இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்!

யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக...

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு!

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல்,...
Ad Widget

யாழ். பல்கலையில் மோதல்!! இரு மாணவர்கள் காயம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது....

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை மக்கள் பெரும் அசௌகரியம்!!

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (9) முற்பகல் 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். திடீர் மின் தடையால் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகமும் தடைபட்டதோடு, வீதி சமிஞ்ஞைகளும் செயலிழந்தன. கொழும்பிலுள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் விநியோகத் தடை...

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி!!

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் இதுவரை 56 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை பணியகம் போன்றவற்றிற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி உக்ரைனிற்கு...

‘GovPay’ வசதி இன்று முதல் ஆரம்பம்!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து...

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை தெரிவு செய்துவிட்டார்கள்!! – இராமநாதன் அச்சுனா

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை. யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர் தான் சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கலாம் 44 ஆயிரம் போராளிகள் உயிர் கொடுத்த எங்களின் தேசியத்தலைவரின்...

யாழில் பழக்கடை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்!

யாழ்.மத்திய பேருந்து நிலைய வழாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை இன்றையதினம் (06) முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகள் இந்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம்...

வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி!!

அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின்...

பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் திட்டம் தொடர்பில் அறிவிப்பு!

35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 30000 அல்லது 35000 என்று கூறமுடியாது என்றும் வழமை போன்று அங்கு பட்டதாரிகள் குழுவிருப்பதால் ஒரு...

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் – யாழ்.ஊடக அமையம்

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது திருட்டு மௌனம் காத்திருந்த ஆட்சியாளர்கள் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...

யாழ் போதனை வைத்தியசாலைக்கு புதிய கட்டில்கள் அன்பளிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையின் புதிதாக திறக்கப்பட்ட மகப்பேற்று விடுதிக்கு 14 புதிய நவீன கட்டில்கள் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது. சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று, மேற்படி கட்டில்களை 18 ஆம் இலக்க மகப்பேற்று விடுதியில் வைபவரீதியாக கையளித்தார். போதனா வைத்தியசாலைக்கு மேலும் புதிய கட்டில்கள்...

யாழ்போதனாவின் ஆளணியை அதிகரித்து தர ஆளுநரிடம் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதன்கிழமை (5) விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார். அதன் போது பணிப்பாளர், வைத்தியசாலையின்...

யாழ் பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டது

நேற்றய தினம் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது மன்னிப்பின் கீழ் 17 கைதிகள் விடுதலை!!

சுதந்திர தினமான நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். 77 ஆவது சுதந்திர தினமான நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்...

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழில் பட்டதாரி இளைஞன் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செவ்வாய்க்கிழமை (4) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை...

கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்று உத்தரவு!!

கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணையில் திடீரென கடந்த சனிக்கிழமை (01) ம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை (02)ம் தொடர்ச்சியாக 50க்கும்...

யாழில் அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு!!

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் சிறு...

நாட்டில் சிக்கன்குனியா பரவும் அபாயம் தீவிரம்!

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, அண்மையில் குழந்தைகளும் முதியவர்களும் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, உடலில் கருமைத் தன்மை ஏற்படுதல், குறிப்பாக மூக்கைச் சுற்றி நிறமாற்றம் போன்றவை இந்த...

ஜனாதிபதி அநுர யாழ் செல்ல விமானத்தை பயன்படுத்தவில்லை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு இலங்கை விமானப் படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி 31ஆம் திகதி ஜனாதிபதி யாழிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கை விமானப் படையின் 03 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பில்...
Loading posts...

All posts loaded

No more posts