- Monday
- February 24th, 2025

ஆட்டக்களத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் அணியினர் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலியின் குற்றச்சாட்டுக்கள் மூர்க்கத்தனமானவை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. செவ்வாய்க்கிழமைமுடிவடைந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆனார். அவர் எதிர்முனை வீரரை கலந்தாலோசித்த பிறகு,...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் ஆட்டத்தில் 321 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 494 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் இரண்டாவது டெஸ்ட் சதத்தை...

கிரிக்கெட்டில் நடுவரின் முடிவுக்கு எதிராகக் கூக்குரலிடுவது, எதிரணி வீரருடன் உடல் ரீதியான தாக்கங்களை விளைவிப்பது போன்ற குற்றங்களுக்காக, எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்படும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதால் புதிய தலைமுறை நடுவர்கள் பலரும் அதிருப்தியினால் பதவியை விட்டு விலகுவதால், நடுவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் நாதன் லயனின் சுழலில் சிக்கி 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் ஹேரத், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசால் மெண்டிஸ், தினேஸ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்லஅசேல குணரத்ன, டில்ருவான்...

20 வருடங்களிற்கு பின்னர் இலஙகை கிரிக்கட் விளையாட்டில் மீணடும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று அசங்க குறுசிங்ஹ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் கிரிக்கட் முகாமையாளராக நேற்று பணிகளை பொறுப்பேற்றபின்னர் ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் இடம்பெற்ற செய்யதியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்

வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 111 ஆவது வருடாந்த கிறிக்கற் போட்டியானது இம் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
வடக்கின் போர் எனப்படும் யாழ்ப்பாணத்தின் பழமையான இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிறிக்கற் போட்டியானது 1904ஆம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த...

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இந்த பதவியுயர்வு குறித்து தெரிவித்தார். சீக்குகே பிரசன்ன இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்றிலும்...

இலங்கை கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கட் வீரர் அசங்க குருசிங்க இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் போது அவர் பங்கெடுத்திருந்தார். தற்போது அவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிராந்திய அணிகள்...

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மாணவர்களின் நடத்தை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. மாணவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, அரச சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினால் அத்தகைய விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று சமிபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பௌத்த மத தலைவர்கள்...

புனேயில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாசில் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்து 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா 105 ரன்களில் நடையை கட்டியது. 143 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற அளவில் ஆட்டத்தின் 2வது நாளான நேற்று தனது 2வது இன்னிங்ஸ் ஸ்கோரை முடித்துக்கொண்ட ஆஸி. இன்று...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20க்கு இருபது, போட்டியில், 41 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரர்களான அரோன் பின்ஜ் (53...

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

“மோதல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து, பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற வேண்டுமாயின், பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் ‘பிக் மெச்’ கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வேண்டும்” என, ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்....

இலங்கை அணியின் ஆரம்ப கட்ட துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் போட்டித் தடை விதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணியுடன் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆவது ரி.20 போட்டியின் போது தன்னுடைய ஆட்டமிழப்பு தொடர்பில் அவர் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த தடை உத்தரவு...

அவுஸ்திரேலியாவுடன் ரி.20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி இலங்கைக்கு புகழைத் தேடித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தொடரில் சிறந்து விளங்கிய அசேல குணரத்னவுக்கும் ஜனாதிபதி தனது விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், பூனே சுப்பர் ஜயன் அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது பூனே அணிக்கு தலைமை வகித்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தலைமை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற...

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி பந்தில்...

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டி அவுஸ்திரேலியா, மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள்...

வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் நேற்று(17 மாசி 2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

All posts loaded
No more posts