- Tuesday
- January 7th, 2025
இந்த வருடம் மார்கழி மாதத்திற்குள் வளலாய் பகுதி மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முயற்சிகள் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதியளித்தார் இன்றைய தினம் மீள்குடியேற்றப்பட்ட. வளலாய் பகுதி மக்களை எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்து பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு கெட்டகாலம் போய் நல்ல காலம் மலர்ந்துள்ளது.முதலில் முழுமையான...
வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கதைத்து திடமான முடிவு எடுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்கு வசாவிளான் ஒட்டகபுலம் காணி விடுவிப்பு குறித்த கூட்டம் வசாவிளான் மாதா கோவில் நடைபெற்றது. அங்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். இந்த காணியை மீண்டும் மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால், குறித்த போராட்டம் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும்,...
யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 150 சிறுவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இன்றுவரை தமது கல்வியை தொடர்ந்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி தமிழ்க் குடும்பங்கள்...
வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,37,529 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நவீன துரித வீட்டுத் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கான ஆர்வலர்களிடமிருந்து திட்டக்கோரலுக்கான பத்திரங்களை நிதியிடல் வசதியுடன் பெற்றுக் கொள்ள புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு...
வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில் இடம்பெறும் என, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் பணிப்பாளர் நாயகம் மாளியக்க தெரிவித்ததாக, வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கான மீள்குடியேற்றத் தலைவர் தனபாலசிங்கம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அப் பகுதியில் காணப்படும் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதுறைகள் என்பன மிகவிரைவில் விடுவிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கு...
இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள்...
வலிகாமம் வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி, வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு...
இன்னும் இரண்டு மாத காலத்தில் அவகாசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற விடயத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சர் .எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். புதிய அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் முதல் தடைவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில்...
யாழ்.மாவட்டத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 23 பேருக்குச் சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு படைத்தரப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை, மருதங்கேணி, பருத்தித்துறை, கரவெட்டி, உடுவில், யாழ்ப்பாணம், சங்கானை ஆகிய 10 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 29 கிராமசேவர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான...
இலங்கையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், அங்கு வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்துவருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இடம்பெயர்ந்தவர்களின் 43 முகாம்கள் இருப்பதாக தாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 1500 குடும்பங்களைச் சேர்ந்த 6000 பேர்...
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் மரிக்கோ யமமொடோ, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு, வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மீள்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரச உதவிகள், முகாம்களில் எவ்வளவு காலம் இருந்தமை என்பது தொடர்பிலும்...
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில், உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த மார்ச் 13ஆம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையில் தேங்கியுள்ள கல் மற்றும் மணல் திட்டுக்களை அகற்றி, இறங்கு துறை (வான்) அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனம் இப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருவதாக திட்ட மேற்பார்வையாளர்...
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையோரமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த பாரிய மண் அணை, கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்படுகின்றது. குறித்த பகுதி, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் படிப்படியாக மீள்குடியேறி வருகின்றனர். யுத்த காலத்தின் போது, இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு இரண்டு கிலோமீற்றர்...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில் ஆகிய பகுதிகளில் ஏ-9 வீதிக்கு வடக்கேயுள்ள வெடிபொருட்கள் முற்றாக அகற்றப்பட்ட 1.7 கிலோமீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ப.ஜெயராணி அறிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, பச்சிலைப்பள்ளி...
இராணுவத்தினர் வலி.வடக்கு மண்ணில் நீண்டகாலம் உண்டு, உறங்கி வாழ்ந்து விட்டனர். தாங்கள் சுகபோகமாக வாழ்ந்த அந்த மண்ணை விட்டு வெளியேற இராணுவத்தினர் விரும்பவில்லை. - இப்படித் தெரிவித்திருக்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொணடு...
வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் சொந்த இடங்களில் ஒரு சிறிய தொகுதியை விடுவிக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது. கீரிமாலை நகுலேஸ்வரம் பகுதியில் உள்ள மக்களுடைய சில வீடுகள் உள்ளடங்கிய வசாவிளானில் இருந்து வளலாய் வரைச் செல்லும் செமன்றி வீதி, சாந்தைச் சந்தியுடன் தொடுகையுறும் வீதிகள் மற்றும் அதனை அண்மித்த 27...
மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட பாதைகளை விடுவிக்க மற்றும் எஞ்சிய காணிகளை விடுவித்தல் தெடர்பான விடயங்களில் இராணுவத்தினர் விடாப்பிடியான நிலைப்பாடு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்த குழுவினரை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி வரவேற்றார். இதன்பின்னர் முப்படைத்தளபதிகள் ,...
மீள்குடியமர்வு தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸநாயக்க இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளார். வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த மாதத்தின் இறுதியில், மீள்குடியேற்ற அமைச்சர் யாழ். வந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் புதன்கிழமை (24) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், இரா.செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,...
Loading posts...
All posts loaded
No more posts