ரைனிய...

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்நாட்டின் ஆயுதப் படைகளின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 1.15 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான ஆணையில் அண்மையில் கையெழுத்திட்டார். எனினும் இந்த நடவடிக்கை ரஷ்யாவின் போர் சக்தியை அதிகரிக்க வாய்ப்பில்லை...

உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தினால் அதற்கு பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் இன்றைய தினம் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த நிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜெலன்ஸ்கி மேலும் தெரிவிக்கையில், இன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக்...

ரஷ்யாவிற்கு எதிரான போரில் 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். தலைநகர் கீவ்ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராணுவத் தளபதி, போர்க்களத்தில் உயிரிழந்த 9000 வீரர்களின் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போரில் 3 ஆயிரம் வீரர்கள் இறந்ததாக கடந்த ஏப்ரல்...

அனைத்து ரஷ்ய மக்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளன. அனைத்து ரஷ்யர்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த மாத தொடக்கத்தில் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்திருந்தார். "எல்லைகளை மூடுவதே மிக முக்கியமான தடைகளாகும். ஏனெனில் ரஷ்யர்கள் வேறொருவரின்...

ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் வெடித்து பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரும், புடினின் மூளையாகவும் செயற்பட்ட அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பத்திரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), நிகழ்ச்சி ஒன்றில்...

இந்தியா, பெலாரஸ், மொங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் உட்பட, புரவலன் தலைமையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூட்டுப் பயிற்சியில் சீனாவின் பங்கேற்பு தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம்,...

பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற ரஷ்யா தாய்மார்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட அந்த விருதை மீண்டும் வழங்க ரஷ்ய அதிபர் புடின் முடிவு செய்துள்ளார். ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட கௌரவ விருதான 'Mother Heroine' விருதை மீண்டும் அறிவித்துள்ளார் ஜனாதிபதி...

பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானியா தனது RC-135 உளவு விமானத்தை ரஷ்யா மீது பறக்க அனுமதி கோரியதாகவும், இது வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய வான்பரப்பில் எந்தவிதமான அத்துமீறல்களையும் தடுக்கும் பொறுப்பு ரஷ்யாவின் விமானப்படைக்கு...

பிரித்தானிய விமானம் ஒன்று ரஷ்ய வான்வெளியை மீறிச் சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் ஒன்று பிரித்தானிய விமானத்தை ரஷ்ய வான்வெளியில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேரண்ட்ஸ் கடலுக்கும் வெள்ளைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள கேப் ஸ்வியாடோய் நோஸ் அருகே ரஷ்ய விமான எல்லையை பிரித்தானிய உளவு விமானம்...

சீனாவில் கொவிட்-19 வைரஸ் போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும்...

துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் போக்கு தொடங்கியதில் இருந்தே பல்வேறு மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் மற்றும் இராஜதந்திர உறவு முறிவு ஆகியவற்றை அறிவித்து வருகின்றனர்....

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது. இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள் ஒரு வித்தியாசமான யோசனையை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, உக்ரைன் பெண்கள் தங்கள்...

ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் இயக்குனரான அலெக்சாண்டர் ஷிப்லியுக், ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொடர்பான இரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் என்ற இடத்தில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்கு ஒலியை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைபர்சானிக் விமான தயாரிப்பு ஆராய்ச்சி நடந்து...

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர். இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள்...

உக்ரைனை அடுத்து நேட்டோ நாடுகளை சீண்டினால், உண்மையில் ஒட்டுமொத்த கூட்டணியும் எதிர்வினையாற்றும் என நேட்டோ தலைவர் ரஷ்ய ஜனாதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்,...

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதன்படி, உலோக நிறுவனமான MMK மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய தொடர்புடையது என அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் புட்டினுடன் நெருங்கிய உறவைக்...

All posts loaded
No more posts