- Sunday
- December 22nd, 2024
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக் கேணிக்கு அப்பால் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிவந்தா முறிப்புக்குளம் பகுதி மற்றும் அதனை அண்மித்த வயல் நிலங்களையே பெரும்பான்மையினர் கையகப்படுத்த முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக கொக்குத்தொடுவாய் விவசாய அமைப்பினர், உடனடியாக வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு...
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 902 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 312 ஏக்கர் அரச நிலமும், 112 ஏக்கர் தனியார் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 318 ஏக்கர் அரச...
வவுனியா மாவட்டச் செயலக அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கான வீடுகள் பறிபோனதா என வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...
வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமக்கான வீட்டுத்திட்டம் போன்ற உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் உள்பட வேறுவேறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்ந்தோர் தமக்கான உதவித் திட்டங்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டிய காலப்பகுதியே...
வலி. வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த பொது மக்களது காணிகள் சில நேற்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டன. வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் பளைவீமன்காமம் வடக்கில் உள்ள ஜே.236 கிராம சேவகர் பிரிவிலுள்ள 33 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன. கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்கள் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறிய நிலையில்...
கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச காணிப்பகுதி அதிகாரி சோ.சேந்தனும்...
அச்சுவேலி பகுதியில் மிக நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களது காணியில் ஒரு பகுதி காணி நேற்று விடுவிக்கப்பட்டது. அச்சுவேலி இராச வீதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் 1.5 ஏக்கர் காணியே நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக மீள கையளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் அச்சுவேலி இராச வீதியில் பொது...
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய நிலையான வீடுகளை அமைத்து வழங்குவதற்கான வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தக்காரர்களிடம் கேள்விமனு கோரப்பட்டது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விமனுக்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வீடமைப்பு வேலைத்திட்டம், ஐக்கியநாடுகள் சபையின் திட்டம் தொடர்பான அலுவலகம், இலங்கையில்...
கிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், படிப்படியாக சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக மத்திய அரசிடம் காணப்படுவதால் எம்மால் ஒரு காணிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிளிநொச்சி இரணைதீவு மக்களை நேற்று(திங்கட்கிழமை) சந்தித்த...
இரணைதீவில் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியமர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு வருகிறார். வடக்கு மாகாண அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரும் முதலமைச்சருடன் இரணைதீவுக்குச்...
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, பல நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிகாமம் தெற்கு, பலாலி விமான தளத்தை அண்டிய காணிகளும் அதில் உள்ளடங்குவதாகவும், இராணு முகாம்கள் மற்றும் விமான தளத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு...
இலங்கை கடற்படையினரால் 1992 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு தாமாகவே திரும்பியுள்ள போதிலும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அம் மக்களுக்கு தேவையான தற்காலிக கூடார கொட்டகைகளை அமைத்து கொடுக்கும் நோக்கில் கிடுகுகள் மற்றும் தென்னை ஓலைகளை, ஈழமக்கள்...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று (09.05.2018) இரணைதீவு மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அம்மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவாலயத்திலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் பாதையும் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டள்ளது. இரணைதீவு மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறியதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடந்தவாரம்...
புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்ட வடக்கு முதல்வர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பாக தான் கதைத்ததாகவும், அவரும் இதுகுறித்து புரிந்துகொண்டபோதிலும், அதனை...
முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு மேற்கொள்ளும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த முகாம் அமைந்துள்ள இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்வதற்காக சென்ற போது, மக்கள்...
கிளிநொச்சி – இரணைதீவில் கிராம மக்களது போரட்டம் தொடர்பில் அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ். மனித உரிமை ஆணைகுழுவிடம் முறை பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்ட...
வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்கு புறமாகவுள்ள (ஜே-240- தென்மயிலை, (ஜே 246 மயிலிட்டி வடக்கு), (ஜெ-247 தையிட்டி கிழக்கு) கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளை உடனடியாக தமது கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுகொண்டுள்ளார். காணிகளை...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள பகுதி கிணறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும், பற்றைகளை துப்புரவு செய்து வீதிகளை அமைக்கும் பணிகளையும், மீள்குடியேறிவரும் மக்களுக்கான குடிநீர் வசதிகளையும் வலி,வடக்கு பிரதேச சபை செய்து வருவதாக பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். கடந்த 13ம் திகதி வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 683 ஏக்கர்...
Loading posts...
All posts loaded
No more posts