- Thursday
- January 23rd, 2025
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து மற்றும் சுழல்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்துள்ளனர். காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் மதியபோசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்...
இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா பங்குபற்றி விளையாடவுள்ள அவரது இறுதி போட்டியை பார்வையிடுவதற்கு தென்மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் இந்தியாவுக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள போட்டியிலேயே இவ்வாறு இலவச டிக்கெட் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை கிரிக்கெட் வீரர்கள், ஆண்...
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்துகொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை...
வடமாகாணத்திற்கான சம்பியன்சிப் உதைபந்தாட்ட போட்டி இன்று வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தால் தினச்செய்தியின் அனுசரைணையுடன் இடம்பெறுகின்றது. இந்த உதைபந்தாட்ட போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக, H.M.G.S பளியெக்கார (ஆளுனர் வடமாகாணம்) அனுர டீ.சில்வா (இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர்) திரு.K.T.ராஜசிங்கம் (தினச்செய்தி ஆசிரியர்) A.நடராஜா (இந்திய துணைத்தூதுவர்)மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த (யாழ் மாவட்ட கட்டளைத்...
ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3வது வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது. இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு...
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் குருநாத் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நீதிபதி லோதா இந்த அதிரடி...
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முன்னதாக நிறைவடைந்த இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் சமநிலையில் இருந்த இரு அணிகளும், கடந்த மூன்றாம் திகதி மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில்...
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜமொன்றினை மேற்கொண்டுள்ளனர். இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தலைமையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தக்குழுவில் செயலாளர் பாலேந்திரா உப தலைவர்களான பிரிகேடியர் ஹாரியவசம் நளின் றொபேட் பீரிஸ் மற்றும் உதைப்பந்தாட்டப் மத்தியஸ்தர் சங்க இணைப்பாளர் யாப்பா மற்றும்...
மன்னாரில் முதற் தடவையாக ஒலிம்பிக் தின நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை மாலை நான்கு மணியளவில் மன்னர் தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இருந்து வைபவரீதியாக ஆரம்பமாகியது. மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாடசாலைகளின் மாணவ மாணவிகள் ஒலிம்பிக் தீபத்தையும் அதனை தொடந்து ஒலிம்பிக் சின்னம் மற்றும் கொடியை ஏந்தியவாறு நடைபவனியாக சென்றனர். மன்னார் பிரதான பாலத்திலிருந்து...
இம்முறை வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா 2016வை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 8 போட்டிகளை யாழ் விளையாட்டு கட்டிடத் தொகுதியிலும் மேலும் 14 போட்டிகளை கிளிநொச்சி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியிலும் நடத்தப்படவுள்ளன. ஹொக்கி, ஜிம்னாஸ்டிக், மற்றும் கரையோர கரப்பந்து போட்டிகள் யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வௌியே நடத்த...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சில நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமாயின் தேர்வாளர்கள் சிலருக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதென முறைப்பாடுகள் முன்வைக்கப்படடன....
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இணைந்து, முன்னாள் வீரர்களுக்கான டி20 தொடர் நடத்த உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகமெங்கும் புகழ் பெற்றுள்ளது. ஆனால், முன்னாள் வீரர்களுக்கு இதில் இடம் கிடைப்பதில்லை. அவர்களை ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்து கை கழுவி விடுகின்றன ஐபிஎல் நிர்வாகங்கள். இதனால்...
இளவாலை சிறுவிளானைச் சேர்ந்த அப்புக்குட்டி இராஜேந்திரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு புதிய சாதனைகளை படைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்க இவர் திருமணம் ஆகிய போதிலும் தனது விளையாட்டுத் துறையின் பால் உள்ள ஆர்வத்தைக் கைவிடாத நிலையில் காணப்படடார். இந் நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர்...
சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்காக நான்காவது ஆண்டாக நடைபெற்ற பெரும் துடுப்பாட்டப் போட்டியில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி ஒரு இனிங்ஸ் மற்றும் 82 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையேயான இரண்டு நாள் போட்டியாக நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான போட்டி யாரும் எதிர்பாரா வண்ணம்...
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி - கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 4ஆவது வருட கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை (24) நாளை சனிக்கிழமை (25) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிவகுருநாதன் கிண்ணத்துக்காக இரண்டு நாட்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுகின்றது. இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா அணி...
ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது (award for outstanding contribution to sport) வழங்கப்பட்டுள்ளது. நேற்று லண்டனில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கிரிக்கெட் சபைக்கான நிதி உதவியை சர்வதேச கிரிக்கெட் சபை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே நிதி நிறுத்தப்பட்டமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு கலைந்தது. இந்நிலையில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்ட்டது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் இன்று காலமானார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 63 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டியில் 2000 ரன் எடுத்து, 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் இவராவார். ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா 28...
ராவணனை போல இந்திய அணி கேப்டன் டோணி அழியப்போகிறார் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ் சிங் சாபமிட்டு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. அவரை அணியில் சேர்க்காமல் இருக்க டோணி தூண்டுதல் காரணம் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பேட்டியளித்து...
Loading posts...
All posts loaded
No more posts