- Monday
- November 25th, 2024
'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் விராத் கோஹ்லி அரை சதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாவில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 'பிரிவு-2' லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை பெய்ததால், போட்டி ஒரு...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடி, 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்களை எடுத்து,...
உபாதைக்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இந்தியா சென்றிருந்த லசித் மாலிங்க கடந்த போட்டியில் பங்குபற்றி இருக்கவில்லை. முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவரால் போட்டியில்...
சூப்பர் 10 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. தர்மசாலா, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய அஸ்கர் (Asghar Stanikzai) 62 ஓட்டங்களை விளாசினார். பின்னர், 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை...
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டியில் கெயிலின் சிக்ஸர் மழையில் இங்கிலாந்து அணியை மேற்கிந்திய தீவுகள் அணி தோற்கடித்தது. நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182...
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற...
இந்தியாவின் நாக்பூரில் ஆரம்பமான உலகக் கிண்ண 'ருவென்டி 20' சுப்பர் 10 சுற்றில் இந்திய - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் போது அறிமுக வீரரான சாண்டனரின் அபாரமான பந்துவீச்சால் 79 ஓட்டங்களுடன் இந்திய அணியை சுருட்டிய நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதால் நியூசிலாந்து அணி 3...
உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு '96 கொண்டாடுவோம்' எனும் தலைப்பின் கீழ் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் விளையாட்டுப்பிரிவு சேவ் த ஸ்போர்ட் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு '96 கொண்டாடுவோம் - கிரிக்கெட் பயிற்சி முகாம்' நாளை மறுநாள் (18) தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா...
ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் புதிய தெரிவுக்குழுவினை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கடுமையாக சாடியுள்ளார். உபாதையில் பாதிக்கப்பட்டுள்ள தம்மை அணியில் இணைத்துக் கொண்டமை ஓர் பிழையான தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழுவின் தலைவராக முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா கடமையாற்றுவதுடன், உறுப்பினராக குமார் சங்கக்கார கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காலில்...
இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளின் பொருட்டு அணியை தேர்வுச் செய்த முறை தொடர்பாக தான் கவலை கொள்வதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். இந்நாட்டில் வழமைக்கு மாறான முறையில் அணி தேர்வு இடம்பெற்றுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார். கிரிக்கெட் போட்டி தொடர்பாக போதிய அறிவற்ற...
மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை இலங்கை கிரிகெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும், 25 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் யாழ். புனித பத்திரிசியார்...
வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 110ஆவது போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. முதலாம் நாளில் இரு அணிகளுமே கடுமையான போட்டி வெளிப்படுத்தியதோடு, சென். ஜோன்ஸின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள யாழ். மத்தி, சிறியளவிலான முன்னிலையைப் பெற்றுள்ளது....
யாழ். புனித சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான ‘வடக்கின் சமர்’ என்றழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் 110ஆவது அத்தியாயம் இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. குறித்த சமரை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கப்பல்கள் மற்றும் துறைமுக அமைச்சரான அர்ஜீன...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு தர்மசாலாவில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து-ஓமன் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை வீசிய ஓமன் சுழற்பந்து வீச்சாளர் அஜய் லால்செட்டா ரன் கொடுக்காமல் மெய்டனாக வீசினார். இதன் மூலம் ஒரு அணியின் அறிமுக 20...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 8 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. 16 அணிகள் இடையிலான 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. சூப்பர்–10 சுற்றுக்கு தகுதி பெறும் எஞ்சிய இரு அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் தற்போது...
இலங்கை கிரிக்கெட் சபையின் நடவடிக்கை காரணமாக, இலங்கையின் இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து லசித் மலிங்க விலகினார் என முன்னாள் பிரதம தேர்வாளர் கபில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் பதவி விலக்கப்பட்ட தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த கபில விஜேகுணவர்தன, பதவி விலக்கப்பட்ட விதம் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். 'பொருத்தமான எந்தவிதக் காரணங்களையும்...
இந்தியாவில் நடக்க இருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, இந்தியா செல்வதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. போட்டி நடக்கும் இடத்தில் முழு பாதுகாப்பை உறுதி செய்வதாக இந்திய அரசு உத்திரவாதம் அளித்தால் மட்டுமே பாக். வீரர்களை இந்தியா அனுப்ப முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உலகக்...
முஹமட் ஷஷாட், ஸ்ரனிகாஷியின் ஆரம்ப அதிரடி ஆட்டம் கைகொடுக்க ஸ்கொட்லாந்து அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். ருவென்ரி- 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நேற்று இந்தியாவில் ஆரம்பமானது. இதில் ஐ.சி.சி. தரவரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் சுப்பர்-10 சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. மீதமிருக்கும் இரு இடங்களையும் பிடிக்க...
Loading posts...
All posts loaded
No more posts