இந்தியா அபாரம்: சுருண்டது பாகிஸ்தான்

பாண்ட்யாவின் அசத்தலான பந்துவீச்சால் 83 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. பங்களாதேஷில் நடக்கும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. பாகிஸ்தானுக்கு தொடக்கம் கொடுத்த ஹபீஸ் (4), சர்ஜில்கான் (7),...

பாகிஸ்தானைவிட இந்திய அணி வலுவானது: கபில் தேவ்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுவதால், இந்த போட்டியை இருநாட்டு ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு கபில்...
Ad Widget

‘சென்னை சுவாக்கர்ஸ்’ அணியை வாங்கிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்

ஐ.பி.எல். சி.சி.எல். போன்று சின்ன திரை நடிகர்கள் விளையாடும் பி.சி.எல். எனப்படும் பாக்ஸ் கிரிக்கெட் 'லீக்' போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப்போட்டியில் 10 அணிகள் விளையாடு கின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாங்கியுள்ளார். சன்னி லியோன் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்தி...

வங்கதேசம் வெற்றி !

ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆசிய கோப்பை இருபது ஓவர் போட்டிகள் வங்கதேசத்தில் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை இலகுவாக வெற்றி கொண்டது இலங்கை

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. அது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டியில். இந்தப் போட்டியில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நேற்றய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு...

பங்களாதேஷை எளிதாக வென்றது இந்தியா

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நேற்று தொடங்கியது. மார்ச் 6–ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள்...

ஆசிய கிண்ணத் தொடர் நாளை ஆரம்பம்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை முதல் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. நடப்புச் சம்பியனான இலங்கை அணி முதல் போட்டியில் வரும் வியாழக்கிழமை (25) மிர்பூரில் விளையாடவுள்ளது. தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணியுடனேயே இலங்கை விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் ஒரு...

நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது!

நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை தனதாக்கி சாதனைபுரிந்து வரும் ஈழச் சிறுமி தனுஜா ஆழிக்குமரன் ஆனந்தன் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் தனது நீச்சல் திறனால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது திறமைக்கு மதிப்பளித்து ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) வல்வை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் 2015 ஆம்...

டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து மெக்கல்லம் புதிய வரலாற்றுச்சாதனை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள...

இலங்கை கிரிக்கட் அணியினரை சந்தித்தார் பொன்சேகா

இலங்கை கிரிக்கட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கட் நிர்வாக சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு சென்ற பீல்ட் மஷல் சரத் பொன்சேகா, யுத்த காலத்தில்...

186 பதக்கங்களுடன் நாடு திரும்பினர் இலங்கை வீரர்கள்!

இந்தியாவின் கௌகாத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விட்டு, விசேட விமானம் மூலம் நாடு திரும்பிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இவர்களை பெற்றோலிய மற்றும் கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜகருணா, இஷாக் ரஹ்மான் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள்...

ஷேன் வார்ன் : சச்சினிடம் அடி.. அனகோண்டா பாம்பிடம் கடி..

டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில், அனகோண்டா வகை பாம்பிடம் கடி வாங்கியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இருப்பினும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, 'ஐயம் ஏ செலப்ரட்டி.. கெட் மீ அவுட் ஆப் ஹியர்' என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியொன்றில்...

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி விபரம் இதோ!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண மற்றும் ஆசியக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லசித் மலிங்க (அணித் தலைவர்) அஞ்சேலோ மத்தியுஸ் (துணைத் தலைவர்) தினேஷ் சந்திமால் திலகரத்ன டில்ஷான் நிரோஷன் டிக்வெல்ல ஷேகான் ஜெயசூரிய சாமர ஹப்புகேதர மிலிந்த சிறிவர்த்தன டசுன் சானக்க நுவான் குலசேகர துஸ்மந்த சமீரா திஸர...

இலங்கை வீரர்களுக்கு சிரமம் – இந்திய அதிகாரிகளே நேரடி பொறுப்பு

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வட மாகாண அமைச்சு உதவவில்லை! சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர் ஆதங்கம்

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள 100 கிலோ மீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டத்தில் பங்கேற்க செல்லும் வீரருக்கு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு எவ்வித உதவிகளையும் செய்யாத நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த குமார் நவநீதன் என்ற வீரர் எதிர்வரும் 20ம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவுள்ள தாய்லாந்து பாங்கொக்...

தனக்கு சிவப்பு அட்டைகாட்டிய நடுவரை சுட்டு கொன்ற கால்பந்து வீரர்

அர்ஜென்டினா நாட்டில் உள்ள கேம்போடிம் லா பிரிபேரா மாகா ணத்தில் உள்ள கார்டோபாவில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார். இதனால் அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார். ஆத்திரம் அடைந்த அந்த...

தெற்காசியாவின் வேகமான மனிதர், மங்கை இலங்கையில்

இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் 100m ஓட்டத்தில் இலங்கை வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் தெற்காசியாவில் மிகவும் வேகமான மனிதர் மற்றும் மங்கை எனும் பெருமையை இலங்கையின் ஹிமாஷா இஷான் மற்றும் ருமேஷிகா ரத்நாயக்க ஆகியோர் பெற்றுள்ளனர். அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி மற்றும் மேகாலயா மாநிலத் தலைநகர்களின் 12ஆவது...

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் மே.தீவுகள் வசம்

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததால் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்தியாவை அந்த அணி 145 ஓட்டங்களில் சுருட்டியது. இதனால் 146...

இலங்கையை இலகுவாக வென்றது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி, தோல்வியைத் தழுவியுள்ளதோடு தொடரையும் பறிகொடுத்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. இந்தநிலையில், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய...

இரட்டைக் குழந்தைகளுடன் சென்று தெற்காசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற இலங்கை வீராங்கனை!

அண்மையில் பிரசவித்த தனது இரட்டைக் குழந்தைகளுடன் தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு சென்று வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார் இலங்கை வீராங்கனை. உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனைதெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில்...
Loading posts...

All posts loaded

No more posts