- Thursday
- January 9th, 2025
வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட வலி.வடக்கு பிரதேசத்தில் ஆரம்பக் கட்டமாக மக்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விடுதலை செய்வது தொடர்பில் அண்மையில் ஆராயப்பட்டதுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசே குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த குழுவின் நடவடிக்கைகளின்...
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை மக்கள் மீள்குடியேற வேண்டாம் என்று புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது அந்த மக்களை குடியேறவேண்டாம் என்று பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்....
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள், இன்னமும் பாதுகாப்பு முன்னரங்க வேலி பின்நகர்த்தப் படவில்லை. இதனை நகர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று ராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு, வலி.கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்களினுள் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த் துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக, விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்களை மீள்குடியேற்ற அமைச்சர்...
வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்...
இராணுவத்தினர் தங்களை முகாம்களுக்குள் முடக்கிக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.வடபகுதியில் இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக் 25 ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை எவ்வாறு மக்களிடம் மீள கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக 25 வடபகுதிக்கு செல்கிறேன், தற்போது இராணுவத்திடம்...
வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளும் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியதை அடுத்து குறித்த திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 1000 ஏக்கர் விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வளலாயில் மாதிரிக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களை...
யாழ்ப்பாணம், நாவற்குழியில் வழங்கப்பட்ட காணிகள், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரினால் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். நாவற்குழி மேற்கு புதிய குடியிருப்பு மக்களை வியாழக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு...
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது, என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம்...
நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி காலணிகளை பிரிட்டன் அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,...
இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் சுன்னாகம் நலன்புரி நிலைய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் அரசு முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில்...
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை இன்றைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில்...
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொதுமக்களுடன் திங்கட்கிழமை (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு சென்ற விஜயகலா, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன்...
உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திங்கட்கிழமை (26) தெரிவித்தார். மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா? என்று அவரிடம் வினாவியபோதே, அவரிடம் இவ்வாறு தெரிவித்தார்....
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு...
யுத்தத்தால் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர் உள்ளார்கள் அவர்களை...
பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது. தனியாருக்கு சொந்தமான காணியில் இலங்கை இராணுவத்தின் 11ஆவது சிங்க ரெஜிமென் படைமுகாம் அமைந்துள்ளது. இந்தக் காணியினை இராணுவத்துக்கு...
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts