- Sunday
- November 24th, 2024
வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திவரை விடுவிக்க சாதகமான முடிவை வழங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன. அதிகாரிகளுக்கும் இராணுவத் தரப்பிற்கும் இடையிலான பேச்சுக்களின் ஊடாக இவ்வாறு இணக்கம் காணப்பட்டது. வலி.வடக்கில் 201 எக்கர் கடந்த மாதம் 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திப் பகுதி இந்த விடுவிப்பில் உள்ளடக்கவில்லை. இதற்குப் பதிலாக...
வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக கட்டப்பட்டு வரும் இராணுவ முகாமால் அப்பகுதிகள் வாழ் பூர்வீக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றியுள்ளது. 105 குடும்பங்களுக்கு சொந்தமான 169 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்தும், பாரிய வாயிற் துண்களை நிறுவியும் வருகின்றனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு...
யாழ் பலாலி மற்றும் வறுத்தலைவிளான் பகுதிகளில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வலி வடக்கில் முப்படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக் குடியமரும் மக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக வறுத்தலைவிளான் உள்ளிட்ட 07 இடங்களில் குடிநீர்த் தொட்டி அமைத்தல் திட்டத்தின் கீழ் முதலாவது நீர்த்தொட்டி வறுத்தலைவிளானில் அமைக்கப்பட்டது....
யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காங்சேசன்துறை பகுதி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் விடுவிக்காது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு...
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடந்த 28 வருடத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாமில் வாழ்ந்து வந்த மக்களுக்கு முதற்கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது. 28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து தற்போது குடும்பப் பெருக்கத்தினால் பலர் காணியின்றி முகாம்களிலே வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய மக்களுக்கே கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன....
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களாக வசித்து வந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டு அதற்கான உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வடக்கில் யுத்தம் நடைபெற்றவேளையில் சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து இந்தியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்த மக்கள், 1992 ஆம் ஆண்டு சிதம்பர முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில் 193...
வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக அரசாங்கம் போலியான படத்தை சர்வதேசத்திற்கு காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பகுதியில் ஒரு தொகுதி மக்களின் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கு...
அண்மையில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் காங்கேசன்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டபோதும் அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றப்படாது அச்சோதனைச்சாவடியை மறைமுகமான ஓர் இடத்தில் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உருமறைப்புச் செய்யப்பட்ட சோதனைச்சாவடியில் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், அவ்வீதியால் பயணிக்கும் மக்களைக் கண்காணிப்பதுடன், அவ்வீதியால்...
மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள 201.3 ஏக்கர் காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கும் அக்காணிகளைத் துப்புரவு செய்வதற்கும் உதவுமாறு, மேற்படி காணிகளின் உரிமையாளர்கள், நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தனர். வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து, கடந்த சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர்,...
வலி.வடக்கில் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னர் இருந்த பல இந்து ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்திருந்த பகுதிகளில் சனிக்கிழமை 201 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள குடியமர அனுமதித்தனர். அதனை அடுத்து அப்பகுதிகளை...
யாழ்ப்பாணத்தில், மீள்குடியேறுவதற்கான காணி இல்லாத மக்களுக்கு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்தப் பகுதியில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இதற்காக, 140 ஏக்கர் காணியைப் பெறுவதற்குரிய அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் கோரினார். அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்ற பின்னர், காணியில்லாத குடும்பங்களுக்கு...
வலிகாமம் வடக்கு பகுதிகளிலுள்ள தங்களுடைய காணிகளை விடுவிக்க கோரி, மக்கள் இன்று நடைபவனியொன்றை மேற்கொண்டுள்ளனர். மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் நல்லூர் ஆலய முன்றலில் கூடி, அங்கிருந்து யாழ். நகரிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை நடைபவனியை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் நல்லூர் ஆலயத்தில் கூடிய...
மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர். மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்தார். இதேவேளை மயிலிட்டியை சேர்ந்த...
தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 5 ஆயிரத்து 100 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை மீளக்கையளிக்கப்பட்டன. இந்தநிலையில் தெல்லிப்பளை பிரதேசசெயலர் பரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5100 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வல்லை, தெல்லிப்பளை, அராலி வீதியை அண்மித்த...
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம்...
வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற...
வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக் காணி விடுவிப்பு தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதுடன் உரியவர்களிடம் காணி பத்திரங்களையும் வழங்கவுள்ளார்....
கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். எனினும், எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடனிருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம்...
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்த நிலங்களை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக வலிகாமம் வடக்கு மக்கள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை நம்பி வாக்களித்த தம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பட்டதில் நேற்று வெள்ளிக்கிழமை...
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 65 ஹெக்டேர் காணியை மீளக்குடியேற்றத்திற்காக அரசு சுவிகரிக்கும் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த யோசனை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமையவே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மிகவும் சிறந்த,...
Loading posts...
All posts loaded
No more posts