- Sunday
- November 24th, 2024
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணான சிதம்பரநாதன் சுரேந்தினி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார். இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை. நாக்பூர் (நவ.25-29), டெல்லி (டிச.3-7) டெஸ்ட் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன்,...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜான்சன். 34 வயதான இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். நியூசிலாந்துக்கு எதிராக பெர்த் மைதானத்தில் முடிந்த டெஸ்டோடு ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். மிச்சேல் ஜான்சன் 73 டெஸ்டில் விளையாடி 311 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சராசரி 28.52...
கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடரின் 2வது போட்டியிலும் வார்னே வாரியர்ஸ் அணியிடம் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி தோல்வியடைந்ததால் இந்த தொடரை இழந்தது. ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும், 3 டி20 போட்டிகள் கொண்ட, கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடர் அமெரிக்காவில் 3 நகரங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ்...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது....
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அசத்தி வரும் இலங்கை வெற்றிகளை குவித்து வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி, ஒருநாள் தொடரையும் முழுமையாக 3-0 என்று கைப்பற்றியது. இந்நிலையில் முதல் டி20 போட்டியிலும் அசத்திய இலங்கை அணி, 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நாங்கள் சிறப்பாக...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர், புதிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசியில் சேர்மன் பதவி வகிக்கும் இந்தியாவின் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. அதுவரை சஷாங்க் மனோகர் அந்தப் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி...
கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், வார்ன்’ஸ் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் மூன்று நகரங்களில் டி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் தலைமையிலான...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இழந்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட...
தென் ஆப்பிரிக்காவுக்கான எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 3-ம் நாளான இன்று இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயிக்க 218 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி...
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் ஆகியோர் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் தொடரை நடத்துகிறார்கள். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி நியூயார்க் நகரில் உள்ள சிட்டி பீல்டு மைதானத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 11.30 மணிக்குத் தொடங்குகிறது. சச்சின்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களில் சுருண்டதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இந்தியா ஆட்டநேர முடிவில் 40...
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. தொடக்க வீரர் முரளி விஜய் மட்டும் தாக்குப்பிடித்து ஆடி அதிகபட்சமாக 75 ரன்கள் விளாசினார். முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவும் தடுமாறியது....
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது. நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இந்தநிலையில் அந்த அணி 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 149 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மழை...
‘சச்சின் தெண்டுல்கர் தனது திறமைக்கு தகுந்தபடி விளையாடவில்லை. கருணையின்றி அவர் அதிரடி ஆட்டம் ஆடி இருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்து இருக்கலாம். மும்பை கிரிக்கெட் பாணியில் அதிகம் மூழ்கி விட்ட அவர் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்று அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். சதத்தை இரட்டை சதம், முச்சதம், 400 ரன்களாக எப்படி மாற்றுவது என்பதை...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை, மழை இடையில் குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 26 ஓவர்களுக்கு...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கியவர் வீரேந்திர சேவாக். இவர் தனது பிறந்த நாளான கடந்த 20-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் சச்சினுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது கிளார்க் தொடர்புடைய ஒரு சம்பவத்தை தற்போது...
2016 ஆம் ஆண்டுக்கானதும், 13 ஆவதுமான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷில் நடாத்த கிரிக்கெட் சம்மேளம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சிங்கப்பூரில் கடந்த செவ்வாயன்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு...
ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் ஹர்பஜன் சிங், கீதா பஸ்ரா திருமணம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தின் போது, வீட்டுக்கு வெளியே நடந்த வைபவத்தை அங்கு குழுமியிருந்த சில நிருபர்கள் தங்கள் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இதைப் பார்த்த பவுன்சர்கள் சிலர் நிருபர்களை தாக்கி, அவர்களது கேமராவையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த...
Loading posts...
All posts loaded
No more posts