- Saturday
- November 23rd, 2024
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்....
யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன...
இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று தெல்லிப்பளைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் குறித்த நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காங்சேசன்துறை பகுதியில் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்ததுடன்...
சிங்கள, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றுவதே மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம் என தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட தேவையில்லை என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் மீள்குடியேற்ற செயலணி குறித்து...
இராணுவத்தினரிடமிருந்து காணிகளை மீளப்பெறும் மக்களுக்காக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு வேலைத்திட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் இணைந்து செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 2,221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்...
முகமாலை பகுதியில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநாச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, நவனிவெளி, இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முழுமை பெறாத காரணத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற...
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) அப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்து குறித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அத்துடன் மீள் குடியேற்றத்திற்காக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கருகில் இராணுவத்தினரால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளையும் பார்வையிட்டுள்ளார். பலாலி உயர் பாதுகாப்பு...
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியமர முடியாதிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய 12 கிலோ மீற்றர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் மீள்குடியேற்றக் குழுவின்...
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். எனினும் நாம் வழங்கிய கால எல்லைக்குள் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாமை கவலையளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தனது செயளாலர் ஊடாகவே இந்தச் செய்தியை கேப்பாப்புலவு மக்களுக்கு கூறியுள்ளார். நேற்று மாலை...
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி 31 முகாம்களில் வசிக்கும் 971பேர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் காணி இல்லாதோருக்கு வழங்கப்பட்டுள்ள காங்கேசன் துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கு அண்மையில்...
காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்'' என்று மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர்...
வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள படைமுகாங்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலய எல்லை வேலிகளையும் நிரந்தரமாக அமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளே இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வலிகாமம் வடக்கு இராணுவ...
வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர். கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அழிக்கப்படும்...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச்...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த மக்கள் காணிகளின் சில பிரிவுகள், அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் எஞ்சியுள்ள மக்களின் வீடுகள், தளபாடங்கள் இடித்து அழிக்கப்பட்டு களவாடப்படுகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த, மீள்குடியேற்ற பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்...
யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையிலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதிக்கு முன்னர் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்.மாவட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்தன. எந்தெந்தெக் காணிகள் விடுவிக்கப்படும் என்று தெரியாத நிலையில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மீள்குடியமர்வை எப்படிச்செல்வது எனத் தெரியாது...
இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் சந்தி 26 வருடங்களின் பின்பு மக்கள் பாவணைக்காக நேற்று முதல் மக்களுடைய திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து கட்டுவன் சந்திவரை செல்லும் சுமார் 600 மீற்றர் வரையான வீதியே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளது. வல்லை அராலி வீதியில் 600 மீற்றரும் வல்லை-கட்டுவன் –மல்லாகம் வீதியில் 300 மீற்றரும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன....
போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சு ஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. "வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில் 21 ஆயிரத்து 663 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்...
உள்நாட்டில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வரும் மக்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்துவதற்காக விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts