- Monday
- January 27th, 2025
சிம்பாவே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணி வெற்றிப்பெற்று சிம்பாவே அணியை 3-0 என வைட் வொஷ் முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. நேற்று இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் 124 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 21.5 பந்து ஓவர்களில் விக்கட் இழப்பின்றி வெற்றியை பதிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணியினர்...
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இன்று டப்ளினில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த இலங்கை அணி பல மாற்றங்களுடன் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அணிகளின் விபரம் பின்வருமாறு இலங்கை அணி -...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சந்தீப் பாட்டீல், ராபின் சிங் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜேசன் ஜில்லஸ்பி உள்ளிட்ட 57 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். இவர்களில் 21 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்...
நடுவரின் தவறான தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லோர்ட்ஸ் மைதானத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை அங்கிருந்து அகற்றுமாறு லோர்ட்ஸ் மைதான நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து தேசியக் கொடி அங்கிருந்து அகற்றப்பட்டது. இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 45 நிமிடங்களின் பின்னர் இலங்கை தேசியக்கொடி அகற்றப்பட்டுள்ளது. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்...
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிலிருந்து, இலங்கை அணியின் சகலதுறை வீரர் மிலிந்த சிரிவர்தன நீக்கப்பட்டுள்ளார். [caption id="attachment_65094" align="aligncenter" width="900"] Sri Lankan cricketer Milinda Siriwardana celebrates after dismissing West Indies Cricketer Jermaine Blackwood during the final day of their second...
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அணி வீரர்களான குசால் மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரைப் பாராட்டிய போதிலும், லஹிரு திரிமான்ன தொடர்பாகத் தெளிவான தகவல்களை வழங்கவில்லை. இத்தொடரில் ஓரளவு தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இளம் வீரரான...
நடுவரின் முடிவுக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை இலங்கை அணியினர் தெரிவித்தனர். இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களும், இலங்கை அணி 288 ஓட்டங்களும் எடுத்தன. 4-வது நாளில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில்...
சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியிலும், இந்திய அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது. [caption id="attachment_65006" align="aligncenter" width="900"] Zimbabwe and Indian cricket players shake hands at the end of the One Day International cricket match between the two...
இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்த ரன்னை எடுக்க அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்தின் பேட்டிங்கும் ஓரளவிற்கு உதவியது. அவர் 49 பந்துகளை சந்தித்து 31...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்ததுள்ளது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 288 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்துவரும் பருவ காலமான 2016/2017 ம் ஆண்டுக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரிதான மாற்றங்கள் இன்றி, இந்த குழாம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பங்கெடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு சார்பான, அல்லது தவறான தீர்ப்புக்கள் கொடுத்த நடுவர் ரவியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்....
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்ததுள்ளது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்...
இலங்கை “ஏ” அணியில் அக்குறணையைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணியிலேயே இவர் இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணி விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை “ஏ” அணியின் தலைவராக அஷான் பிரியஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இக் குழுவிலேயே...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி நேற்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும்...
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, இங்கிலாந்தின் பிரசித்திபெற்ற மைதானமான லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி மாலை 3.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று, இலங்கையை வெள்ளையடிக்க எதிர்பார்த்திருக்கும் நிலையில், அதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அணி, கடுமையாகப்...
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில்...
இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த வீரர்கள் விரைவில் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து முறை கிரான்ஸ்லாம் பட்டம் வென்ற 29 வயதான மரியா, தனது பரம்பரை நோயான நீரழிவின் தாக்கத்தாலும் வேறு சில உடல்நலக் கோளாறுகளாலும், வைத்தியர்களின் சிபாரிசின் அடிப்படையில், கடந்த 10 வருடங்களாக ‘மெல்டோனியம்’ என்ற மருந்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் மார்வன் அதபத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிகம பிரதேசத்தில் முதுகமுவ அதபத்து வத்தையில் வசித்து வந்த சோமா அத்த பத்துவே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் தனது பணியாளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி பணியாள் வெளி வேலை காரணமாக...
நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், முத்தையா முரளிதரனைச் சர்ச்சைக்குரிய விதத்தில் ரண் அவுட் செய்தமைக்காக, அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்காரவிடமும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட முரளிதரனிடமும் மன்னிப்புக் கோருவதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின்...
Loading posts...
All posts loaded
No more posts