- Thursday
- January 23rd, 2025
இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் தொடங்கி மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளன....
இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அவர், அனுப்பிவைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரிய கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுக்குழு...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் பொறுப்பேற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரிக்கி பொன்டிங் விளையாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் டுவெண்டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பயிற்றுவிப்பு துறையில் கால் பதித்துள்ளார்....
எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு இம்முறை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம்:– முதல்முறையாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் வீரர் கெய்ஸ் 215 ஓட்டங்களைக் குவித்தார். இதில் குறைந்த பந்தில் இரட்டை சதம் எடுத்து...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு தலைவராக சிதத் வெத்தமுனி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செயலாளராக பிரகாஷ் ஷாப்டர், பொருளாளராக லுசில் விஜேவர்தன, துணைத் தலைவராக குஷில் குணசேகர, கபில விஜேகுணவர்தன ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக்குழுவின் பதவிகாலம் நிறைவுபெறுவதால் குறித்த இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தக்...
11வது உலக கோப்பை தொடர் நேற்றுடன் இனிதே நிறைவுபெற்றது. ஆஸ்திரேலியா, 5வது முறையாக சாம்பியனாகிவிட்டது. இந்த உலக கோப்பையில் பரிசு தொகை மதிப்பு மொத்தம் 71 கோடியாகும். 2011 உலக கோப்பை பரிசு தொகையைவிட 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதில், சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 3,975,000 பரிசு தொகையாக கிடைத்தது....
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்ளக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இலவச wi-fi சேவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆண்களுக்கான போட்டியில், மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை சம்பியனாகியது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் நடத்திய கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இவ் இறுதிப்போட்டியில்...
நடைபெற்றுவரும் 11ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப்போட்டியில், தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதல் முறையாக உலக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஓக்லண்ட மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(24) ஆரம்பமான அரையிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா -நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயசுழற்றிசியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் இடையில் மழை குறுக்கிட, 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட...
Matrix Homes அனுசரணையுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் கல்லூரின் 125ம் ஆண்டை முன்னிட்டு நாடாத்தப்படுகின்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று (21-03-2015) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வெகு விமர்சையாக யாழ் இந்துக் கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெண்களுக்கான இராமநான் கல்லூரினை எதிர்த்து திருக்கன்னியர் மட கல்லூரி அணி மோதவுள்ளது....
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. சிட்னியில் நிறைவடைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனையடுத்து துடுப்புடன் களமிறங்கிய அந்த அணியினர் தென்னாபிரிக்க வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாது வரிசையாக வௌியேறினர்....
இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி இன்று (18) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்று வருகிறது. உலகக் கிண்ணத் தொடரில், முதலாவது காலிறுதிப் போட்டி இன்று பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில்...
2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப்போட்டியில் வெற்றிபெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார். அவர், தனது வாழ்த்துக்களை ஸ்கைப் ஊடாக தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆஸ்திரேலியாவில் 3 காலிறுதிப் போட்டிகளும்,...
ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று இலங்கை வீரர் குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார். ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக ஹோபார்டில் நடைபெற்றுவரும் போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். உலகக்கிண்ண போட்டிகளில், இங்கிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இவர் ஏற்கெனவே மூன்று சதங்களை பெற்றுள்ளார். இதேபோல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக...
அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியை இந்திய அணி வென்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் டோணி 3 சாதனைகள் படைத்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தான் விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் இந்தியா...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள...
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 32ஆவது போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. 377 ஓட்டங்களை இலக்காக கொண்டு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 312 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் முன்னதாக நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள்...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி - சென்ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது. மத்திய கல்லூரி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சமப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் எடுத்த நடவடிக்கைகள் யாவற்றையும் தமது வியூகத்தினால் முறியடித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்...
ரொம்ப வினோதமாக இருந்தது அந்தக் காட்சி. கேப்டன் டோணி, நேற்று பேட் கட்டிக் கொள்ளாமல் சில பந்துகளுக்கு கீப்பிங் செய்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். எல்லாம் சில்லித்தனமான காரணத்திற்காகத்தான்.. பயந்துடாதீங்க.. சில்லி பாயிண்ட்டில் பீல்டிங் செய்த அஜிங்கியா ரஹானேவுக்காக தனது பேடைக் கழற்றிக் கொடுத்து விட்டு தான் வெறும் காலுடன் கீப்பிங் செய்தார் டோணி. அஸ்வின்...
பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி, இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைநத் பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்பதுதான் அந்த சாதனையாகும். இதன் மூலம் உலகின் முன்னணி அதிரடி வீரர் தான்தான் என்பதை அப்ரிடி பறைசாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக...
Loading posts...
All posts loaded
No more posts