Ad Widget

ஹஷான் திலகரத்னவின் மனைவிக்கு மகளிர் கிரிக்கெட் அணியில் பதவி

இலங்கை கிரிக்கெட்டின் மகளிர் அணியின் பொறுப்பதிகாரியாக, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரத்னவின் மனைவி அப்சாரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், எதிர்வரும் மே மாதம் முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்ட எண்ணிக்கையைவிட படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல்...
Ad Widget

மாலிங்க வைத்தியக் குழு முன் ஆஜர்

இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட, வைத்திய நிபுணர் குழுவின் முன் ஆஜராகியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

உடனடியாக மாயாஜாலம் காட்டுவதற்கு, என்னிடம் எந்த மந்திர கோலும் இல்லை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக நேற்று அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார். பின்னர் 46 வயதான இன்ஜமாம் உல்-ஹக் நிருபர்களிடம் கூறும் போது, ‘பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் தேர்வாளர்...

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஹெராத் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் விளையாடுவார். 38 வயதான ஹெராத் 71 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 17...

ஐ.பி.எல் போட்டிகளில் மாலிங்க விளையாட முடியாது

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர் விளையாட முடியாது என தெரியப்படுத்தியுள்ளது. இதேவேளை, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, எதிர்வரும் இங்கிலாந்து இலங்கைத் தொடரில் இருந்தும் அவருக்கு...

மலிங்கவுக்கு 17 கோடி

IPL போட்டிகளில் ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை இதற்கு முன்னர் இந்திய கிரிகெட் நிர்வாக சபை வெளியிடவில்லை. என்றாலும் இந்திய கிரிகெட் நிர்வாக சபைக்கு சஷாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த கொள்களையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை...

ஐபிஎல் போட்டிகளில் லட்சங்களை அள்ளும் அழகிகள்

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென சீயர் லீடர் எனப்படும் நடன அழகிகளை ஒப்பந்தம் செய்து உள்ளன. நடன் அழகிகள் தத்தமது அணியினர் ரன் குவிக்கும்போதும், அடித்து ஆடும்போதும் உற்சாகமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்கின்றனர். இதில் உள்ளூரை விட வெளிநாட்டு நடன அழகிகளுக்கே ஊதியம் சற்று அதிகமாக வழங்கப்படுகிறது. அணிகளை பொறுத்து...

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதவிகளில் மாற்றங்கள்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் ஆசேகராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் இதனைக் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குப் பின்னர் இந்த நியமனம் அமுலாகும் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது. இதேவேளை முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தேசிய கிரிக்கட்...

மாலிங்கவை பின் தள்ளினார் பிராவோ

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது. அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் (2 ரன்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். அதே ஓவரில் கேப்டன் டேவிட் மில்லரும்...

அமெரிக்க உதைபந்தாட்ட அணிக்கு யாழிலிருந்து நால்வர் தெரிவு!

இலங்கைக்கான அமெரிக்க தேசிய உதைபந்தாட்ட அணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு வீரர்கள் தெரிவாகியுள்ளனர். இந்த அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் முறையே யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.தினோஜன், வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் டி.நிமல்ராஜ், யாழ். கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எச்.எம்.டி.டி. நாரண்பணாவ, யாழ் புள்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரசாத்குமார்ஆகியோரே தெரிவாகியுள்ளனர். கடந்த...

குஷல் ஜனித் பெரேராவுக்கு 4 வருடங்கள் தடை

இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்துப் பாவனை தொடர்பான குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று உத்தியோக பூர்வமாக இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன்

இலங்கை கிரிக்கெட் விளையாட்டு சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். அதனைத்தாண்டி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படுமாயின் எனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு செல்வேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ்...

ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மாலிங்க கலந்து கொள்வதில் சந்தேகம்

இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர் லசித் மாலிங்க பங்கு கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மாலிங்க கலந்து கொள்கிறார். எனினும் அந்த அணியிலுள்ள அவர் தவிர்த்து ஏனைய 26 வீரர்கள் நேற்று மும்பையிலுள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, மாலிங்க தான் கலந்து கொள்வது குறித்து...

இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா

இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி...

இலங்கையின் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்

உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கை அணிக்குப் பெறப்பட்ட தோல்விகளுக்கும் அத்தொடருக்காக இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டமைக்குமான பொறுப்பை ஏற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றோடு வெளியேற்றப்பட்டது. அதில்,...

ஐ.சி.சி உலக லெவன் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு

ஐ.சி.சி உலக லெவன் டி 20 போட்டித் தொடர் அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஜேசன் ராய் (இங்கிலாந்து), குவிண் டன் டி காக் (தென் ஆப்ரிக்கா, விக்கெட் கீப்பர்), விராட் கோலி (இந்தியா, கேப்டன்), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), ஆன்ட்ரே ரஸ்ஸல்...

ஐபிஎல் தொடக்க விழாவில் கேத்ரினா கைப் நடனம்

ஐபிஎல் டி20 தொடரின் 9வது சீசன் தொடக்க விழாவில் பிரபல நடிகை கேத்ரினா கைப், நடிகர் ரன்வீர் சிங் உள்பட நட்சத்திர பட்டாளம் பங்கேற்கிறது. மும்பை, ‘நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா’ அரங்கில் நாளை மறுநாள் மாலை நடைபெற உள்ள பிரமாண்டமான தொடக்க விழாவில், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாப்...

கவாஸ்கரை நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் வாரிய மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல் – மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம்...

பெண்கள் உலக கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக ‘சாம்பியன்’ (Highlights இணைப்பு)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை தனதாக்கி வரலாறு படைத்துள்ளது. 5–வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று பிற்பகல் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில்...
Loading posts...

All posts loaded

No more posts