- Tuesday
- January 21st, 2025
வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் பொது மக்களிடம்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 672 ஆவது நாளாக கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்...
வலி.வடக்கு, தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாமென அப்பகுதி மக்கள் அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலி.வடக்கு தையிட்ட ஆவளைப் பகுதியில் மயானம் அமைக்க முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின்...
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள காமினி சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி- கண்டாவளை பிரதேச...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது. நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு மே...
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையைச் நேர்ந்த 42 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார். 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மூன்று...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்ரெயர் நிலப்பரப்பு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. எனினும் இது வரை 19 ஆயிரம் ஹெக்ரெயருக்கும் அதிகளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்த ஆய்வுகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவிக்கையில், “முள்ளிக்குளம்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்கீழ் ஒவ்வொன்றும் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 28 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீடுகளை இந்திய மற்றும் இலங்கை கட்டுமான நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான யோசனையை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்திருந்தார்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான யோசனையை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. மேலும் இவ்வாறு...
இராணுவம் எமது காணிகள் மூலம் வருமானத்தினை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நாங்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம் ஒன்றரை வருடங்களை கடந்துள்ள...
வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுளதுடன்,...
வடக்கில் சுமார் 30 ஆயிரம் மீட்டர் வரை கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கண்ணிவெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக...
மீள்குடியேற்றத்திற்கு போதுமான நிதி இல்லாமையினால் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நடாளுமன்ற நிதிக்குழு நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தது. இதன்போதே மேற்படி...
வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான 7 கட்டடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அச்சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்குப் பகுதியில் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்படாத பகுதிகளிற்குள் அரச கட்டடங்கள்...
23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள்...
வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டங்களை கொண்டுவரும்போது பல்வேறு எதிர்ப்புக்களும் தடைகளும் வருவதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேநேரம், வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்த தமது அமைச்சிடம் போதியளவு பணம்...
தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே...
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச மற்றும் பொதுமக்களின் 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,...
தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,”எமது போராட்டம் 500 ஆவது...
Loading posts...
All posts loaded
No more posts