- Sunday
- December 22nd, 2024
வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள்...
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை சமிச்ஞைகளும் இயங்காதுள்ளன. முன்னெச்சரிக்கை ஒலி, சமிச்கை விளக்குகள் என்பன இயங்காதுள்ளதால் நடேஸ்வர கல்லூரி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமல் வைத்துள்ள போதும் பாடசாலையைச்...
பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைவில் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து...
யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது. மயிலிட்டி ஜே151ஆவது கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, அதற்கான உறுதிப்பத்திரங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கையளித்துள்ளார்....
இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு மயிலிட்டி துறைமுக முன்றலில் ஒன்றுகூடி விடுவிக்கப்படாதுள்ள ஏனைய நிலப்பரப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் சூழவுள்ள...
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த மாவட்டத்தின் சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப் பினர்களும், முஸ்லிம்களை அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். யாழ்.மாவட்ட...
வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர், தையிட்டிப் பகுதியில் 20 பரப்புக் காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக வலி. வடக்கு பிரதேசசபை ஆவணங்களின் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாகவே, இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விகாரையை விட்டு...
வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலய ஆக்கிரமிப்பில் இருந்து 27 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ளது மயிலிட்டித் துறைமுகம். இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை துறைமுகம் உட்பட துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஜே-249 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 54 #ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டு மாவட்ட அரச...
பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்;தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்pல் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து...
தமிழ் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிக்குளம் மக்கள் சார்பில் முள்ளிக்குளத்தை சேர்ந்த அந்தோனி லம்பட் மற்றும் அந்தோனி குறூஸ் என்ற இருவர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை ) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம், அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன்...
தையிட்டி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்த பெருமளவு வெடி பொருட்கள், கிணற்றுடன் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை (28) முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில், பெருமளவு வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கிணறு காணப்பட்டது. கிணற்றிலிருந்த வெடி பொருட்களை ஹலோ ட்ரஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவனமும், படையினரும் இணைந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு...
காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை J/235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை 6 மாதங்களில் மக்களிடம் வழங்குவேன் எனக்கூறிய ஜனாதிபதி, வடக்கு மக்கள் தேவைக்கு அதிகமாகவே காணிகளை கேட்கிறார்கள் என கூறுவது வருத்தமளிக்கிறது என வலி வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். வலி, வடக்கு மீள்குடியேற்ற நிலை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்...
கேப்பாபிலவு இராணுவ முகாமினை மாற்றுவதற்காக இராணுவம் கோரியிருந்த 5 மில்லியன் ரூபாவினைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற...
வட மாகாண சபையின் கோரிக்கையை புறந்தள்ளி மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு, வட மாகாண சபை எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (12) முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடக்கு மாகாண மக்களுக்கு என 6 ஆயிரம் பொருத்து...
வடக்கு – கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை அமைப்பதற்கு செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 லட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளன. முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு...
இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கோரி இரணைமாதா நகரில் கடற்கரை ஓரமாக தகரக் கொட்டகைக்குள்ளிருந்து போராட்டம் நடாத்திவருகின்றனர். வீதியோரம் சமைத்து உண்டவாறு இரவுபகலாக தங்கியிருந்து போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆரம்பித்த நாள் முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 5வது...
இரணைத் தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து...
Loading posts...
All posts loaded
No more posts