- Monday
- November 25th, 2024
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்காக உதவிப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று முதல் கொழும்பு 07ல் உள்ள கிரிக்கட் நிறுவன காரியாலயத்தில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 011 2 68 16 01 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியை புனே பவுலர்கள் 121 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். அசோக் திண்டா, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய புனே அணி ஒரு விக்கெட்டுக்கு...
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள முதலாவது கூட்டத்தில் மஹேல ஜயவர்தன கலந்து கொள்ளவுள்ளார். மஹேல ஜயவர்தன 1996ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1161 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன்...
இங்கிலாந்து அணிக்கெதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் இலங்கை விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இவ்வருட பருவகாலத்தின் ஆரம்பத்தில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர் ஜேக் போல் முதற்தடவையாக இங்கிலாந்துக் குழாமில் இடம்பிடித்ததோடு, இதுவரையில் இங்கிலாந்து சார்பாக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய...
வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட்கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீனிடம் கருத்து கேட்ட போது, ‘அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன். எப்போது...
பந்து தாக்கி மரணம் அடைந்த பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த விசாரணை அறிக்கை எதிரொலியாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ‘ஹெல்மெட்’ அணியாமல் விளையாடக்கூடாது என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் பந்து தலையின் பின்பகுதியில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ஆஸ்திரேலிய...
இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்மோகன் டால்மியா மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் பி.சி.சி.ஐ. தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த ஆண்டு அக்டோபரில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூடி, சஷாங்க் மனோகரை தலைவராக நியமித்தது. இந்நிலையில், சஷாங்க் மனோகர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான...
இலங்கை அணியின் பந்துவீச்சு, உலகில் மிகச்சிறந்த பந்துவீச்சு அணிகளுள் ஒன்று எனத் தெரிவித்துள்ள இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தையே, பிரச்சினைக்குரிய பகுதியாக இனங்கண்டுள்ளார். மே முதலாம் திகதி முதல் தனது பதவியை ஏற்றுள்ள சனத் ஜெயசூரிய, ஆரம்பிக்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்....
இங்கிலாந்தில் சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஆலோசனைகள் இலங்கை அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கப் போவதாக அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இலங்கை அணியின் இரு தூண்களாக இருந்த சங்கக்காரா, ஜெயவர்த்தனே இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதன் பிறகு அந்த அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்...
நேற்றைய ஐ.பி.எல். போட்டியின் போது யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கினார். இது சமூக வலை தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஐ.பி.எல். சீசன் 9-வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விசாகபட்டினத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில்...
குறைந்த வயதில் 10 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் குக் தகர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தியவர். கடந்த 2005ல் கோல்கட்டாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். இவர், இந்த இலக்கை குறைந்த...
இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கிருந்த ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் அங்கு, விடியும்வரை தங்கிருந்தார்' என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (04), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது எஸ்.எம்.மரிக்கார் எம்.பி கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு...
இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கான பந்துவீச்சுப் பயிற்றுநராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வெள்ளை மின்னல் என அழைக்கப்படுபவருமான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்காக மாத்திரமே அவரது நியமனம், இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுப் பயிற்றுநராக இருந்த கிறெய்க் மக்டேர்மர்ட், உலக இருபதுக்கு-20 தொடரைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே,...
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதேவேளை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில்...
பெங்களூரு அணி வீரர் வாட்சன் ‘கிட்டார்’ வாசிக்க, கேப்டன் கோஹ்லி, கெய்ல் இணைந்து குத்தாட்டம் போட்டனர். இந்தியாவில் நடக்கும் ஒன்பதாவது பிரிமியர் தொடரில் பங்கேற்கிறது கோஹ்லியின் பெங்களூரு அணி. இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி பெற்றது. கடைசி 3 போட்டிகளில் நட்சத்திர வீரர் கெய்ல் பங்கேற்கவில்லை. தற்போது அப்பா ஆன...
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சனத் ஜயசூரிய (தலைவர்), ரஞ்சிதட மதுரசிங்க, ரொமேஷ் களுவிதாரண, எரிக் உபசாந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதி வழங்கியுள்ளார்....
பயிற்சிப் போட்டியொன்றின் போது உபாதைக்குள்ளான இலங்கை கிரிக்கட் அணி வீரர் கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முன்னிட்டு பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் கடந்த 24ம் திகதி நடைபெற்ற பயிற்சி போட்டியொன்றின் போது தினேஷ் சந்திமால் துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பத்தில் ஷோர்ட் லெக் திசையில்...
Loading posts...
All posts loaded
No more posts