- Sunday
- December 22nd, 2024
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கும் IM யப்பான் நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக ஜப்பானில் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக யப்பான் மொழி ஆற்றலில் N4 தரத்துடன் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கமுடியும். பணியாளர் சேவை (Caregiver) தொழிலுக்கு 150 பெண்களுக்கு தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது....
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக மின்மானி வாசிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். மின்கட்டணம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி,...
இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்வுள்ளனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிக்காட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதற்கான வர்தத்மானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர கல்வி கற்கை...
யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரு நாட்களும் காலை 9.00 மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இலங்கையின் பிரபலமான 30 இற்கு...
வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் சேவைக்கு இணைக்கப்பட்ட பொறியியலாளர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக நியமனக் கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே இன்று (புதன்கிழமை) வழங்கி வைத்தார். வடக்கு மாகாணத்தில் நிலவும் பொறியியலாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் 7 பொறியலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின்...
கல்வியற்கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த சுமார் மூவாயிரத்து 626 பேருக்கு புதிதாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வியமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இவ்ர்களுக்கான...
வடமாகாணத்தில் 347 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கில் உளவியல் பாடம் உட்பட சில பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய, 347 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் 47பேர் உளவியல் பாட ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்ட குறித்த 347 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் நவம்பர் மாதம் நியமனம் வழங்கப்படும் என...
வடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்களும் தாதியர் சேவைக்கு விண்ணப்பிக்க முடியும் என அரச தாதியர்கள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் பாலசிங்கம் சிவயோகம் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண...
வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை எனவும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற, யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கில் தமிழ்...
எதிர்காலத்தில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை வலுமிக்கதாக உருவாக்குவதே தமது நோக்கம். விரைவில் அதனை மேற்கொள்வோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அது போன்று பொருளாதாரத்தை வலுப்படுத்த...
நாடு முழுவதும் நிலவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடைவெளிகளை நிரம்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான நேர்முகப் பரீட்சை மிக விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 1815 பேருக்கான இடைவெளி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டதாகவும், இதில் ஒரு...
20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் பிரதமர் கூறினார். மட்டக்களப்பு ஏறாவூரில் 96 மில்லியன் செலவில்...
வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தாதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியின் மூலம் தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால் விண்ணப்பங்கள்...
மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு கோரியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு மக்களின் விகிதாசாரத்துக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எண்ணிக்கை தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2015 அல்லது 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி 3 பாடங்களிலும்...
வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விடயமாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளிடமிருந்து மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய எந்தத் துறைகளிலும்...
சுகாதார சேவையில் வைத்தியர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதாரதுறை தொழிற்சங்கத்துடன் அண்மையில் நாரஹென்பிட்டியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கமைவாக மகப்பேறு, சுகாதார கனிஷ்ட அலுவலக உதவியாளர், குடும்ப சுகாதார சேவை...
அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை இணைத்துக் கொள்வதற்காக எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டைகள் தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. மாவட்ட மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இதற்கான முன்மொழிவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்தார்....
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு- தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27,...
இலங்கை பொலிஸில் பொலிஸ் கான்ஸ்டபிள் / பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் / பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதன்பிரகாரம், விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு பதிவுத்தபாலில் 2017.06.02 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்பதாக விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts