- Thursday
- November 21st, 2024
பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2018 - 2019 மற்றும் 2020ம்...
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதி நடைபெறவுள்ள ‘குளோக்கல் பெயார் 2023’ கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பங்கேற்புடன் இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில்...
கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தொழில்களை இழந்தோர்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொள்ள முடியாது போனமை, தொழில் தருநர்களால் தொழில்களை இழந்தமை அல்லது கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் வேறு சிரமங்கள் காரணமாக சுய தொழில்களை இழந்த தனியார் பிரிவுகளில்...
விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துதெரிவித்த கௌரவ...
இலங்கை காவல்துறையின் பல்வேறு பதவி நிலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த 12.02.2021 ம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரச வேலைவாய்ப்பு அறிவித்தல்களில் இப்பதவிக்கான முக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன் படி இலங்கைக் காவல்துறையில் நிலவும் காவல்துறை கான்ஸ்டபில் ,பெண் காவல்துறை கான்ஸ்டபிள், காவல்துறை கான்ஸ்டபிள்...
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின்...
கல்வியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 3,772 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் சேவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை புதிய தவணைக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நியமனக்கடிதங்கள் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா...
2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையத்தின் ஊடாக தகவல்களைப் பெறும் திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. அதன்படி, கல்வி அமைச்சுக்கு தகவல்களை வழங்குவதற்கான இறுதித் திகதி வரும் டிசெம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. https://ncoe.moe.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம்...
யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட...
“வடக்கு மாகாணத்தில் பெருமளவு வெற்றிடங்கள் காணப்படும் துணை மருத்துவ சேவைகளுக்கு சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாகாண இளையோர்கள் விண்ணப்பிப்பதன் ஊடாக பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு கிடைக்கும்”இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சுகாதார அமைச்சினால் துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஒன்பது...
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று...
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை...
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் உள்ள இளையோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் சந்தை நாளை வியாழக்கிழமை (ஓகஸ்ட் 27) காலை 8.30 மணிக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தத் தகவலை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த தொழில் சந்தையில்...
தொழில் வாய்ப்பின்றி காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில்...
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதேநேரம், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அந்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் நியமனம் பெறுபவர்கள் செப்டெம்பர் 02ஆம் திகதி தமக்கு அருகில் உள்ள பிரதேச...
ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுளள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 270 பேர் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர். இவ்வாறு தேர்வானவர்களில் அதிக பட்சமாக யாழ்ப்பாணம்...
பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கு அமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொலிஸ் உத்தியோகத்தர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய பதவி நிலைகளுக்கான...
குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 26 066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்...
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை 26ஆம் திகதியில் இருந்து சனிக்கிழமை 29ஆம் திகதி வரை குறித்த நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன. வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக்கே இவ்வாறு நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவள்ள நிலையில், கடிதங்கள் கிராம சேவகர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேர்முகத்தேர்வுக்கு தெரிவு...
Loading posts...
All posts loaded
No more posts