- Friday
- November 22nd, 2024
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர் விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள்...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணயிளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது, சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி...
யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம்பெரும் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கில் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வலிகாகமம் வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகள்...
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இருபத்துமூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர். எனினும் இதுவரை அந்த கோரிக்கைக்கு உரிய தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை....
தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டம் நடாத்திவரும் இடத்துக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவினை வெளியிட்டார். கேப்பாபுலவு போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புகழேந்தி...
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில்...
பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச...
காணி எடுத்தல், காணி கொடுத்தல் பற்றி நாம் இங்கு சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் குறித்து இந்த அரசு என்ன தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என்று இந்தச் சந்தர்ப்பத்திலே நான் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் ஆதரவு...
தமிழர் தாயகத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாட்டின் பல பகுதிகளிலுள்ள பொது அமைப்புக்கள், இன, மத, மொழி பேதங்களை கடந்து, ஒன்று திரண்டு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ள இவ் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று...
“மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்கள், அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை” என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்தார். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதேபோன்று புதுக்குடியிருப்பில் இராணுவத்தினால்...
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது. “படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும்...
அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கடந்த காலத்தில் தொடர் போராட்டங்களை நடத்திவந்த மக்கள், உரிய தீர்வு கிடைக்காத நிலையில் நேற்று முதல்...
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டம் தொடர்ச்சியாக 22 ஆவது நாளாகவும் இன்று விமானப்படைத் தளத்துக்கு முன்னாலுள்ள வீதியோரத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஆதரவு பெருகிவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த...
கேப்பாப்பிலவு பிளக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர். மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்...
தமிழர் தாயத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் சற்றுமுன் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு, ஐ.நா. மனித உரிமை பேரவையினால் உரிய தீர்வு...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள்...
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு...
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு...
Loading posts...
All posts loaded
No more posts