- Tuesday
- November 26th, 2024
வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் அசௌகரிய நிலைமை ஏற்பட்டமை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். லசித் மாலிங்காவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்ற அதேவேளை, அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 தொடரில் இவர்...
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26-ந் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்ஜெய இடம்பிடித்துள்ளார்....
மும்பையில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் போட்டியில் ஜென்னிங்ஸ், குக், அஸ்வின் சாதனை படைத்துள்ளனர். * இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் இந்தியாவுக்கு எதிராக நேற்று 2 ஆயிரம் ரன்களை (24 டெஸ்டில் 2,027 ரன்) தாண்டினார். இந்தியாவுக்கு எதிராக இந்த இலக்கை கடந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (2,555 ரன்), வெஸ்ட் இண்டீசின்...
இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களைப் பார்க்கும்போது இலங்கை அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர் ஒருவரை பொறுத்தவரையில் முதலில் கவனிப்பது அவரின் வேகம் மற்றும் ஸ்விங் செய்யும் திறமை என்பவை ஆகும். இதனை இலங்கையின் இளம் வீரர்கள் சிறப்பாக செய்துவருவதுடன், அதனை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கை...
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏட்ஜ்இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் கலந்து கொண்டார். இவ்விழாவில் வருடத்தின் சிறந்த வீரராக இம்முறையும் அன்ஜலோ மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை இவர் டெஸ்ட் மற்றும் ஓருநாள் போட்டிகளுக்கான...
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 417...
மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்திய அணி. ராஜ்கோட் டெஸ்ட் டிராவில் முடிந்தது. விசாகபட்டினம் டெஸ்டில் இந்தியா வென்றது. மொகாலியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 283...
இலங்கை அணி வீரர்களுக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் விஷேட ஒருநாள் பயிற்சி ஒன்றை வழங்க உள்ளார். குறித்த வேகப்பந்து பயிற்சி பட்டறையானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது....
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அப்போது இந்திய வீரர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளால் திட்டிக்...
சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர். இதன்படி 36.3 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சிம்பாபே, 160...
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீச்சை நிறைவு செய்யாமை (slow over-rate) காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நேற்றுதினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில், ஒரு ஓட்டத்தால் இலங்கை த்ரில் வெற்றியை...
இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே புலவாயோவில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியில், மயிரிழையில் ஓர் ஓட்டத்தால் வெற்றி பெற்ற இலங்கையணி, இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஜேஸன்...
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி 167, புஜாரா 119, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன்,...
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில், நேற்றய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்து இந்திய சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 455 ரன்களை குவித்தது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகள்...
ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் இருந்து வந்தார். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பித்தது. இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, முதலாம் நாள் ஆட்ட...
இலங்கை,சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று ஹாராரேவில் இலங்கை- சிம்பாப்வே அணிகள் இடையில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ஆரம்பம் முதலே...
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 177 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய அவர் 124 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார்.81-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ஜோ ரூட்...
சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் அபார பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணி 257 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 491 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 233 ஓட்டங்களுக்கு சகலவிக்கட்டுகளையும் இழந்து டெஸ்ட் தொடரை கைநழுவவிட்டது. சிம்பாப்வே அணி சார்பில் எர்வின் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 8...
Loading posts...
All posts loaded
No more posts