Ad Widget

கடற்படைக்கு சாதகமாக நில அளவீடு? : மக்கள் சந்தேகம்

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீடு தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, நில அளவீட்டின் போது, காணிகளை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் சிலரையும் அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். எனினும், தமக்குத் தெரியாமல் தற்போது இரணைதீவில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச் செயற்பாடானது, தமது பூர்வீக பகுதியில் அடையாளம்...

யாழ் படையினரின் பங்களிப்போடு சமூக சேவைப் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றிணைப்போடு கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் லயன்ஸ் கழகத்தினரின் 306B2 பங்களிப்போடு பாரிய அளவிலான முக்கியத்துவம் பெற்ற கடற்கரைப் பாதுகாப்பு திட்டம் நடைபெற்றது. யாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற இந்த நிகழ்வில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க யாழ் பாதுகாப்புப் படைத்...
Ad Widget

50 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பம்!

வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் 50 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி கேள்வி மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். குறித்த வீடமைப்பு திட்டம் தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொண்டு, திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும் எனவும், இந்த வீடமைப்பு திட்டத்திற்காக...

முகாமில் வாழும் 55 பேருக்கு காணிகள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணத்தில் தற்போது வரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். முகாமில் வாழும் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர்...

விமானங்களை வீழ்த்தும் 5 ஆயிரத்து 700 வெடிகுண்டுகள் மயிலிட்டியில் மீட்பு

காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை...

ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு!

ராணுவம் கையகப்படுத்தியிருந்த யாழ். வலிகாமம் வடக்கு ஊறணி பாடசாலைக் காணி, இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த காணியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வந்த கோரிக்கையின் பிரகாரம், இன்றைய தினம் இக் காணி விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட 3.9 ஏக்கர் அளவுடைய காணி, யாழ். மாவட்ட...

உயிலங்குளம் வீட்டுத்திட்டத்தில் இருந்த மக்கள் வௌியேற்றம்

முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில், தற்போது 20...

ராணுவ பாதுகாப்புடன் பயணிக்கும் யாழ். மக்கள்!

ராணுவ கட்டுப்பாட்டில் காணப்படும் யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் போக்குவரத்து செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளில் ராணுவத்தின் பாதுகாப்புடனேயே மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மயிலிட்டி துறைமுகம்,...

முகமாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவா் காயம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தின் போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி பளை இந்திராபுரம் எனும் புதிதாக மீள் குடியேற்றம் செய்த இடத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது மர்மபொருள் வெடித்ததில் இருவரும் காயமடைந்துள்ளனா்....

எஞ்சியுள்ள கேப்பாபுலவு காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை

கேப்பாப்புலவு மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள காணியில் 111 காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இராணுவ முகாமினை வேறோரு இடத்தில் அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும்...

கேப்பாபிலவு நிலம் விடுவிக்கப்படும்: சந்திரிக்கா

கேப்பாப்பிலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பாண்டார நாயக்கா குமாரதுங்க காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். கேப்பாப்பிலவில் மக்களின் குழுவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற குழுக்களின்...

கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 175 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. கேப்பாப்புலவு மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் நிரந்தரமான கல்வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் நிரந்தரமான கல்வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல்வீடுகளை வழங்குவதற்காக அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு...

கண்டாவளை பகுதி காணிகளை விடுவித்தது ராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு தொகுதி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது. கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள 38 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவித்தமைக்கான ஆவணங்களை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம், ராணுவத்தினர் கைளித்துள்ளனர். இக் காணிகள் உரிய முறையில் இனங்காணப்பட்டு, காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு...

தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர்: இரா. சம்பந்தன்

காணி விவகாரத்தில் தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர் எனவே சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை அல்ல என்றும்...

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் விடயம் தொடர்பில் தங்களுக்கு ஜூலை 20ஆம் திகதி நான் கடிதம் எழுதியுள்ளேன். அதன் பிரதி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்களது செயலாளர்...

கடற்படை எமது நிலத்தை விட்டு வெளியேறவேண்டும்: இரணைதீவு மக்கள்

தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி என்ற...

கொழும்பில் ஏமாற்றப்பட்டோம்: இரணைதீவு மக்கள்

சொந்த இடத்தில் வாழவைக்குமாறு கோரி தலைநகர் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியும், தாம் ஏமாற்றப்பட்ட நிலையை உணர்ந்ததாக இரணைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர். கடற்படையின் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து, கடற்றொழிலை மேற்கொள்ள வழிசமைத்து கொடுக்குமாறு கோரி, இரணைதீவு மக்கள் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றையும் கையளித்தனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...

கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கில் 6000 பொருத்து வீடுகள்!

வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. வட.மாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சா் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட.பகுதிக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல்...

சிதைவடைந்த ஆலயங்களைப் புனரமைக்க நடவடிக்கை

வலிகாமம் வடக்கு - தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட, யுத்தத்தால் சிதைவடைந்த நிலையிலுள்ள ஆலயங்களை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பணிப்புரைக்கமையப் புனரமைக்க, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, மயிலிட்டி பிரதேசத்திலுள்ள கண்ணகை அம்மன் ஆலயம், முருகன் ஆலயம் என்பவற்றுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும்,...
Loading posts...

All posts loaded

No more posts