Ad Widget

25 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டது வறுத்தலைவிளான் பாடசாலை

வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த வருடம்...

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி ஜூன் 2 முதல் சொந்த இடத்தில் இயங்கும்

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம்...
Ad Widget

21 ஆம் திகதிக்கு முன்னர் வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்யாவிடின் மிகப்பெரிய போராட்டம்!!

ஐ.நா உள்ளக விசாரணை நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துவிட்டு...

அடிப்படை வசதிகளற்ற நிலையில் 15 குடும்பங்கள் மீள்குடியமர்வு

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 2015ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கில் 15 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மீளக்குடியேறியுள்ளனர். பலாலி வடக்கு அன்டனிபுரம் பகுதி, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 165 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்....

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய சோதனைச் சாவடி நீக்கப்படவுள்ளது!

காங்கேசன்துறை வீதி – மாவிட்டபுரக் கந்தசாமிக் கோவிலுக்கருகில் உள்ள இராணுவச் சோதனைச்சாவடி அங்கிருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவுள்ளது. இதனால் மங்கள் எந்தவொரு கெடுபிடிகளும் இன்றி காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வலி வடக்கு பாதுகாப்பு வலயலத்தின் இந்தச் சோதனைச்சாவடியானது, காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி ஆகியவற்றின் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில்...

65 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கு பலவழிகளிலும் முட்டுக்கட்டை! தடையைத் தாண்டிப் பயணிப்போம்!!

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றபோதிலும் அதை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்போம் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் நிலைவரம் தொடர்பில் டக்ளஸ் தேவாந்தன்...

நடேஷ்வரா கல்லூரிக்கு செல்வதற்கு இராணுவம் இன்னும் தடையாகவுள்ளது!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வலி வடக்கு நடேஷ்வரா இந்துக் கல்லூரிக்குச் செல்ல இன்னும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் அதிபருடன் வாருங்கள் என இராணுவத்தினர் கோருவதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மே...

அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் வயோதிப பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கில் அமைந்துள்ள தனது காணியை துப்புரவு செய்த வயோதிப பெண், அதிகரித்த வெப்பநிலையால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. பலாலி தெற்கைச் சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான பற்றிக் பெர்ணான்டோ றீற்றம்மா (வயது 75) என்ற வயோதிப பெண் இவ்வாறு உயிரிழந்தார். காணி...

பொருத்து வீடுகளைப் பெற வடக்கு மக்கள் முண்டியடிக்கிறார்கள்

கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரி பொருத்து வீடுகள் போன்ற, வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் முண்டியடிப்பதாகத் தெரிவித்துள்ளார் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். “மாதிரி வீடுகளைப் பார்வையிட்ட பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்த வீடுகளைப் பெறுவதற்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுபோன்று வவுனியா மாவட்டத்திலும், 8,500...

உருக்கு வீடுகள் தொடர்பில் இலங்கை நிபுணர் குழு எதிர்ப்பு: பல குறைபாடுகளும் சுட்டிக்காட்டு

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 65 ஆயிரம் உருக்கு வீடுகள் போதிய அத்திவாரங்களோ கூரை தொடர்பான ஆதரங்களோ இல்லாதவையாக காணப்படுவதாகவும், காற்றோட்ட வசதிகளும் இல்லாதிருப்பதாகவும் மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடுகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான ஆய்வை மேற்கொண்ட பின்னர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் பிரியன் டயஸ், டொக்டர் நக்கிகா கல்வத்துற...

65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்!

வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன. இந்த பெயர் விபரங்கள் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மருதன்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கான வீட்டுப் பயனாளிகளின்...

வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள...

சேந்தாங்குளம் ஆலயத்திற்கு சொந்தமான 36 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு

யாழ்ப்பாணம் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி கடற்படையினரால் இன்று சனிிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சேந்தாங்குளத்திலுள்ள ஆலயத்திற்கு சொந்தமான குறித்த ஏக்கர் காணிகள் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தநிலையில், கத்தோலிக்க மக்கள் மற்றும் குருக்களின் எதிர்ப்பினால் குறித்த காணி விடுவிக்கப்பட்டதாக அருட்தந்தை ஜெ.ஏ.அருள்தாஸன் தெரிவித்தார். குறித்த காணியை...

யாழில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியின்மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதுடன், மூவாயிரம்...

65,000 வீட்டுத்திட்டம் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பது, எந்த நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக்கூட்டத்திலேயே இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான இறுதி முடிவினை வழங்குவது தொடர்பில், சிறீலங்கா அரச...

வலி‬.வடக்கில் ‪வறுத்தலைவிளான்‬, ‪ஒட்டகபுலம்‬ பிரதேசங்களை விடுவிக்க இராணுவம் சம்மதம்

‎வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒட்டகப்புலம்‬, வறுத்தலைவிளான் பிரதேசங்களை முழுமையாகவும் ‪‎காங்கேசன்துறையில்‬ சில பகுதிகளையும் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்க இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளை விடுவிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணிகள் முடிவடைந்ததும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் கடந்த வாரம்...

பொருத்து வீட்டுத் திட்டம்: உடன் இடைநிறுத்த ஜனாதிபதி பணிப்பு!

பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில்...

65,000 வீட்டுத் திட்ட வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துக- வட மாகாண ஆளுநர்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள வீடுகளின் வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பரிந்துரை செய்துள்ளார். இந்தியாவின் த ஹிந்து பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்தை நிறுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ள வட மாகாண ஆளுநர் பல்வேறு மாற்றங்களுடன் அதனை...

விடுவிக்கப்பட்ட பலாலி பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு

அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பகுதிகளான பலாலி வடக்கு, பலாலி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு மற்றும் காட்டுமரங்கள் திருடப்படுவதாக அப்பகுதியில் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். விடுவிக்கப்பட்ட பகுதிகள், பலாலி பொலிஸ் எல்லைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. பலாலி பொலிஸ் நிலையம் மக்கள் மீளக்குடியமர்ந்தும் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதானால், தாம் பெரிதும் சிரமங்களை எதிர்;கொண்டு...

மக்களின் கருத்தறிய பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பான மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான முயற்சிகளில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு ஈடுபட்டுள்ளது. அதற்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான கருத்துப் பெட்டிகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக இக்கருத்துப் பெட்டி வைக்கப்பட்டுள்ளன. இவ்வீட்டுத் திட்டம் தொடர்பில் பல தரப்புகளிலும் பல்வேறு...
Loading posts...

All posts loaded

No more posts