அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை!

43வது தேசிய விளையாட்டு விழா மாத்தறை - கொடவில மைதானத்தில் நேற்யை தினம் பிரதமர் ரணில்விக்கிரம சிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர ஆகியோர் தரலமையில் ஆரம்பமானது. விழாவில் முதல் நாள் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய சாதனையை நிலைநாட்டினார். வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் தேசிய...

ஆஸிக்கெதிரான 2 ஆவது போட்டியும் இந்தியா வசம்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 50 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில்வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது....
Ad Widget

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

அபுதாபியில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராக லஹிரு திரிமான்னே கடமையாற்றவுள்ளார். இவர்கள் தவிர, திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரோஷென் சில்வா, நிரோஷன்...

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் ஒப்புதலையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய தெரிவுக் குழுவின் தலைவராக கிறேம் லெப்ரோய் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் காமினி விக்ரமசிங்க, ஜெரில் வோட்டர்ஸ், சஜித் ஃபெர்னாண்டோ மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், எதிர்வரும் வாரம் ஐக்கிய அரபு...

இலங்கை உலகக் கிண்ணத்தில் விளையாட நேரடித் தகுதி!

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை அணி நேரடித் தகுதியை பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து அணிக்கொதிராக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோல்வியடைந்ததையடுத்து இந்த அதியசம் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச...

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது. இதைதொடர்ந்து, ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள்...

இலங்கை தெரிவுக் குழுவுக்கு புதிய தலைவர் கிரகம் லெப்ரோய்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரகம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயற்பட்ட ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் இலங்கை அணிக்காக 9 டெஸ் போட்டிகளிலும் 44 ஒரு நாள் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது

கொழும்பு வீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோஹ்லி!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் திறமை குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோஹ்லியின் செயற்பாடு குறித்து இலங்கை மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்து அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகிலுள்ள வீதியில் கோஹ்லி கிரிக்கெட் விளையாடிய விதம் அனைவரினதும் கவனத்தையும்...

கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்!!

சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி நகரின் மத்தியில்...

இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

இடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பதவியிலிருந்த சனத் ஜயசூரிய பொறுப்பிலிருந்து கடந்த 06 ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்தே, அரவிந்த டி சில்வா எதிர்வரும் 3 மாத காலத்துக்கு அப்பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் கிரிக்கெட்...

கோலி, மணிஷ் பாண்டே அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று நடைபெற்றது. பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த போட்டி மழை...

இலங்கை வந்த இந்திய கிரிக்கெட் வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

17 வயதின் கீழ் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை வருகை தந்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சி பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை ஐந்து வீரர்கள் நீச்சல் தடாகத்தில் குளிக்கச் சென்ற வேளையில், இந்தியாவின் குஜராத் பகுதியைச் சேர்ந்த சோனா நரேந்திரா...

இலங்கையை வெள்ளையடிப்பு செய்து சாதனை வெற்றி படைத்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வெற்றிபெற்று தொடரை வெள்ளையடிப்புச் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச்செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் சொந்த மண்ணில் வைத்து...

உலகக் கிண்ணத் தகுதியை இலங்கை இழந்து விட்டதா?

இந்­தி­யா­வுக்கு எதி­ரான 5 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 4–0 என இழந்­துள்­ளதால், உல­கக்­கிண்­ணத்­துக்கு நேர­டி­யாக தகுதி பெறு­வதில் சிக்­கலை சந்­தித்­துள்­ளது. ஐ.சி.சி. தர­வரிசைப் பட்­டியலில் 87 புள்­ளி­க­ளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்­திலும், 78 புள்­ளி­க­ளுடன் மே.இ.தீவுகள் அணி 9ஆவது இடத்­திலும் உள்­ளன. இங்­கி­லாந்து அணி போட்­டியை நடத்தும் நாடு...

தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரியைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் சாதனை

தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கோல் ஊன்றிப் பாய்தலில் புதிய சாதனை ஒன்றை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரியைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் நாட்டியுள்ளார். தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறும தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 3.34 மீற்றர் உயரத்தில் கோல் ஊன்றிப் பாய்ந்து இந்த சாதனையை அவர் நிலை நாட்டியுள்ளார்.

அதிரடிப்படை பாதுகாப்பின் மத்தியில் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியின் போது 1,000 பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட போட்டியில் 3 போட்டிகள் நிறைவடைந்த...

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பதவி விலகியது

சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் ஒப்படைத்துள்ளனர். அண்மைக் காலமாக, இலங்கை கிரிக்கெட் அணியினர் சந்தித்து வருகின்ற தொடர்ச்சியான தோல்வியின் காரணமாக, அதிகாரிகள், விளையாட்டு இரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்களால் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த முடிவினை, ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட்...

தலைவராக லசித் மாலிங்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 4 ஆவது ஒருநாள் போட்டிக்கே லசித் மாலிங்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி மீது தண்ணீர்ப் போத்தல் வீசியோரை கைது செய்ய நடவடிக்கை!!!

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில், கண்டி-பல்லேகல சர்வதேச மைதானத்தில், கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்துத் தண்ணீர்ப் போத்தல்களை வீசிய, இரசிகர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே, இந்த சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அணியின் வீரர்களை நோக்கி, தண்ணீர்ப்...

இலங்கை வீரரை காப்பாற்றிய தோனி? : அதிர்ச்சியில் இந்திய அணி

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தலை சிறந்த அதிரடி, நிதான துடுப்பாட்டம் மட்டுமல்லாது சிறப்பான விக்கெட் காப்பாளருமான தோனி விட்ட தவறு குறித்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை வீரர் சந்திமாலை காப்பாற்றும் செயலில் தோனி ஈடுபட்டாரா என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறித்த போட்டியில்...
Loading posts...

All posts loaded

No more posts