- Tuesday
- February 25th, 2025

இந்த போர் நடவடிக்கையில் சுமார் 75000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய கடற்படையினர் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கடிதம். இரத்தம் கொட்டும் உக்ரைன் போரில் இராணுவ மூலோபாயத்தை மாற்றியமைக்குமாறு ரஷ்ய கடற்படையினர் ஜனாதிபதி புடினுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடந்து வரும் நிலையில்,...

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் உலக அளவில் பெரும் பாதிப்புக்களை எற்படுத்தியுள்ளன. இந்த போர் அதிக சேதம் மற்றும் பரவலான சைபர் பாதுகாப்பு தாக்குதல்களுக்கு வழிவகுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைய பாதுகாப்பு நிறுவனம் ENISA தனது ஆண்டறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ENISA இன் ஆய்வானது, மாநில நடிகர்களின் பங்கு, அரசாங்கங்கம், நிறுவனங்கள், போக்குவரத்து, வங்கி...

அண்மைக்காலமாக அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் உக்ரைன்-ரஷ்யா தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் ரஷ்ய தளபதிகள் உக்ரைனில் அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள்,உக்ரைனில் தொடர்ந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறன. இதனால் விரக்தியடைந்துள்ள ரஷ்ய தளபதிகள் எங்கே எப்போது...

உக்ரைன்-ரஷ்ய போர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் தொடரும் போர் மற்றும் நெருக்கடிகள் உலகளவில் தொழிலாளர் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இதன் காரணமாக மந்தநிலை நிலவி வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கில்பர்ட் ஹூங்போ செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்....

உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள மக்கள் தண்ணீருக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேயர் விட்டலி கிளிட்ச்கோவின் கருத்து தெரிவித்ததாவது, “கிவ் நகரில் 40% நுகர்வோர் தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும், 270,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை” என்றும்...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வளர்ப்பு மகளாக பார்க்கப்படும் பிரபல மொடல் அழகி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள அவரது குடியிருப்பை பொலிஸார் சோதனை மேற்கொண்ட நிலையில், அதற்கு சில மணி நேரங்களுககு முன்னர் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்ய தொலைக்காட்சி நட்சத்திரமும் மொடலுமான 40 வயது Ksenia Sobchak விளாடிமிர் புடினுக்கு...

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் "அநேகமாக மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் மாஸ்கோவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் உரையில் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியுள்ளார். உலகின் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை "புரட்சிகரமானது" என்று அவர்...

ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுத படைப்பிரிவினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது உள்ளிட்ட போர் பயிற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கு தயாராகும் வகையில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக, ரஷ்யா கூறியுள்ளது. இந்தப்...

முக்கிய தெற்கு நகரமான கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் எச்சரித்துள்ளார். சில ரஷ்ய பிரிவுகள் வெளியேறக்கூடும் என்று உக்ரைன் முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது கெர்சனை பாதுகாக்க தயாராகி இருக்கலாம் என்று புடானோவ் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்ய எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மாயையை உருவாக்க முயற்சிக்கிறது என்று அவர்...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...

இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66 குழந்தைகளும் உட்கொண்ட சிரப் மருந்து இந்தியாவின் மைதன்...

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்களன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாயன்று தனது அறிக்கை ஒன்றில்...

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறைப்படுத்துவதாக புடின் தெரிவித்துள்ளார். சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கின்றது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை...

அண்மையில் ரஷ்யா மேற்கொண்ட பாரிய தாக்குதலின் பின்னர் உக்ரைன் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 7 முதல் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் கொருன்ஜி கூறினார். உக்ரைனின் 30 வீத...

உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் இருவர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், சோவியத் தன்னார்வல வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும்...

தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8 மாதங்கள் கடந்த நிலையில் போர் தொடர்கின்றது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன்...

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. இலங்கையும் அவுஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும்...

உக்ரைனின் சில பகுதிகளை சட்டவிரோதமாக இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைக்க முயற்சித்ததை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கண்டித்துள்ளது. அத்தடன், இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்...

ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு எரிசக்தியைச் சேமிக்க குடியிருப்பாளர்களை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்க உக்ரேனிய குடியிருப்பாளர்கள் அடுப்பு மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். திங்களன்று உக்ரைன்...

உக்ரைன் அதிக நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றுவதால் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக உக்ரைனின் முன்னாள் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் எந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுகிறதோ அந்த அளவுக்கு விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என உக்ரைனின் முன்னாள் பிரதமர் அர்செனி யாட்சென்யுக் தெரிவித்துள்ளார்.. சர்வதேச ஊடகம்...

All posts loaded
No more posts