- Wednesday
- December 25th, 2024
1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான...
தமிழக அகதி முகாம்களிலிருந்து மேலும் சில இலங்கை தமிழர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர். இதில் 17 பெண்களும், 13 ஆண்களுமாக மொத்தம் 11 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் உள்ளனர். இவர்கள் எதிர்வரும் 18ம் திகதி மதுரையிலிருந்து ஶ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர். தற்போது நாடு திரும்ப...
வடமாகாணத்திலிருந்து 26 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மூடுமாறு வடமாகாண சபை நிர்வாகம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் வடமாகாண முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதில்...
அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள புனித இந்து மயானத்தினை இல்லாது செய்து, மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு, அப் பகுதி மக்கள், நேற்று சனிக்கிழமை (01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உரித்தான மேற்படி பூனையன் காடு இந்து மாயனத்தினை அழித்து வலி. வடக்கு...
யாழ்ப்பாணம் கீரிமலை இந்துக்களின் புண்ணிய பூமியாக பார்க்கப்படுகையில் அதனை புனித பூமியாக்கி அங்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுவினர் தலைவர் ச.சஜீவன் குற்றம்சுமத்தியுள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்திருப்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை...
வலிவடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட் காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்த கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட...
வடக்கு மக்களின் காணிகளை அவர்களுக்கு விரைவாக வழங்கி மீள்குடியேற்ற வேண்டுமென தென்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மகஜரொன்றை அனுப்பவுள்ளனர். நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கருவலஸ்வெல மற்றும் இடங்களை சேர்ந்த தென்பகுதி மக்களை கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். அம்மக்கள் வலி.வடக்கில் இருந்து...
அடுத்த மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800 ஏக்கர் காணிகளிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்னாயத்தங்கள் அரச அதிகாரிகளினாலும், இராணுவத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட வேண்டிய 4419 ஏக்கர் நிலப் பகுதியில் ஓரங்குலத்தைக் கூட விடுவிக்க முடியாது என, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு கண்டனம் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாகக் குறித்த நிலங்கள்...
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மேலும் 700 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ளதாக யாழ்.அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை, கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆகிய பிரதேசங்களில் காணப்படும் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுமார் 26 வருடங்களுக்கு மேல் இராணுவத்தினரின் பிடியில் காணப்படும் வலி வடக்கின்...
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க...
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று மாலை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விஜயகலா மகேஸ்வரன் பாதுகாப்புச் செயலர் வழங்கிய வாக்குறுதியை மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தன்னிடம் இன்னும் 15 நாட்களுக்குள் பரவிபாஞ்சான் மக்களின் ஒருதொகுதி காணி...
பலாலி ஆரோக்கிய மாதா தேவாலய மணி நேற்று வியாழக்கிழமை திருட்டுப் போயுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மேற்படி ஆலயத்தின் பெருவிழாவுக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். கடந்த 26 வருடங்களின் பின்னர் மேற்படி ஆலயத்துக்கு பொதுமக்கள் மதவழிபாடுகளை மேற்கொள்ள படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். இந் நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆலயத்தினை பார்வையிடுவதற்கும்,...
யாழில் மீண்டும் மீளக்குடியேறி வாழ விரும்பும் முஸ்லிம் மக்களிற்கான காணி வீடமைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (7) யாழ் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது . இன்று காலை 08.30 மணியளவில் இப்பதிவுகள் கிராம சேவகர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொள்ளப்படடன. அத்துடன் வீடு புனரமைப்பு புதிய வீட்டுத்திட்டம் போன்ற பதிவுகளும் இங்கு மேற்கொள்வதற்கு வசதிகளை பிரதேச...
கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் இன்று எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாக அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா். இது தொடர்பில் மேலும்...
கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக தொடர்ந்தும் கவயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரவிபாஞ்சான் பிரதேசத்தில் மூன்றரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த 31ஆம் திகதி குறித்த மூன்றரை ஏக்கர் காணி...
வலிவடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றையதினம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்திய வேளையே மேற்கண்ட எச்சரிக்கை...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடனான நேற்றை சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக பிராதானிகளுடனான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில்...
கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த...
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்றரை ஏக்கர் வரையான பொதுமக்களின் காணியை இன்று விடுவிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவி த்தி ருந்தார். எனினும்...
Loading posts...
All posts loaded
No more posts