- Saturday
- December 21st, 2024
இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் பகல்-இரவு கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி (DLS) 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 13ஆவது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 72...
கொழும்பு சுகததாச அரங்கில் நேற்று திங்கட்கிழமை (07) நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மேலும் 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது. ஆனால், அன்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் முதலாம் நாள் போட்டிகள்...
இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி...
அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் வெற்றியாளர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டன. இந்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சன்...
வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா காரணமாக இடைநிறுத்தப்படுவதாக, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில், பட்டத்திருவிழாவை நடாத்தும் போது, கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள்...
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, தற்போது பரவிவரும் ஒமிக்ரோன், கொவிட் 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளது. யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை...
14ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் புதிய வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த 9 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிலேயே விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் வரும்...
லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இறுதி போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதி இருந்தன. நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா...
இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது பல தடைகள், பல சவால்களுக்கு மத்தியில் இன்று (நவம்பர் 26) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மாலை 6.50 மணிக்கு ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் தொடரானின் தொடக்க விழாவில் பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் (augmented and...
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்...
வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகி இடம்பெறுகிறது. அந்த சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ...
தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன்,...
கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் இறுதிப்போட்டியில் ஊழல் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை விசாரணைக்காக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தன்னிடமுள்ள ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்பிக்கவேண்டும் என்பதுடன் உரிய விசாரணைகளுக்கு வேண்டுகோள்...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு...
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரி மற்றும் பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணிகள் மோதின ஆட்ட நேரமுடிவில் தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தேசிய சம்பியனாகியது மகாஜானாவின் வெற்றிக்கொலினை தேசிய அணி வீராங்கனை சாணு அவர்கள் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இப்...
உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல்முறையாக உலக கிண்ணத்தை கைப்பற்றியது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்பத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக...
லண்டனில் உள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு...
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை...
டக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்கின்றது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடும் சென்.ஜோண்ஸ்...
Loading posts...
All posts loaded
No more posts