- Tuesday
- December 24th, 2024
ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்....
பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவிஅறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகே பாலர் பாடசாலை சிறுவர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். நாற்பதுக்கும் அதிகமான மாணவர்களுடன் சுற்றுலாச் சென்ற பஸ் ஒன்றே நேற்று (01) இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர்...
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதுடன்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் குணமடைந்தார். 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ...
ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதுவதுடன் அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள இலங்கையர்களை குறித்த பகுதிக்குச்...
வடகொரியாவில் நாடகங்களை பார்த்ததற்காக பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக தென்கொரிய செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. வடகொரியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தென் கொரிய மற்றும் அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளன. வடகொரியாவில்...
ரஷ்யா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உயிர்கள்...
உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக, 90 உலக நாடுகளின் தலைவர்கள் சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு இம்மாதம்,15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. குறித்த மாநாட்டில் பங்கேற்க, 90 உலக நாடுகளின் தலைவர்கள் சம்மதம்...
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில் 27 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா...
பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் சற்றும் தங்கள் முயற்சியை தொடர்கின்றனர். இன்று காலை, 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சிறுப டகொன்று பிரான்ஸிலிருந்து புறப்பட்டுள்ளது. அந்தப்...
இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த லஹிரு காவிந்த அத்துருசிங்க என்பவரே உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதாக கூறப்படுகிறது. உக்ரைன் படையில் வெளிநாட்டினரை...
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை புதுமைமிக்க உயிரணு சிகிச்சை(Cell therapy )முறையின் மூலம் முழுமையாகக் குணப்படுத்தி சீனாவின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சீன அறிவியல் கழகத்தை சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த சிகிச்சை முறை, செல் டிஸ்கவரி (Cell Discovery) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தித் தகவலின்படி, 2021ஆம்...
ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டல் அஸ் சுல்தான் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் காசா நகரம் உட்பட வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பலர்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்து விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரை மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேவேளை அந்த ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்களில் எவரும் உயிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்கள் எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என சர்வதேச செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி( Volodymyr Zelenskyy) தமது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை சமீப நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தில் மேலும் இரண்டு குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அத்துடன் Zaporizhzhia பிராந்தியத்தில் ஒரு குடியிருப்பு பகுதியையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில்...
ரஷ்ய மற்றும் உக்ரைன் போருக்கான வாடகைப்படையினராக செயற்பட இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் நிறுவனமே அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரஷ்யாவுக்கு வாடகைப்படையினராக இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் என்றொரு நிறுவனமே...
மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குளிர்ந்த லாவா குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதோடு, 17 பேர் காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான உயிர்ப்பு எரிமலைகளில் ஒன்றான மராபி...
Loading posts...
All posts loaded
No more posts