Ad Widget

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த விளையாட்டு பாடலை பாடிய விராட்கோலி

ஃபுட்சால் என்ற புதுமையான கால்பந்து விளையாட்டை பிரபலபடுத்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இயற்றி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாடியுள்ளார். ஃபுட்சால் கால்பந்து போட்டியை பிரபலபடுத்த நடந்த விழாவில் ரஹ்மான், விராட்கோலி பங்கேற்றனர்.

பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி காலமானார்

பிரபல உலக குத்துச் சண்டை வீரரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 வது வயதில் காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக அவர் கடந்த வியாழக்கிழவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே (Cassius Marcellus Clay) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ம் ஆண்டு இஸ்லாம்...
Ad Widget

இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் : டில்சான்

விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் என இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டி.எம். டில்ஷான் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான்பேசியவிடயம் தொடர்பில் தெளிவுபடுத்த...

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் உதவி!

அண்மையில் ஏற்பட்ட மழை, வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. நாளை(04) லண்டன் லோட்ஸில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த நிவாரண உதவித் திட்டத்துக்கு ஏற்கனவே பல மில்லியன் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக இலங்கை கிரிக்கெட் ஊழியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் என 300...

நாட்டை விட்டு வெளியேறுகிறார் தில்ஷான்?

இலங்கை அணி வீர ர் திலகரட்ண தில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடப்போவதில்லையென அறிவித்துள்ளார். உபாதை காரணமாக இம்முடிவை எடுத்த தாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தில்ஷானிடம் ஒரு நாள் தொடரில் விளையாடவேண்டாம் என இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்ட தாக தகவல் கசிந்துள்ளது. இதுதவிர தில்ஷான் குடும்பத்தோடு அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகவும் ,...

சச்சினின் சாதனையை முறியடித்த குக்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை இங்கிலாந்து கப்டன் அலெஸ்டர் குக் முறியடித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அலெஸ்டர் குக் 10,000...

குலசேகர ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நுவான் குலசேகர பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் டில்ஷான்

இலங்கை அணி வீரர் திலஹரத்ன டில்ஷான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகவுள்ளதாக, அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது. 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே...

ரங்கன ஹேரத் சாதனை!! இலங்கை தடுமாற்றம்

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து தனது முதலாவது இனிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஒட்டங்களை குவித்த நிலையில் தனது முதலாவது இனிங்சை நிறுத்திக்...

வாசிம் அக்ரமையே மிரள வைத்த கோஹ்லி

விராட் கோஹ்லிக்கு பந்து வீசுவது கண்டிப்பாக எனக்கு கவலையளிக்கும் விடயம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவரான விராட் கோஹ்லி தற்போது ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டி வருகிறார். இந்த தொடரில் 919 ஓட்டங்களை குவித்துள்ள கோஹ்லி, 4 சதங்களும் விளாசி சாதனை படைத்துள்ளார். தனது...

இங்கிலாந்து 310 ஓட்டங்கள் குவிப்பு

இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்கள் குவித்துள்ளது. அதிகபட்மாக அலெக்ஸ் ஹாலஸ் 83 ஓட்டங்களும், ஜோ ரூட் 80 ஓட்டங்களும்,...

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த நியூசிலாந்து வீரர்!!

இங்கிலாந்தில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவரான...

யாழ் மாவட்டத்தில் GPL‬ கிரிக்கெட் சுற்றுப்போட்டி! 6 அணிகளை 6 உரிமையாளர் வாங்கியுள்ளனர்!

யாழ் மாவட்டத்தில், முதன் முதலாக யாழ் மாவட்டத்திற்குள் இயங்க கூடிய முன்னணி துடுப்பாட்ட கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 42 வீரர்களை கொண்ட  GPL(Grasshoppers Premier League) என்ற துடுப்பாட்ட சுற்றுப்போட்டியை  கிராஸ் கொப்பெர்ஸ் (Grass Coppers) விளையாட்டு கழகம் நடாத்த உள்ளது.  இந்த GPL சுற்று போட்டி மறைந்த விளையாட்டு வீரர்களான ரொஹான் மற்றும் சங்கர் ஞாபகார்த்தமாக நடத்தப்படுகிறது...

இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் சமீர

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார். கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்பட்டு வரும் அவரை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், தொடர்ந்தும் சிகிச்சைகளைப் பெற சமீர இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரியவந்துள்ளது. இவருக்கு பதிலாக யாரை இங்கிலாந்து தொடருக்கு அனுப்புவது என்பதை இலங்கை கிரிக்கெட்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் சைமன் வில்லிஸ்

கிரிக்கெட் வீரர், (விக்கெட் காப்பாளர்) சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைந்து கொண்டுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஸ்டோக்ஸ் ஆடுவது சந்தேகம்

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் தலை­சி­றந்த சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான பென் ஸ்டோக்ஸுக்கு, இலங்­கைக்கு எதி­ராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்­டி­யின்­போது முழங்­காலில் காயம் ஏற்­பட்­டது. இதனால் 2ஆவது டெஸ்ட் போட்­டியில் அவர் பங்­கேற்­பது சந்­தே­க­மா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இங்­கி­லாந்து முதல் இன்­னிங்ஸை விளை­யாடும் போது அந்த அணியின் முன்­னணி வீரர் ஸ்டோக்ஸ் 12 ஓட்­டங்­களை எடுத்தார். 7...

முதலாவது போட்டியில் இலங்கை படுதோல்வி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு...

விராட் கோலியின் சாதனைகள்

27 வயதான விராட் கோலி ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் விவரம் வருமாறு:- *ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 4,002 ஆக (136 ஆட்டம்) உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 ஆயிரம் ரன் மைல்கல்லை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 9-வது ஐ.பி.எல். தொடர்...

முதல் டெஸ்ட் ஆரம்பம்: துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து!

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி Headingley, Leeds இல் நேற்று ஆரம்பமானது. நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts