- Tuesday
- December 24th, 2024
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை....
நாவற்குழியில் உள்ள, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள 250 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை இடம்பெற்றது. யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். பல வருடங்களாக, அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய...
கிளிநொச்சி – முகமாலை பகுதியில், இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஐந்து ஏக்கர் காணி நேற்று (27) விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி – முகமாலையில், இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்திருந்த பொதுமக்களின் காணி நேற்று விடுவிக்கப்பட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 552 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியினால், கிளிநொச்சி மாவட்ட...
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்கும் நோக்குடன் அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றால் , நிகழ்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாவற்குழியில் எதிர்வரும் 30ம் திகதி மானிய அடிப்படையில் வீடமைத்து...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பெருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறன. அந்த வகையில் கிளிநொச்சி...
முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதி படைத் தேவைக்கு அவசியமென குறிப்பிட்டுள்ள ராணுவம் குறித்த பகுதி விடுவிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது. படைத் தேவைக்காக இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிப்பதாக ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும்...
கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்....
பொருத்துவீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு நேற்றைய தினம் 11.30 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த...
வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 325 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த இலாணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஊரணி மீன்பிடி துறைமுகதை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படை தலைமையக படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது....
வலி வடக்கு மக்கள் தமது சொந்த வீடுகளில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிப்பது கண்டு ஊறணி மக்கள் தமது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்தவாறு கண்ணீர் மல்க வெளியேறினர். நேற்று முன்தினம் முதல் ஊறணிப் பகுதியில் ஓர் இறங்குதுறையின் ஊடாக மீனவர்கள் கடலுக்குச் சென்றுவரும் வாய்பு வழங்கப்பட்டது. இதற்காக 2 ஏக்கர் நிலப்பரப்பும் படையினரின் பிடியில்...
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறீலங்காப் படையினர் அனுமதியளித்துள்ளனர். இடம்பெயர்ந்து மாவிட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள 130 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு, ஊறணிப் பகுதியில் இருந்து அத்தொழிலை...
யாழ்ப்பாண வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மயிலிட்டி, ஊறணி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், அதுமட்டுமன்றி 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் தேசிய நல்லிணக்கவாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14) ஊறணி...
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர்,...
வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் அன்று (14.01) இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்குப் பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இருக்கின்ற காரணத்தினால், கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும்,...
வலிகாமம் வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்காது ஒரேயடியாக முழுமையாக விடுவிக்கவேண்டுமென வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.சஜீவன் கருத்துதெரிவிக்கையில்- வலிகாமம் வடக்குப் பகுதியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றது. கடந்த 4 ஆம் திகதி யாழ்.விஜயத்தின் போது வலி.வடக்கின் ஒரு பகுதி விடுவிக்கப்படும்...
யாழ் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 43 பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பத்துள்ளார்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், பொருத்துவீட்டை பெற்றுக்கொள்ளவிட்டால் கல் வீடு வழங்கப்படாது என பொதுமக்களிடம் பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை எனவும் தெரிவித்துள்ளார். மீள் குடியேற்ற அமைச்சினால் வடக்கில் பொருத்து வீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த பொருத்துவீட்டு திட்டத்தில்...
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், தாம் பெற்றுக்கொள்ள விரும்பும் அரச காணிகளை அடையாளம் காட்டுமிடத்து, அவற்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில், பரிசீலனை செய்யப்படும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
“பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், தெரிவித்தார். வவுனியா ரம்பவெட்டி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, புதன்கிழமை அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு...
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத் தலைவர் லோர்ட் நெசபி நேற்று (04) யாழ்ப்பாண மாவட்ட...
பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், உயர்மட்ட...
Loading posts...
All posts loaded
No more posts