கூகுள் பலூன் செயற்திட்டத்துக்கு மீண்டும் தோல்வி

கம்பியில்லா இணையத்தள வசதியை இலங்கை முழுவதும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் கூகுள் லூன் பலூன் செயற்திட்டம் இன்று மீண்டுமொரு முறை தோல்வியடைந்துள்ளது. சீகிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புர இளைஞர் ஒன்றுகூடல் மைதானத்தில் இருந்து கூகுள் பலூனை வானுக்கு ஏவும் செயற்திட்டத்தின் இரண்டாவது முயற்சி இன்று மேற்கொள்ளப்பட இருந்தது. எனினும் பலூனுக்கு காற்றைச் செலுத்தும் முயற்சியின் போது...

கூகுள் வீதிப் படங்களில் வலி.வடக்கைக் காணோம்!- இடம்பெயர்ந்த மக்கள் கவலை!

கூகுள் நிறுவனம் இலங்கையில் கூகுள் வீதிப் படங்களை வெளியிட்டுள்ள நிலையில், அதில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளைப் பார்வையிட முடியாதுள்ளது. கூகுள் வீதிப் படங்கள் எடுப்பதற்காக கடந்த காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் கூகுள் நிறுவன கார் ஒன்று வீதிகள் அனைத்திலும் சென்றது. ஆனால், அந்தக் கார் வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லவில்லை என்பது...
Ad Widget

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை பாதைப்படம்!

கூகுள் வரைப்படத்தில் (Google Maps) இப்போது இலங்கை பாதை படம்(Street view) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும். கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல...

மீண்டும் பறக்கவிடப்படுகிறது கூகுள் பலூன்!

இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளது. இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை...

பேஸ்புக்கில் குறை!! : கண்டுபிடிதவருக்கு 15000 டாலர் பரிசு!!

பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஹேக்கருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிளிப்கார்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார். பேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்...

இ-மெயிலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா.?

இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம்...

இமெயிலை கண்டுபிடித்தவர் காலமானார்

புறாவின் இறக்கையில் கட்டி கடிதம் அனுப்பியது, குதிரை வீரன் மூலம் தூது அனுப்பியது, பின்நாளில், லாந்தர் விளக்கை ஏந்தியபடி, இரவு-பகல் பாராமல் ஓயாது ஓடிய அரசுப் பணியாளர்கள் மூலம் தகவல் பரிமாறியது, பின்னர் தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உட்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இமெயில்’ எனப்படும்...

ஆளில்லா விமானங்களை தயாரித்து மொரட்டுவ பல்கலை சாதனை!

இலகு ரக விமானங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு. இந்தக் குழுவினால் ஆளில்லா இலகு ரக விமானங்கள் நான்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களைப் பயன்படுத்தி நாட்டில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை கண்டறியவும், வானிலை பற்றிய தகவல்களை அறியவும் விவசாய பயிர்ச் செய்கைகளின் சேதம் குறித்த ஆய்வுளை செய்ய இந்த விமானங்களைப் பயன்படுத்த...

கூகுள் பலூன் குறித்து யாரும் அஞ்சவேண்டாம்! ஹரின் பெர்ணான்டோ

கூகுல் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் துளியளவு முதலீடு கூட இன்றி இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் முன்னெடுக்கிறது. கடந்த காலத்தில் பொது மக்களின்...

இலங்கைக்கு மற்றுமொரு கூகுள் பலூன்

மற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில், முன்னதாக பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட பலூன்...

கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லையாம்!!

கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூகுள் நிறுவனம் இலங்கையில் வை-பை இணைய சேவையை வழங்குவதற்காக இலங்கைக்கு மேல் இணைய சேவையை...

கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது!!

"project loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டன. இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முந்தினம் காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது அனைவரும் அறிந்ததே. விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத...

Google’s balloon அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்தது!!

Project Loon என அழைக்கப்படும் அதிவேக இன்ரநெட் வழங்கும் கூகிள் பலூன் Google’s balloon ஒன்று நேற்றைய தினம் அமெரிக்காவினால் வான்வெளியில் செலுத்தப்பட்டு இலங்கைக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் பரிசோதனைகள் மேற்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் மூன்று பலூன்கள் சில வாரங்களில் இலங்கையை நோக்கி வரும் எனவும் ICTA (nformation and Communication Technology Agency...

மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்

தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க...

“ஒரு நாடு ஒரு தேசம்” மென்பொருள் அறிமுகம்

சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில், “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம், எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் தங்கள் முகப்பு படத்தில் இந்த மென்பொருளை பயனாளர்கள் பயன்படுத்தக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள்

ஊழி­யர்கள் மற்றம் தொழி­லா­ளர்கள் மத்­தியில் தமது உரி­மைகள் மற்றும் கட­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தும் வகையில் Salary.lk இணை­யத்­த­ளத்தில் இலங்­கையின் ஊழியர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய விவ­ரங்கள் தமிழ் மற்றும் சிங்­கள மொழி பெயர்ப்­பு­களை உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக சர்­வ­தேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறி­வித்­துள்­ளது. இலங்­கையின் தொழி­லாளர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய தெளிவான விவ­ரங்­களை இந்த இணை­யத்­தளம்...

உலகத்தின் முதலாவது ஆளுடன் கூடிய தானியங்கி சிறிய ரக விமானம் தயார்

உலகத்தின் முதலாவது ஆளுடன் கூடிய தானியங்கி சிறிய ரக விமானத்தினை(Drone)  சீன நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. உளவு பார்க்கும் சிறிய ஆளில்லா விமானங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.மற்றும் Drone எனப்படும் கீழிருந்து கட்டுப்படுத்தப்படும் சிறிய ரக படமெடுக்கும் விமானங்களை பற்றிக்கேள்விப்பட்டிருக்கின்றோம் பார்த்திருக்கின்றோம் தற்போது Ehang என்ற சீன நிறுவனம் ஒன்று பயணி ஒருவரை காவிச்செல்லக்கூடிய தானியங்கி சிறியரக விமானத்தினை...

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள்

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த அட்டவணையின் ஏழாவது வரிசை பூர்த்தியாகி இருப்பதோடு உலகெங்குமுள்ள அறிவியல் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூலகங்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 114 மற்றும் 116 மூலகங்கள் இணைக்கப்பட்ட பின்னர் ஆவர்த்தன...

பேஸ்புக் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையரின் வயதெல்லை அதிகரிப்பு?

முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியானவர்கள் பல இலங்கையர்கள் முகநூலில் கணக்கை தொடங்குகின்றனர். இவர்கள்...

இனி ரொக்கட்டுக்களும் பூமிக்கு திரும்பும்! சோதனை முயற்சி வெற்றி!

இவ்வளவு காலமும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பயன்படும் ரொக்கட்டுக்கள் மீள பூமிக்கு திரும்புவதில்லை விண்வெளியிலேயே எரிந்து விடும் ஆனால் இனி அவை பூமிக்கு திருப்பப்பட்டு மீள் சுழற்சிப்பாவனைக்கு பயன்படுத்தப்படும். அதற்கான சோதனை ‪#‎SpaceX‬  தனியார் விண்வெளிக்கலங்கள் உற்பத்தி நிறுவனத்தால் நேற்று (21) வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.  இதன் மூலம் விண்வெளிப்பயணத்துக்கான செலவு குறைக்கப்படுகின்றது. ரொக்கட்டுக்கள் புவியீர்ப்பு விசைகெதிராக...
Loading posts...

All posts loaded

No more posts