Ad Widget

ஜனாதிபதி‬ வருகையின் போது ‪வலி‬.வடக்கில் மேலதிக ‪‎காணிகள்‬ விடுவிப்பில் ஏந்த ஏற்பாடும் ‪‎இல்லை‬

யாழ்ப்பாணத்துக்கு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் நிலையில் அவரது வருகையின் போது வலி.வடக்கில் மேலதிக காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வமான எந்த நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முன்னர் தமக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிலவிடுவிப்பு மற்றும் மீள்குடியேற்ற அறிவிப்பை யாழ்ப்பாணம் வருகையின் போது ஜனாதிபதி விடுவிப்பார் என...

காளி கோவிலை பிள்ளையார் கோவிலாக மாற்றிய இராணுவம்

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வளாகத்தினுள் இராணுவத்தினர் புத்தர் சிலையினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். அத்துடன் அங்கு இருந்த காளி கோவிலையும் பிள்ளையார் கோவிலாக மாற்றி உள்ளனர். யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைககளும் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி முதல் உள் நாட்டு யுத்தம் காரணமாக...
Ad Widget

மீள்குடியேற்றத்தை தாமதித்தால் போராட்டம் செய்வோம்;வலி வடக்கு மக்கள்

கொஸ்கம சாலாவ பகுதியில் ஆயுதக் கிடங்கு வெடித்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிவழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம், 27 வருடங்களாக சொந்த இடத்தில் தங்களை மீள்குடியேற்றம் செய்யும் விடயத்தில் மாற்றான் மனப்பான்மையை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வலி வடக்கு பிரதேச மீள் குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி,...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணியில் விரைவில் மீள்குடியேற்றம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக காணியை அரசுடைமையாக மாற்றி அங்கு 400 குடும்பங்களை உடனடியாக மீள்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதோடு, இவர்களில் 11 ஆயிரம் குடும்பங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவுகளை...

மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை

வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி, ஊரணி, காங்கேசன்துறை, பலாலி, தையிட்டி ஆகிய பகுதிகளில் தற்போது மக்கள் மீள்குடியேற்ற வேண்டும் என்று வலியுருத்தி இன்று யாழ் வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இவ்வழிபாடு வலிவடக்கு பிரதேச மீள்குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் தழிழ் தேசிய...

ஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை: முதலமைச்சர்

வலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத் தரப்பினர் அதற்கு தடையாகவுள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி இயன்ற வரை முயற்சித்து வருகின்றார். ஆனால் அக் காணிகளை விடுவிப்பதில் இராணுவத்தினரே பல...

யுத்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு தரமான வீடுகள்

யுத்தத்தினால் வீடுகளை இழந்த வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்படவுள்ள 65,000 விடூகளை பெற்றுக் கொள்வதற்கு 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் சிறைச் சாலைகள் தொடர்ப்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய போது...

ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின் போது பாதைகள் திறக்கப்படுமா ?

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண...

நாவற்குழியில் இராணுவக் குடியிருப்பு!

யாழ்நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் இராணுவக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலேயே இக்கிராமத்துக்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திட்டத்தின்படியே இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் அமைக்கப்பட்டு தற்போது அமைதியாகவும் எந்தவொரு எதிர்ப்புமின்றி விரிவாக்கப்பட்டுவருகின்றது. தற்போதைய அதிபர்...

மீள்குடியேற்ற விவகாரம்: தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் மாற்றமில்லை

'யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட மயிலிட்டி பிரதேசம் தொடர்பில், இராணுவத்தினர் இதுவரையில் தமது எதிர்ப்பினையோ அல்லது காணி விடுவித்தல் தொடர்பான மற்றுப்பினையோ முன்வைக்கவில்லை. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் நான், கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன். வடக்கு மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை. சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

யாழ். மாவட்டத்தில் இதுவரை 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

யாழ். மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இந்தியாவில் இருந்து வருகை தந்த 955 குடும்பங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு 33,472 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 10,770 குடும்பங்கள் இன்னும்...

தமிழர் நிலங்களை மறுக்க படையினருக்கு அதிகாரம் இல்லை!

தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களை மீளக் கையளிக்கமுடியாது எனக் கூறுவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களின் சொந்த நிலங்களை விடுவித்து அவர்களை அவர்களது காணிகளில் குடியமர்த்த மறுக்குமானால் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடுவதுடன், மக்கள் போராட்டத்தை...

யாழில் காணிகளை இழந்த 9 ஆயிரத்து 700 பேர் தொடர்ச்சியாக முகாம்களில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணிகளை இழந்த 9 ஆயிரத்து 700 பேர் தொடர்ச்சியாக முகாம்களில் தங்கியிருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, 6 ஆயிரத்து 581 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் பொதுமக்களின் 9 ஆயிரத்து 205 குடும்பங்களின் 6...

வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம்களுக்கு 21 ஆயிரத்து 663 வீடுகள்!

போரினால் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக தெற்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைக்கும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்த...

104 குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிப்பு

பலாலி வடக்கில் மீளக்குடியமர பதிவு செய்து காணி இல்லாத 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணி பிரிவு ஊடாக தலா 2 பரப்பு காணி நன்கொடையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு, கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது....

சொல்வதைச் செய்கிறார்கள் இல்லை

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் இங்கு வைத்து வழங்கும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டினார். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு அவர்...

வலி.வடக்கில் 400 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!

வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள 400 ஏக்கர் காணிகள் இன்னும் சில வாரங்களில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன...

யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பொருத்துவீடுகள் தகுதியானவை

வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீடுகள் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்தமானவையாக அமையும் என்று பேராதனை பல்கலைகழகம் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.   மீள்குடியேற்றத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.   உலோகங்களினால் அமைக்கப்படும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளன.   இந்த வீடுகள்...

மக்களை மீள்குடியேற்றம் செய்யும் சாத்தியக் கூறுகள் நல்லாட்சியிலும் இல்லை

வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரையில் நல்லாட்சி அரசாங்கத்திலும் காணப்படவில்லை என சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாணத்தில் நீதியமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் மற்றும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...

தற்காலிக வீடுபோதும் : ஒன்றரை மாதக் குழந்தையின் தந்தை மன்றாட்டம்

நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீட்டைடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி - சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும் இதுதான் எமது நிலை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். யுத்தப் பாதிப்புக்களால் மீளமுடியாமல் தவிக்கும் தமக்கு இயற்கையும் இடையூறு விளைவிப்பதாக...
Loading posts...

All posts loaded

No more posts