- Wednesday
- January 22nd, 2025
உலக உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உடற்கட்டழகர் போட்டியில் 100 கிலோ கிராமுக்கு மேற்பட்டோர் பிரிவில் தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான இலங்கைத் தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் வெற்றி பெற்றுள்ளார்....
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த மதுஷன் மற்றும் விஜயகாந் ஆகியோருக்கே அந்த இடம் கிடைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியத் தொடருக்கான இலங்கை அணியில்...
கிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் ; ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்
கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி தனது மோசமான செயலை வெளிக்காட்டியுள்ளதால் அவ்வணியின் தலைவர் ஸ்மித், உபதலைவர் வோர்னர் ஆகியோர் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன் அணித் தலைவருக்கு அபராதமும் போட்டித் தடையும் மற்றைய வீரரான போன்கிராப்ட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கே இவ்வாறு அபராதமும் தடையும் மேற்கண்ட வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது....
இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு பந்தில் 6 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுகளத்தில் இருந்த டினேஷ் கார்த்திக் அந்த ஒரு பந்தை எதிர்கொண்டு 6...
கிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன. நேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமையைக் கூட மறக்கும் வகையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள், வாக்குவாதம், சர்ச்சைகள்...
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி...
சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான நேற்றய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை...
2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை...
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஐந்தாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்குமிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ் மத்தியகல்லூரி வெற்றிபெற்று சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு கல்லூரிகளுக்கும் இடையிலால் இடம்பெறும் 112 ஆவது கிரிக்கெட்...
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் யாழ். இந்துக் கல்லூரிக்கும் இடையிலான ‘இந்துக்களிள் சமர்’ யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நடந்துமுடிந்துள்ள 8 போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மூன்று தடவைகள் வெற்றிபெற்றுள்ளதுடன், யாழ். இந்துக் கல்லூரியினால் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது . நான்கு போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன. இந்த போட்டியில் நாணய...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும். இதுவரை நடந்து முடிந்த 111 ஆட்டங்களில் 40...
சுதந்திரக் கிண்ணத் தொடரின் லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 18.4 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கையின் 70 ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடர் நடைபெற்று...
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை...
சுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் சபை தெரிவித்துள்ளது. சுதந்திர கிண்ண ரி 20 கிரிக்கட்போட்டித்தொடர் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை இந்திய அணிகள் இன்று மோதுகின்றன. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைத்தானத்தில் இன்று நடைபெறவுள்ளது. விளையாட்டு மைதான நுழைவாயிலில் ஏற்படும் நெருக்கடியை...
தேசிய ஒலிம்பிக் குழவின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலிலேயே தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், ஆசிய டென்னிஸ் சங்கத்தின் தற்போதைய பிரதி தலைவராகவும் கடமையாற்றுகின்றார். இதேவேளை,...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் பயிற்சியின் கீழ் மற்றுமொரு பெறுமதிமிக்க வெற்றியினை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டுகளாக 3 வகை கிரிக்கெட்டிலும்பெரும் பின்னடைவை சந்திந்து வந்த இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் தலைமைப் பயிற்சியின் கீழ்...
இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி...
Loading posts...
All posts loaded
No more posts