- Friday
- February 21st, 2025

யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250...

தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த...

வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் (12.02.2024) அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான...

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது...

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த...

வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி வெள்ளிக்கிழமை (3) உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதோடு , மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கும் தேவையான உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து...

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பலாலியில் உள்ள தங்கள் பாரம்பரிய நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்குமாறு கோருவதற்காகவே அவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஆவலாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை நாங்கள்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் 20 பேர்ச் காணித் துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணியில்லை என்பது அடையாளம்...

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்திற்கென 1,375 வீடுகளை அமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ஒரு மில்லியன் பெறுமதியான வீடு வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தெரிவு நடைபெற்றுவருகிறது. 5 மாவட்ட செயலகங்களில் இருந்து 550 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல்...

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், நேற்றையதினம் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு,...

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் மீதமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர்” இவ்வாறும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பலாலி படைத் தலைமையகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இராணுவக் கட்டளைத்...

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநரிற்கு அவர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை...

யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் அடிப்படையில் யாழ்....

காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். சில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணியை வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை வழங்குவது தொடர்பாக கவனம்...

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் பணம் தேவைப்படுகிறது என இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்தப் பணத்தை அரசாங்கம் கொடுக்கவில்லை என பிரதமர் முன்னிலையில் இராணுவம் கூறியுள்ளது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக...

வலி.வடக்கில் கடற்படை முகாமுக்காக 252 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடுகள் நாளை 22ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாநாயக்க ஆகியோரால் இன்று காலை தனக்கு அறிவிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா தெரிவித்தார். 252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை...

வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி காணி விடுவிப்பதற்கான ஆவணத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வழங்கி...

வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களைக் குறிக்கும் சிற்பங்கள் பல காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன. எனினும் குறித்த காணிகள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று காலையே...

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 39 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த காணிகளே மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் விடுவிப்புக்கான அறிவிப்பினை நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார். அதன்படி நேற்று வலி.வடக்கு,...

யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) தமது காணிகளுக்குச் செல்ல வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். வடக்கில் 1000 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை நேற்றையதினம் மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால...

All posts loaded
No more posts