அவுஸ்திரேலியா வெற்றி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர் குஷல் பெரேரா ஒரு ஓட்டத்துடன்...

நிறைவடைந்தது ஒலிம்பிக்: அமெரிக்காவுக்கு முதலிடம்!

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர்....
Ad Widget

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

ஏஞ்சலோ மெத்தியூஸை தலைவராகவும் தினேஸ் சந்திமாலை உப தலைவராகவும் கொண்ட இலங்கை அணியில் குசேல் ஜனித் பெரேரா, குசேல் மெண்டிஸ், டில்சான், தனஜ்ய டி சில்வா, மிலிந்த சிறிவர்தன, அவிஸ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணவர்தன, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், திஸர பெரேரா, டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, அமில அபொன்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐந்து...

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டில்ஷான்?

இலங்கை கிரிக்கெட்அணியின் சீனியர் வீரரான திலகரட்ன டில்ஷான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான டில்ஷானுக்கு தற்போது 39 வயதாகிறது. இதனால் அவர் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத டில்ஷான் இலங்கை அணியில் களமிறங்கி பட்டையை...

ஓய்விற்கு பின்னரும் அசத்தும் ஜெயவர்த்தனே

இங்கிலாந்தில் நடைபெற்ற வொர்செஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி சதத்தால் சமரெஷ்ட் அணியை வெற்றி பெற செய்தார் ஜெயவர்த்தனே. இங்கிலாந்தில் ராயல் லண்டன் தொடருக்கான காலிறுதி போட்டி, அந்நாட்டில் உள்ள கண்டிரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வொர்செஸ்டர்ஷையர் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது....

அதிவேக கோல் அடித்து நெய்மார் சாதனை

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் தொடங்கிய 15-வது வினாடியிலேயே பிரேசில் கேப்டன் நெய்மார் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. பெண்களுக்கான கால்பந்து அரை இறுதி...

163 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 13ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்ப வீரர்களான குஷல் சில்வா (0), திமுத் கருணாரத்ன (7) அடுத்தடுத்து...

றியோ ஒலிம்பிக் பதக்க விழாவில் திருமணக் கோரிக்கை

சீன நீரில் மூழ்கும் வீராங்கனையான ஹீ ஸி, மூன்று மீற்றர் உந்துவிசைப்பலகையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். எனினும் அவருக்கு அதை விட இன்னொரு பரிசும் கிடைத்திருந்தது. அவரது ஆறு வருட காதலரான குவான் காய், நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருந்த பதக்கம் வழங்கும் நிகழ்வில், ஒரு முழங்காலில் அமர்ந்து திருமணக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். கடந்த வாரம் ஆண்களுக்கான மூன்று...

இலங்கைக்கெதிராக போராடுகிறது அவுஸ்திரேலியா

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, ஒரு விக்கெட்டு இழப்புக்கு 22 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட இரண்டு ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. தற்போது களத்தில், திமுத் கருணாரட்ன 8...

இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் தனஞ்ச டி சில்வா மற்றும் சந்திமால் ஆகியோர் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர்....

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன் வரை 150 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள...

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடரும் விபத்துக்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அர்மீனிய பளுதூக்கு வீரருக்கு போட்டியின் போது இடது கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை இடம்பெற்ற போட்டியில் பங்கேற்ற அர்மீனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யன் 195 கிலோ எடையை தூக்க முயன்ற போது...

‘அவுஸ்திரேலியாவை வெள்ளையடியுங்கள்’-சனத் ஜெயசூரிய

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் நிறைவில், 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்ற நிலையில், மூன்றாவது போட்டியையும் வென்று, அவுஸ்திரேலிய அணியை வெள்ளையடிக்க வேண்டுமென, இலங்கை அணியின் பிரதம தேர்வாளரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு முன்னைய தொடர்கள்...

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமணம்

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சுக்கான பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்த பதவியை அவர் பொறுப்பேற்கவுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒலிம்பிக்கில் அகதிகளின் சாதனை

பிறேசில் நாட்டு றியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டி இம்முறை பல சுவாரசியங்களைக் கொண்டு தொடங்கியுள்ளது. Yusra Mardini என்ற பெண் போட்டியாளர் நீச்சல் விளையாட்டில் தெரிவுப்போட்டியில் பங்குபற்றினார். அதில் அவர் இரண்டாவதாக வந்தாலும் அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை சில செக்கன்களால் இழந்தார். ஆனால் உலகமக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார். காரணம் அவர் ஓர் அகதி....

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 413 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி   சகல விக்கட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 281 ஓட்டங்களையும் 2வது இன்னிங்ஸிக்காக 237...

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்கு 413

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 237 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஒட்டங்களை நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் நேற்றய ஆட்டநேர முடிவின்போது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது. இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸில்...

மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது ரியோ ஒலிம்பிக் போட்டிகள்

2016ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்கள். உலகின்...

ரங்கன ஹேரத் ஹெட்ரிக் ; 106 ஒட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார். முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் 106 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இரண்டாம் நாளான இன்றைய போட்டியின் போதே ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக்...

281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது. இதன்படி ஏற்கனவே ஒரு...
Loading posts...

All posts loaded

No more posts