- Thursday
- January 23rd, 2025
கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்னால், வீமானப்படையினரால் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகையில், “விமானப்படையின் காணி, அதனை மீறி உட்சென்றால் சுடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை (18) இரவோடிரவாக அந்த அறிவித்தல் பலகை மாற்றப்பட்டு, “இது விமானப்படையின் காணி,தேவையில்லாமல் உட் செல்லத் தடை” என்றும் எழுதப்பட்டு புதிய அறிவித்தல் பலகையொன்று போடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என கோரி, வடமாகாணம் முழுவதும் நாளை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மாணவர்கள் பாடசாலை வாசலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு, வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்" என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில், ஜனநாயக வழிகளில் அரசாங்கப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட...
கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்த விதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை...
நல்லாட்சி அரசு தாமாகவே முன்வந்து செய்திருக்க வேண்டிய ஒரு பணியை கேப்பாப்பிலவு மக்கள் கடந்த 18 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தியும், இதுவரை அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது என யாழ் ஆயர் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் குறித்து யாழ். ஆயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த...
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய காணிகள் மீண்டும் கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த...
இன்று 18ஆவது நாளாக தமது நிலத்தை மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பிலவுக்குடியிருப்பு மக்களைத் துரத்துவதற்காக விமானப்படையினர் நாய்களை ஏவிவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிலவுக் குடியிருப்பு மக்களின் சிறீலங்கா விமானப்படையினர் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு குறித்த மக்கள் கடந்த 31ஆம் நாளிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...
சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை தமக்கு மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு, இடைத்தங்கல் முகாம்களை மூடி, மக்களை சொந்த இடங்களுக்கு மீள அனுப்புவதாக முன்னைய அரசாங்கம் ஐ.நா. மன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக பாவனை...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத்...
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவமும் பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு மேலாக விமானப் படையினரின் விமானமொன்று திடீரென வட்டமிட்டுச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள்...
முல்லைத்தீவு - கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 17ஆவது தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
முல்லைத்தீவு – கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியதை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணி விரைவில் விடுவிக்கப்படும் என கூறியமை தொடர்பான தகவலை, கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் நேரில் சென்று மாவட்ட அரசாங்க...
கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், இன்று 15 ஆவது நாளாகவும் அம் மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட காணிகளை தம்மிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளளது....
தமது காணிகளிலுள்ள அடையாளங்களை இராணுவத்தினர் அழிப்பதாக, பிலவுக்குடியிருப்பு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமது அடையாளங்களை இராணுவத்தினரல் அழிப்பதாக குற்றம சுமத்தியுள்ள இம்மக்கள் அது குறித்து தெரிவிக்கையில், 'எமது காணிகளிலுள்ள பயன்தருமரங்களை இராணுவத்தினர் அழித்து...
கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின்...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்கள் இன்று முதல் 48 மணித்தியால சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலின்போது, தாம் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் மாவட்ட செயலாளரிடமிருந்து பதில் கிடைக்கவில்லையென்றும் பிரதேச செயலாளர்...
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 14ஆவது நாளை எட்டியுள்ளது. மக்களது காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ முகாமை அகற்றி தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இம் மக்கள் ஆரம்பித்த போராட்டம், இரவு...
Loading posts...
All posts loaded
No more posts