- Sunday
- February 23rd, 2025

இந்திய ரசிகர்கள் போல் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுவதை இலங்கை அணி ரசிகர்கள் நிறுத்தி விட்டு இலங்கை கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலடித்து அடித்து வசைபாடுமாறு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள பெற்றறோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...

இந்தியா-இலங்கை இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரினை கைப்பற்றியது. கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பகலிரவு போட்டியாக இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 217...

இலங்கை கிரிக்கட் அணிக்கு தலைவராக சாமர கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுடனான அடுத்த இரண்டு போட்டிகளுக்கே அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவிற்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினாலேயே சாமர கப்புகெதர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்து வீசுவதற்கு...

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது போட்டியில் இலங்கையின் புதுமாப்பிள்ளையான அகில தனஞ்சய சுழலில் மிரடட்ட தடுமாறிய இந்திய அணியை தனது அனுபவத்தினால் வழிநடத்திய மகேந்திர சிங் டோனி, இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி வழிவகுத்தார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2 ஆவது போட்டி கண்டி...

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நேற்றைய தினம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை படு தோல்வியைத் தழுவியிருந்தது. இதனைத் தொடர்ந்து அணியின் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு எதிராக ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அணி வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை...

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதற்கமைய முதலில் களமிறங்கிய இலங்கை அணி 43.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 216...

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தங்களது ஓய்வறையில் பிஸ்கட் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அதனை அணி முகாமையாளர் அசங்க குருசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவுடனான கண்டியில் இடம்பெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் துடுப்பாடிக் கொண்டிருந்த இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் பிஸ்கட் கேட்டுள்ளார். ஆயினும் அவருக்கு பிஸ்கட்...

கிரிக்கெட் பந்து தலையில் தாக்கி பாகிஸ்தானின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான சுபய்ர் அகம்மட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிராந்தியங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த போதே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் தங்களது பாதுகாப்புக்கென அணியும் தலைக்கவசத்தை சுபய்ர் அகம்மட் அணிந்திராமையினாலேயே...

பல்லைக்கழகங்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட தொடரில் பெண்கள் பிரிவில் யாழ் பல்கலைக்கழக அணி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளது. சப்ரகமுவ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டித்தொடரில் யாழ் பல்கலைக்கழக அணியுடன் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக அணி போட்டியிட்டது. இந்த போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணி இரண்டாம்...

இந்திய கிரிக்கட் அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. இதேவேளை எமது கிரிக்கட் அணியில் இடம்பெற்றுள்ள தற்போதைய வீரர்களும் திறமைசாலிகளே. இவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது . இவர்கள் தவிர வேறுயாரும் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை...

இந்தியா அணிக்கெதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா இந்தியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை படு மோசமாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், பல மாற்றங்களுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கு முகம் கொடுக்கவுள்ளது. டெஸ்ட் போட்டியின் போது காயம்...

தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டுவருகின்றது இலங்கையணி, இதனால் கிரிக்கட்ட சபையின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் நாங்கள் வெல்லவேண்டுமானால் கிரிக்கட் நிர்வாகத்தில் உள்ளவர்களை மாற்றவேண்டிய தேவை தற்போதுள்ளது. இதனை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின் ஊடகவியளார்களின் கேள்வியின் போதே தெரிவித்தார்....

இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார். சில விடயங்களை வௌிப்படையாக பேச முடியாது என்ற போதிலும் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். அனைத்து அணிகளும் பின்னடைவை சந்திப்பதாகவும், டெஸ்ட், ஒருநாள் மற்றும்...

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 352 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில், இந்திய அணியால் போலோ-ஓன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இந்தியாவின் பந்துவீச்சுக்கு...

இந்திய அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா, நேற்று இலங்கை அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாராவின் பந்து வீச்சில் (116–வது ஓவர்) 4, 4, 6, 6, 6, 0 என்று ஒரே ஓவரில் 26 ஓட்டங்கள் குவித்தார்.இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில்...

இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தினேஸ் சந்திமால் தலைமையிலான அணியில் உப்புல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்ஜலோ மெத்திவ்ஸ், லஹிரு திரிமான்னே, தனஞ்ஜய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லஹிரு குமார, விஸ்வ பெர்ணாண்டோ,...

கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என சவால் விடுத்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர்...

கிளிநொச்சி பளையை சேர்ந்த செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் 23வயதுடைய வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை இன்று (09.08.2017) காலை 9மணியளவில் வன்னி பிராந்தி பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்திற்கு அழைத்து கலந்துரையாடிய வன்னி பிராந்திப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவரது பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும்...

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 183 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக நிர்ணயித்த 622 ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் 439 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி உள்ளது. தற்போது இலங்கை அணி போலே ஓன் முறையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில்...

இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் தடுமாறினாலும் வலுவான இலக்கை நோக்கி இந்திய அணி நகர்ந்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கம் செலுத்திவருகின்றது இந்திய அணி. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில்...

All posts loaded
No more posts