75 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்!!

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்படக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்....

யாழ் சர்வதேச சதுரங்க போட்டிகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் சகல...
Ad Widget

யாழ்ப்பாண இளைஞர்களுக்கு சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் துடுப்பாட்ட பயிற்சி முகாம்!!

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதனை...

உலகக் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்!

உலகக் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நோர்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். எனினும் தமிழக வீரரான பிரக்ஞானந்தாவின் திறமைக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் உலகின் முதல் தர வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு சமநிலையில் (Draw)...

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த பெண்கள்!!

வடமராட்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நீச்சல் போட்டியொன்றில் 40 வயதான பெண்ணொருவர் வெற்றிவாகை சூடியுள்ளார். வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. பருத்தித்துறை- தென்னியம்மன்முனையில் இருந்து இன்பசிட்டி வரை குறித்த நீச்சல் போட்டியானது இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் முதலாம் ,...

முதலாவது வெற்றியை பதிவு செய்தது லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது....

யாழ். வல்வை வீராங்கனைக்கு அன்பின் மகத்துவத்தை உணர்த்திய பெரும்பான்மையின வீராங்கனை!!

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்' வல்வெட்டித்துறை பொலிகண்டி விளையாட்டு வீராங்கனைக்கு புதிய சம்மட்டி ஒன்றை கொட்டாவ விளையாட்டு விராங்கனை அன்பளிப்பு செய்து அன்பின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தத் திருக்குறளை மெய்ப்பித்துள்ளார். 16 வயது பாடசாலை மாணவி ஒருவரின் இரக்கக் குணம் கொண்ட இந்த செயல் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது....

தேசிய மெய்வல்லுநர் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை!!

தியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றெடுத்த ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், குண்டெறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இந்த இரண்டு தங்கப் பதக்கங்களையும் திங்கட்கிழமை (08) சில மணித்தியாலங்கள் இடைவெளியில் மிதுன்ராஜ் வென்றெடுத்தமை விசேட...

IPL போட்டியில் யாழ் வீரர் வியாஸ்காந்த்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும்,...

விதிகளை மீறி தலைவராக முற்படும் ஆர்னோல்ட்!! யாழ் உதைபந்தாட்ட லீக் தடைசெய்யப்படலாம்?

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் தடைசெய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அப்படியான நிலைமை உருவாகினால், அடுத்த சில வருடங்களிற்கு யாழ் உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட 33 கழகங்களும், எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் இருண்ட உதைபந்தாட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிடும். கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே, இந்த விபரீதமான நிலைமை உருவாகியுள்ளது. கடந்த...

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் தமிழ் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்!!

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கையின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, Chattogram Challengers அணியுடன் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த தொடரில் பங்கேற்பதற்கு விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட்...

ஆர்ஜென்டீனா உலக சம்பியனாகியது: மெஸி புதிய சாதனை படைத்தார்

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும்...

தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ் இளைஞன்புதிய சாதனை

தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார். 120...

ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் நாட்டை வந்தடைந்தன!

ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும்...

இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!!

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை...

பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த இளைஞர்!

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா...

இலங்கை அணி அபார வெற்றி : தொடர் சமநிலையில்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 378...

அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை...

இலங்கை 30 வருடங்களின் பின் சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றி சாதனை!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இலங்கை, 30 வருடங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுடனான தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

இலங்கை அணி அபார வெற்றி!!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்களை...
Loading posts...

All posts loaded

No more posts