- Saturday
- February 22nd, 2025

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் கௌரவ ஆளுநர்...

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத்...

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய...

அரச சேவைக்கு 20 ஆயிரம் பட்டதாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளுக்கு தமது வல்லமையை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். பட்டதாரிகளிடமிருந்து தேவையான சேவை கிடைக்காமை பெரும் பிரச்சினையாகும்” என்றும் பிரதமர்...

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர் சேவை வகுப்பு 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றியவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு...

பட்டதாரிகளுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 8500 பட்டதாரிகளை இவ்வருடத்தில் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கம் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை...

யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழில் நாடுவோர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவட்ட செயலக தொழில்...

யாழ்ப்பண மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாப் பிரச்சினை இரண்டு மடங்காய் உயர்ந்துள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படியே இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 5.7 சத வீதமாக இருந்த யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 2016 ஆம் ஆண்டு 7 சதவீதமாக அதிகரித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 10.7...

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 194 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் நாளை ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பி.ப. 3 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணக் கல்வி...

3 ஆயிரத்து 800 ஆசிரியர் புதிதாக நியமிக்கப்படுவர் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றில் நேற்று (7) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார். “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில்...

அரச சேவையில் 20,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளே, எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன...

வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் பொதுத்துறையில் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். தனியார் மற்றும் பொதுத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்த...

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்....

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்த 4 ஆயிரத்து 104 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். “இணையம் ஊடாக 3 ஆயிரத்து 425 பேர் பதிவு செய்திருந்தனர்....

கிராம சேவகர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு 2016ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் விபரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 76 பேரும் மன்னார் மாவட்டத்தில் 27 பேரும் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேரும் பரீட்சையில்...

ஜப்பானில் தொழில் வாய்ப்பிற்கான தொழில்நுட்ப பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் ஐ.எம்.ஜப்பான் நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதற்கமைவாக குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மொழித் தேர்ச்சியில் ஜே.எல்.பி.ரி.4 அல்லது என்.ஏ.ரி.4 என்ற தரத்துடனான கல்விச் சான்றிதழைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு பணியாளர் சேவைக்கான தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும்...

அரச முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 202 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சையில் பெற்ற பெறுபேற்றின் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் 202 பேரும் தெரிவாகியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 141 புள்ளிகளும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 133 புள்ளிகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 136 புள்ளிகளும் வவுனியா...

நாட்டில் வெவ்வேறு துறைகளில் 5 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்நாட்டு தொழில் தேவை தொடர்பில் நடத்திய கணக்கெடுப்பின் போது வெவ்வேறு துறைகளில் 4 இலட்சத்து 97,302 வேலைவாய்யப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வேலைவாய்ப்புக்களில் தையல் இயந்திர ஊழியர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இரண்டாவதாக...

பொலிஸ் விசேட அதிரடி படையணியில் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் இம்மாதம் 10 ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானியில் இது தொடர்பான மேலதிக விபரங்களை பார்வையிட முடியும்.

கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களையும் தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களை தாதியர் சேவைக்கும் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாதியருக்கான வெற்றிடம் நிலவுவதால், வைத்தியசாலைகளில் சிரமங்கள் ஏற்படுவதையும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு,...

All posts loaded
No more posts