- Sunday
- November 24th, 2024
கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளின் 1,000 ஏக்கர் காணிகளில் மீளக்குடியமர்வதற்கு இதுவரையில் சுமார் 825 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், புதன்கிழமை (29) தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர்...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட, ஏனைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகளை அமைத்திருந்தனர். தற்போது அவ்வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்படுவதால் இது நிரந்தர வேலிகளா என்றும் மீதமுள்ள தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலை ஏற்படலாம்...
வலிகாமம் வடக்கு பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணிகளில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவர்களது கூற்றுக்கள் எமது மக்களை மீள்குடியேற்ற விடயத்திலும் குழப்புவதாகவே அமைந்துள்ளன என கூறியுள்ள...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் 100 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இரண்டு இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பொதுமக்களுடைய வாழ்விடமாகிய வலிகாமம் வடக்கின் 6400 ஏக்கர்...
கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே - 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே - 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம்...
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்த அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள்...
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக மேலும் 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. இன்று (10) வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர். பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000...
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7...
கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 181 குடும்பங்கள் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் ம.பிரதீபன் திங்கட்கிழமை (30) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வளலாய் பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மக்கள் தற்போது தமது காணிகளை துப்பரவு செய்கின்றனர்....
நீங்கள் பொன் தர வேண்டாம். எங்கள் சொந்த மண்ணை விட்டால் போதும். நான் செத்தா எனக்குப் பிறகு என்ர பிள்ளைகளுக்கு எது தங்கட காணியயன்றே தெரியாது. என்னைச் சாகிறதுக்கு இடையில பிள்ளைகளுக்குக் காணி யைக் காட்டவாவது விட வேணும்' என்று 75 வயதான அம்மா ஒருவர் தெரிவித்தார். வயாவிளான் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் மீள்குடியமர்வுக்கு...
உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தமது நிலத்தினை பார்வையிடச் சென்ற வசாவிளான் கிழக்கு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள 197 ஏக்கர் காணி இன்றைய தினம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என கூறி 411 குடும்பத்தை அழைத்து...
வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளில் 1,100 நிலப்பரப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக விடுவிக்கப்படும்.என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மூவர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சம்பூர்...
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்த வசாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்படவுள்ளது. மீள் குடியமரவுள்ள மக்களை, குட்டியப்புலம் பிரதேசத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருகை தருமாறு மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்துள்ளார். வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச செயலா ளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்...
கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படும் 450 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை (23) கையளிக்கவுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, அக்காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதியும் பிரதமரும் கையளிப்பார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்தார்....
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் 1000 ஏக்கரை விடுவிப்பது என்ற அறிவிப்பின் படி முதற்கட்டமாக 400 ஏக்கரை விடுவித்து, அதில் மக்களை மீளக்குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்துகொள்வர். -...
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வளலாய் பிரதேசத்தில், காணி உரிமையாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவு மக்கள், அவர்களின் காணிகளைச் சென்று அடையாளப்படுத்த வெள்ளிக்கிழமை (13) அனுமதி வழங்கப்பட்டது. உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச்...
எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று இல்லை. எம்மை எமது சொந்த காணிக்கு செல்ல அனுமதித்தாலே போதும். நாம் எமது காணியில் கொட்டில்களையோ குடிசைகளையோ அமைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ்வோம் பலாலியை சொந்த இடமாக கொண்ட எஸ்.சரவணமுத்து என்பர் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284...
உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்தை 25 வருடங்களுக்கு பின்னர் பர்வையிட்டனர் அந்த கிராம மக்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் அக்காணிகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் இன்று தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் புதன்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர்...
Loading posts...
All posts loaded
No more posts